இளைஞர்கள் என்னதான் நினைக்கிறார்கள் என்பதை சொல்லும் நூல்! - மொழிபெயர்ப்பு நேர்காணல்
இளைஞர்களின் எண்ணம், சிந்தனை பற்றிய நூல் |
விவான் மார்வாகா
எழுத்தாளர்
மில்லினிய இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்களின் சிந்தனை அரசியல், திருமணம், சமூக வலைத்தளம் ஆகியவற்றில் எப்படி இருக்கிறது என விவான் ஆய்வு செய்திருக்கிறார். அவரது நூல் வாட் மில்லினியல் வான்ட். இதைப்பற்றி பேசினோம்.
சமூக வலைத்தளங்கள் இளைஞர்களை மாற்றியுள்ளது என்கிறீர்களா?
சமூக வலைத்தளங்கள் இளைஞர்கள் அவர்களுக்கு ஏற்றபடி தங்களை வெளிக்காட்டுவதற்கான கருவிகளை வழங்கியுள்ளது. இதன் விளைவாக இணையத்தில் அவர்கள் எப்படி வெளிப்பட வேண்டும், எழுத்துகள் எப்படி இருக்கவேண்டும், கருத்தியல் என கவனமாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கருத்தை எந்த விதமான அலங்காரமும் இல்லாமல் பேசுகிறார்கள். ஆனால் இதுபோன்ற வாய்ப்பு, சிறுபான்மையினருக்கும் பெண்களுக்கும் கிடைப்பதில்லை.
விவான் மார்வாகா |
இந்த இளைஞர்கள் எந்த முறையில் வாக்குகளை அளிக்கிறார்கள்?
உலகம் மிக சிக்கலான நிலையில் உள்ளபோது பிறந்தவர்கள் மில்லினிய தலைமுறை. அவர்கள் பிறக்கும்போது உலக மயமாக்கல் நடந்திருந்தது. நிறைய வேலைவாய்ப்புகள் இருந்தாலும் கூட தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது கடினமாக இருந்தது. மில்லினிய இளைஞர்களைப் பொறுத்தவரை உறுதியான முடிவுகளை எடுப்பவர்களுக்கே வாக்குகளை அளிக்கிறார்கள். இதனை மோடி மட்டும் வைத்து கூறமுடியாது. பிராந்திய அளவில் மம்தா பானர்ஜி, அர்விந்த் கேஜ்ரிவால், ஜெகன் ரெட்டி ஆகியோரையும் இளைஞர்கள் விரும்புகிறார்கள். இவர்கள் எல்லோருக்குமே பொதுவான விஷயம், மக்களுக்கு உறுதியான முடிவுகளை எடுத்து அதில் மாறாமல் இருப்பதுதான். மோடி போன்ற தலைவர்கள் திடமான முடிவெடுத்து அதில் நினைத்த முடிவுகள் கிடைக்காதபோதும் இப்படித்தான் அவர்களின் சிந்தனை உள்ளது.
இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விஷயங்கள் என்னென்ன?
நிலையான ஒரு தன்மையை இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள். அரசியல் சமநிலை, பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணம், உறுதியான அரசு வேலை ஆகியவற்றை உறுதியாக நம்புகிறார்கள். 2019ஆம் ஆண்டே கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை பிரச்னை இருந்தது. இந்தப் பிரச்னைகளுடன் இந்தியா பல்வேறு கட்ட வளர்ச்சியை அடைந்து வந்தது. இதனை இளைஞர்கள் ஏற்றுக்கொண்டு காலத்திற்கேற்ப ஆட்டோமேஷன் நுட்பத்தைக் கூட ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள்.
இந்த நூலுக்காக நீங்கள் என்னென்ன ஆய்வுகளை செய்தீர்கள்?
பதிமூன்று மாநிலங்களில் உள்ள நகரங்களில் ஆய்வுகளை செய்து 900க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பொருளாதாரம், திருமணம், செக்ஸ், அரசியல் பற்றிய கருத்துக்களைக் கேட்டேன். 6 ஆயிரம் பேர்களுக்கும் அதிகமானோரிடம் பெற்ற கருத்துகளை தகவல்தளமாக தொகுத்துள்ளேன். இது இளைஞர்களின் சுயசரிதையாக இருக்கும்.
டைம்ஸ் ஆப் இந்தியா
கேடகி தேசாய்
கருத்துகள்
கருத்துரையிடுக