உணர்ச்சியை விட செயல்தான் முக்கியம்! டாக்டர் 2021
டாக்டர்
நெல்சன்
அனிருத்
குழந்தைகளை கடத்தி அவர்கள் வயதுக்கு வந்ததும் அவர்களை விபச்சாரத்திற்கு விற்கும் கும்பலைப்பற்றிய கதை. வருண் பெண் பார்க்கப் போகும் வீட்டில் ஒரு சிறுமி காணாமல் போகிறாள். அவளை வருண் கண்டுபிடித்து தர உதவுகிறான். இதை எப்படி செய்தார்கள் என்பதுதான் கதை.
ஒருவருக்கு ஏற்படும் பிரச்னை என்பதை மூன்றாவது நபர் பார்க்கும்போது அதில் அவர் பெரிதாக தன்னை இணைத்துக்கொள்ள மாட்டார். அந்தப் பிரச்னையைப் பொறுத்தவரை அதில் தனக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று பார்ப்பதே இன்று உலக வழக்கமாகியிருக்கிறது. இந்த இயல்பை புரிந்துகொண்டால் மட்டுமே படத்தை ரசிக்கமுடியும். இல்லையென்றால் பிளாக் அண்ட் ஒயிட் டிவியில் படம் பார்ப்பது போலவே இருக்கும்.
சிறுமிகளை விபச்சாரத்தில் தள்ளும் பிரச்னையை படம் பேசுகிறது. நிறைய ஆங்கிலப் படங்கள் கூட அதனை வெகு தீவிரமாக பேசியுள்ளன. அப்படியில்லாமல் அதனை அவல நகைச்சுவையாக மாற்றியதுதான் படத்தின் வெற்றி. படத்தில் நிறைய இடங்களில் வசனங்களுக்கு பதில் உடல்மொழியே நகைச்சுவைக்கு போதுமானதாக இருக்கிறது.
எஸ்கேவின் அனைத்து பிளஸ்களும் படத்தில் இருந்து எடுத்துவிட்டால் மீதி என்ன இருக்கும்? அதுதான் படத்தில் இருக்கிறது. அவருக்கு பதில் கிங்ஸ்லி, யோகிபாபு, பிற ரௌடிகள் என அனைவருமே காமெடிக்கு கேரண்டி கொடுக்கிறார்கள்.
காமெடிதான் முக்கியம் என நினைத்து எடுத்திருப்பதால், இறுதிக்காட்சி பற்றி பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை. சில காட்சிகளில் சிரிப்பதா, எமோஷனலாக இருப்பதாக டியூவல் மோட் நமக்கும் வந்துவிடுகிறது. படம் முழுக்கவே அப்படித்தான்.
உணர்ச்சி முக்கியமா, செயல் முக்கியமா என்றால் நெல்சன் செயல்தான் என வருணைக் கைகாட்டிவிடுகிறார். இறுதியில் அதை நாம் ஏற்றுக்கொண்டு விடுகிறோம். படம் மூன்றாவது நபர்களின் பார்வையில் நகர்வதால் அதனை நகைச்சுவையாக பார்க்கிறோம். சிலர் பூனைக்கண்ணால் படத்தைப் பார்த்துவிட்டு இதெல்லாம் நியாயமா என்று கேட்கிறார்கள். அவர்கள் படத்தில் இயல்பை புரிந்துகொள்ளாததுதான் அதற்கு காரணம். உங்களை அறியாமல் நீங்கள் சிரிப்பதுதான் டாக்டரின் வெற்றி. தியேட்டர்கள் ஹவுஸ்புல்லாக இருக்கவும் காரணம்.
காமெடி டாக்டர்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக