ராஜஸ்தான் அரசு பள்ளியை டிஜிட்டல் மயமாக்கும் ஜினெந்தர் சோனி! - மாற்றம் பெறும் அரசுப்பள்ளிகள்

 Mission Gyan (@missiongyan1) / Twitter

2019 ஆம் ஆண்டு ஜினெந்தர் சோனி தன்னுடைய வேலையைக் கைவிட்டார். வேலையை விடுவது பெரிய விஷயமல்ல. அதில் அவர் மாதம் ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதித்துக்கொண்டிருந்தார். ஆன்லைன் பயிற்சி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இப்போது அதே மாதிரியை பின்பற்றி ராஜஸ்தானில் ஜூன்க்ஹூனு எனும் மாவட்டத்தில் அரசு பள்ளியை சிறப்பாக்கியிருக்கிறார். 

பொதுமுடக்க காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை  வழங்க ராஜஸ்தான் அரசு யோசித்தது. அதில்தான் ஜினெந்தர் சோனி உள்ளே வந்தார். 

பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள், தனது சொந்த நிதி என எட்டு லட்சம் ரூபாயை செலவழித்து  40 ஆசிரியர்களை வைத்து வீடியோக்களை உருவாக்கி இருக்கிறார். வீடியோக்கள் மேல்நிலை வகுப்புகளை படிக்கும் மாணவர்களுக்கானவை. 

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜினெந்தரின் செயல்பாடுகளைப் பார்த்து ஆன்லைனில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளார். இப்போது இப்படி பயிற்சி எடுக்க இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான ரெஸ்யூம் கூட வீடியோக்கள்தான். 

முதலில் வீடியோக்களை உருவாக்கும் பணி ஆறிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை தொடங்கியது. இவை பயிற்றுமொழியாக இந்தியைக் கொண்டிருந்தது. பிறகு, ஆங்கிலத்தில் 3 முதல் 8 என மேம்பட்டது. பிற வகுப்புகளுக்கு பாடத்திட்டங்களை இறுதி செய்து அதனை வீடியோவாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.  இதில் சமஸ்கிருதம், சிந்தி மொழி கூட உண்டு. 

ஜினெந்தர் சோனி தனது வீடியோக்களை பார்க்கும் வசதி கொண்டதாக மிஷன் கியான் என்ற ஆப்பை உருவாக்கியுள்ளார். முழுப்பாடங்களையும் ஹார்ட் டிஸ்கில் கூட வாங்கிக்கொள்ள முடியும். இதனை ஜினெந்தர் சோனியின் நிறுவனத்தில்தான் பெறலாம். இந்த வகையில் 3.5 மில்லியன் மாணவர்களுக்கு வீடியோக்கள் சென்று அடைந்துள்ளன. இலக்கு 8 மில்லியன் மாணவர்களாக உள்ளது. 

வீடியோ தயாரிப்பிற்கு ஆசிரியர்களை அணுகியபோது, கேமராக்களைப் பார்த்து அவர்கள் தயங்கினர். எனவே அவர்கள் வகுப்புகளை நடத்துவதற்கு தயாரித்த நோட்ஸ்களை ஸ்லைடுகளாக வைத்து தைரியப்படுத்தியிருக்கிறார் சோனி.  முதலில் அவர்களை அணுகியபோது கேமராவுக்கு தயங்கினர்.இப்போது வகுப்பு போலவே சுற்றியும் சூழல்களை உருவாக்கியபிறகு அவர்கள் பாடங்களை எளிதாக நடத்தி மாணவர்கள் கேட்க நினைக்கும் கேள்விகளுக்கும் பதில்களை தயாரித்து விடுகின்றனர். கொஞ்சம் ஊக்கப்படுத்த வேண்டியிருந்தது. இதனால் இவர்கள் தனிப்பட்ட பயிற்சிக்கும் தயாராகவே இருக்கிறார்கள். பல்வேறு அரசு பள்ளிகளிலும் வீடியோ பாடங்களை படிக்க எல்இடி திரைகளை உருவாக்கியிருக்கிறார்கள். மாநிலம் முழுக்க ஸ்மார்ட் பள்ளிகளை அதிகரிக்க அரசு முயன்று வருகிறது. மாநில ரசு வீடியோ பாடங்களை மாணவர்களுக்கு வழங்க 20 டிபி இடத்தை வழங்கியுள்ளது. சோனி, வாரம்தோறும் குவிஸ்களை 2.2 மில்லியன் மாணவர்களுக்கு நடத்தி வருகிறார். 

இந்தியா டுடே 

 ரோகித் பாரிகர்கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?