இடுகைகள்

பிட்ஸ்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லிபர்டி சிலை யாருடைய பரிசு?

படம்
பிட்ஸ்! அமெரிக்காவிலுள்ள சுதந்திரதேவி சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்க அரசுக்கு வழங்கியது. முதலில் இச்சிலையை எகிப்து நாட்டிற்கு அளிப்பதற்காகவே உருவாக்கினர். பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்திலுள்ள வனவிலங்கு பூங்கா விலங்குகளுக்கு உணவு தர விரும்பினால் முதலில் காசு கொடுத்து டிக்கெட் வாங்கவேண்டும். பின்னர் விலங்குகளுக்கு உணவான பூனை அல்லது நாயை அழைத்தபடி உள்ளே செல்ல தடையேதுமில்லை.  ஸ்பானிஷ் சொல் ‘esposas’ என்பதற்கு மனைவிகள், கைவிலங்குகள் என இரண்டு அர்த்தங்கள் உண்டு.  1991 ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் வெப்கேமரா கண்டறியப்பட்டது. காபி கப்பின் அளவை சரிபார்க்கவே முதலில் பயன்படுத்தப்பட்டது.  ஆங்கிலத்தில் மூன்று Y எழுத்து வரும் சொல் எது? ‘Syzygy’. முத்தமிடுவது குறித்த அறிவியல் துறைக்கு philematology என்று பெயர்.     

சமர்த்து திருடர்!

படம்
சமர்த்து திருடர்! அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலுள்ள ஹோட்டலில் மர்மக்குரல் கேட்கிறது என புகார். பாய்ந்து சென்ற போலீசார் சீன உணவகத்தின் புகைபோக்கியில் மாட்டி இருநாட்களாக உதவிகேட்டு தவித்த திருடரை குமட்டில் குத்தி மீட்டனர். “ஹோட்டலிலுள்ள செம்பு வயர்களை திருடி விற்க சென்று மாட்டியிருக்கலாம். சிகிச்சை முடிந்ததும் திருடரை தீர விசாரிப்போம்” என்கிறது அலமெடா நகர காவல்துறை. ஓசி பயணம்! வாஷிங்டன் டி.சியின் பென்னிங்டன் சாலையில் காரில் சென்ற ரஸ்தா தாஜ் அதிர்ந்துபோனார். மெட்ரோ பஸ்ஸின் பின்புறம் இளைஞர் ஒருவர் தொங்கியபடி அபாய சவாரி செய்துகொண்டிருந்தார். உடனே அதனை க்ளிக்கி இணையத்தில் பகிர்ந்தார். “இதுபோன்ற பயணங்கள் ஏற்கத்தக்கவை அல்ல; இளைஞர் உயிர்பிழைத்துள்ளது ஆச்சரியமான விஷயம்” என பஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ரிஸ்க் எடுத்த இளைஞர் இதுபோல ஏராளமான சர்க்கஸ் சாதனைகளை முன்பே செய்தவராம். சாப்பாட்டில் முத்து! அமெரிக்காவின் நியூஜெர்சியில் ரிக் அன்டோஸ், உணவகத்தில் நண்பர் சகிதமாக சிப்பி உணவை ஆர்டர் கொடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். திடீரென வாயில் கடக் என சப்தமெழ, சா

எறும்புகளை லபக்கும் எறும்பு தின்னி!

படம்
எறும்புதின்னிகள் தோராயமாக 2 அடி நீளமுள்ள நாக்கை இரைதேட பயன்படுத்துகிறது. எறும்பு புற்றில் நாக்கை விட்டு துழாவினால் ஒரேமுறையில் 20 ஆயிரம் எறும்புகளை லம்பாக பிடித்து தின்னும். சூழலுக்கேற்ப நிறம் மாற்றும் பச்சோந்தி, அதனை சுற்றுப்புறத்தின் தட்பவெப்பத்திற்கேற்ப மாற்றுகிறது. சிவப்பு, ஆரஞ்சு, நீலம் ஆகிய நிறங்களை பிரதிபலிக்கிறது பச்சோந்தி. தோலினை நிறம் மாற்றும் இம்முறையில் தன் இனத்தினை தொடர்புகொள்கிற விஷயமும் உண்டு. சிறிய பாம்பு கடித்தாலும் உடனே மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது முக்கியம். ஏனெனில் பாம்பு சிறியதானாலும் விஷம் வயதுமுதிர்ந்த பாம்பிலும், சிறிய பாம்பிலும் ஒன்றேதான். நீரில் நீந்த பூனைகளை விட நாய்களே ஏற்றவை. ஐரிஷ் வாட்டர் ஸ்பேனியல், டக் டோலிங் ரெட்ரீவர் ஆகிய நாய்கள் நீச்சலில் சாம்பியன்கள். பூனைகளின் முடி நீர் பட்டால் விரைவில் காயாததும், கால்கள் நீரில் நீந்த ஏற்றபடி இல்லாததும் முக்கிய காரணம். இவ்வாண்டில் நாய்களுக்கு பெருமளவு சூட்டப்பட்ட பெயர்கள் சார்லி, கோகோ, டெய்ஸி.

ஜெர்மனியர்களின் வைரஸ் எதிர்ப்பு செல்!

படம்
பிட்ஸ்! 1863 ஆம் ஆண்டிலேயே வெனிசுலா நாட்டில் குற்றங்களுக்கு மரணதண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. உலகில் நடந்த பல்வேறு ஆய்வுகளில் அடிப்படையில் மக்களால் அதிகம் விரும்பப்படும் நிறம் நீலம் என தெரியவந்துள்ளது. உலகை கொள்ளை கொண்ட கார்ட்டூன் கதாபாத்திரமான டிஸ்னி மிக்கி மௌஸின் அக்கா பெயர், அமேலியா ஃபீல்டுமௌஸ். ஸ்வீடன், நார்வே ஆகிய நாடுகளில் பனிரெண்டு வயதுக்கு குறைந்த குழந்தைகளை விளம்பரத்தில் நடிக்கவைப்பது சட்டப்படி குற்றம். நூறு ஜெர்மனியர்களில் ஒருவருக்கு எய்ட்ஸ் நோய்க்கு எதிரான மரபணுரீதியான பாதுகாப்பு உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. இந்த மரபணுவுக்கு CCR5-delta 32 என்று பெயர். 1989 ஆம் ஆண்டு டிச.17 தேதியிலிருந்து ஒளிபரப்பாகும் தி சிம்ப்சன்ஸ் அனிமேஷன் கதையில் கதாபாத்திரங்களுக்கு நான்கு விரல்கள் மட்டுமே உண்டு. தி காட் என்ற கேரக்டருக்கு மட்டும் ஐந்து விரல்கள் இருந்தது. இன்றுவரை 644 அத்தியாயங்கள் ஃபாக்ஸ் டிவியில் ஒளிபரப்பாகியுள்ள ஹிட் அனிமேஷன் கதை இது.  

வெள்ளி பிட்ஸ்!

படம்
வெள்ளி தகவல்கள்! வெள்ளிப் பொருட்களை மனிதர்கள் கி.மு 3 ஆயிரம் ஆண்டுகளிலிருந்து பயன்படுத்தி வருகிறார்கள் என்கிறது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் அறிக்கை. துருக்கி, சீனா, கொரியா, ஜப்பான், தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பயன்பாட்டிலிருந்ததை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெப்பம் மற்றும் மின்சாரத்தை கடத்துவதில் வெள்ளி கில்லி என்பதால் பல்வேறு மின்சார்ந்த பொருட்களில் இதன் பயன்பாடு முன்னர் அதிகம். பின்னர் இதனை விலை குறைந்த திறன் மிக்க கடத்தியான செம்பு முந்தியது. 1720 ஆம் ஆண்டு ஜெர்மன் இயற்பியலாளர் ஜோகன் ஹெய்ன்ரிச், வெள்ளியைப் பயன்படுத்தி முதன்முதலில் புகைப்படங்களை எடுத்தார். 1940 ஆம் ஆண்டிலிருந்து வெள்ளி அறுவை சிகிச்சை புண்களை ஆற்றும் மருத்துவசிகிச்சையில்(நுண்ணுயிரிகளுக்கு எதிராக) பயன்பட்டு வந்துள்ளது. சில்வர் அயோடை மேகங்களில் தெளித்து பஞ்சம், வறட்சியான நிலப்பகுதிகளில் மழையை ஏற்படுத்தலாம் என்பதை அமெரிக்க தட்பவெப்ப ஆராய்ச்சியாளர் பெர்னார்ட் வானேகர்ட் 1940 ஆம் ஆண்டு கண்டறிந்தார்.   

கரடியோடு பாக்சிங்!

படம்
பிட்ஸ்! அதிவேக சாதனை! சீனாவின் ஜியாமென் நகரைச் சேர்ந்த இளைஞர் க்யூ ஜியான்யூ, மூன்று ரூபிக் க்யூப்களை ஒன்றுசேர்ந்து(1 நிமிடம் 39 நொடிகள்) கின்னஸ் சாதனை செய்திருக்கிறார். “பல லட்சம் முறை பிராக்டிஸ் செய்து சில பார்முலாக்களின் மூலம் மூன்று ரூபிக் க்யூப்களை ஒன்றிணைத்துள்ளேன்” என்கிறார் சாதனை இளைஞர் ஜியான்யூ. பட்ஜெட் வண்டி! இந்தோனேஷியாவைச் சேர்ந்த குடும்பஸ்தர், இருவர் அமர்ந்து செல்லும் மோட்டார் சைக்கிளை அவரின் குடும்பமே(4பேர்) அமரும்படி மாற்றி வியக்க வைத்திருக்கிறார். “மழை, வெயில் தூசு, தும்பு பிரச்னை இனி இல்லை” என கூறுபவர், பைக்கை ரிக்‌ஷா போல மாற்றி குடும்பத்தினரை ஏற்றி ஜாலி சவாரி செய்து வருகிறார். கரடிக்கு குத்து! அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த சோனி பம்ரேவின் வீட்டுக்கு பெண்கரடி தன் இருகுட்டிகளுடன் வந்தது. ஷாக்காகி மிரண்ட சோனியை பார்த்து இரண்டு குட்டிகள் ஓடினாலும், பெண்கரடி சண்டையிட்டு கடிக்க முயன்றது. கரடியின் மூக்கிலேயே குத்திய தாத்தா சோனியின் நாக்அவுட் பன்ச்சுகளை தாங்கமுடியாத பெண்கரடி பின்வாங்கி ஒடிவிட்டது. மருத்துவமனையில் காயங்களுக்கு

விலைமாதுக்களுக்கு யூனிஃபார்ம்!

படம்
விநோத விதிகள்! ஃபின்லாந்தில் வாடகை டாக்சிகளில் செல்லும் பாடல்களை கேட்பது சட்டப்படி குற்றம். 2002 ஆம் ஆண்டு காப்பிரைட் சட்டப்படி பாடல்களை கேட்டால் 14 யூரோ அபராதமுண்டு. டென்மார்க்கில் உங்கள் இஷ்டப்படி பெயர் வைக்க அனுமதியில்லை. 18 ஆயிரம் பெண்கள் பெயர்கள், 15 ஆயிரம் ஆண்கள் பெயர்கள் கொண்ட அரசின் லிஸ்ட்டிலிருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். நார்வேயில் பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு வைத்த முதல் பெயரை மாற்ற, பதினெட்டு வயதாவது அவசியம்.   ஸ்பெயின் நாட்டில் விலைமாதுக்கள் அதிகளவில் விபத்துகளை ஏற்படுத்துவதால் அவர்கள் அணிய தனி ஆடையை அரசு உருவாக்கி வழங்கியுள்ளது. பிரான்சில் இறந்தவர்களை திருமணம் செய்து கொள்ள அரசு அனுமதி உண்டு. 1872 ஆம் ஆண்டு இங்கிலாந்து சட்டப்படி குடித்துவிட்டு குதிரை, ரயில், பசு ஆகியவற்றின் மீது ஏறுவது தண்டனைக்குரிய குற்றம். இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அரசிடம் அனுமதி பெறாமல் சால்மன் மீன்களை பிடிப்பது 1986 ஆம் ஆண்டு சட்டப்படி குற்றம்.     

ஜப்பான் மன்னிப்பு கேட்டுக்கறேன் மக்களே!

படம்
பிட்ஸ்! ஜப்பான் கலாசாரத்தில் ஒருவரிடம் மன்னிப்பு கேட்க 20 வித முறைகள் உண்டு. கனவுகளின் கடவுளான மார்பியஸின் நினைவாக போதைப்பொருளுக்கு மார்பின் என பெயர் வைக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டு பின்லாந்தில் மொபைல் போன்களை தூக்கியெறிவது தனிபோட்டியாகவே அங்கீகாரம் பெற்றது. தூக்கிய எறியும் தூரம், அதற்கான டெக்னிக் ஆகியவற்றில் ஜெயித்தால் சாம்பியன் பட்டம் உறுதி. நாம் பயன்படுத்தும் கரன்சி தாள்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பாக்டீரியாக்கள் உண்டு. உணவுக்கு பதிலாக அதிலுள்ள சத்துக்களை உள்ளடக்கிய பொருட்களுக்கு Soylent என்று பெயர். பண்டைய ரோம நாகரிகத்தில் Saturnalia என்ற தினம் கொண்டாடப்பட்டது. இத்தினத்தில் அடிமைகள், அவர்களின் முதலாளிகளுக்கு நிகராக மதிக்கப்பட்டு அவர்கள் அணியும் ஆடைகளை அணிவது வழக்கம்.

அட்டைப்பூச்சி காலநிலையைக் கணிக்குமா?

படம்
பிட்ஸ்! பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இங்கிலாந்து அறுவைசிகிச்சை மருத்துவர் ஜார்ஜ் மேரிவெதர், அட்டைப்பூச்சி காலநிலையை கணிக்கும் என நம்பினார். 1851 ஆம் ஆண்டு இதற்கான முயற்சியில் தோல்வியைத் தழுவினார். Unfriend   ஆஎன்ற ஆங்கில வினைச்சொல் 1659 ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ளது. லீகோ என்ற பெயர் டேனிஷ் மொழிச்சொல்லாக leg godt என்பதிலிருந்து வந்தது. பொருள், நன்கு விளையாடு. எழுத்தாளர் பேட்ரிசியா ஹைஸ்மித் 300 நத்தை பெட் விலங்காக வளர்த்து வருகிறார். பார்ட்டிக்கு போனாலும் அவற்றை தன் பேக்கில் பார்சல் செய்து கொண்டு செல்வாராம். கத்தரிக்காய்கள் கொட்டையில்லாத பெர்ரி வகையைச் சேர்ந்தவை. 1916 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 8,851 கி.மீ தூரத்தை இரண்டு மோட்டார்சைக்கிள்களில் சுற்றிவந்த சாதனையை வான் புரேன் சகோதரிகள் செய்தனர்.  

வின்சென்ட் வான்காவின் கடைசி வார்த்தை!

படம்
பிட்ஸ்! கொரில்லா என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியில் முடிகளைக் கொண்ட பழங்குடிப்பெண் என்று அர்த்தம். பிரபல ஓவியர் வின்சென்ட் வான்காவின்(1853-1890 ) கடைசி வார்த்தை 'La tristesse durera toujours', வாழ்நாள் முழுவதும் துயரம் நீடிக்கும் என்பதே இதன் அர்த்தம். குழந்தைகள் கலைப்பொருட்களை செய்ய உதவும் play-doh என்பதை அமெரிக்காவின் ஓஹியோவிலுள்ள சின்சினாட்டி நகரைச் சேர்ந்த பிரையன் ஜோசப் மெக்விக்கர், பில் ரோடன்பாக் ஆகியோர் கண்டுபிடித்தனர். இடதுகை பழக்கம் கொண்டவர்களின் தினமாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி, 1996 ஆம் ஆண்டிலிருந்து உலகமெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கான்டாக்ட் லென்ஸைக் கண்டுபிடித்தவர், ஜெர்மனியைச் சேர்ந்த அடால்ஃப் காஸ்டன் யூஜென் ஃபிக்(1852-1937). பாப்கார்ன் சாப்பிடும்போது அதன் பிசிறுகள் பற்களில் மாட்டிக்கொள்ள அந்த கணம் கான்டாக்ட் லென்ஸ் ஐடியா பிறந்ததாம்.      

ஜோக் எழுத்தாளர் நாவலாசிரியராக புகழ்பெற்றது எப்படி?

படம்
பிட்ஸ்! எழுத்தாளர் ஜேன் ஆஸ்டின் தனது முதல் நாவலை ஒரு பெண்ணால் எழுதப்பட்டது என எழுதி அச்சிட்டார். 1974 ஆம் ஆண்டு Journal of Applied Behavior Analysis என்ற இதழில் எழுத்தாளர்களுக்கு ஏற்படும் எழுத்து தடுமாற்றம் குறித்த கட்டுரை வெளியானது. ஆனால் தலைப்பு தவிர்த்து அதிலும் வெற்றிடமே இருந்தது. க்யூப் வடிவ ஆபீஸ் தனது வடிவமைப்புக்காக அப்பெயரை பெறவில்லை. அதன் மூலமான லத்தீன் வார்த்தை Cubiculam என்பதற்கு படுக்கை அறை என்று பெயர். வெள்ளிக்கிழமை 13 ஆம் தேதியை நினைத்து பயப்படுவதற்கு Paraskavedekatriaphobia  என்று பெயர். கூஸ்பம்ப்ஸ் நாவலை எழுதிய எழுத்தாளர் ஆர்.எல்.ஸ்டெய்ன், அதற்கு முன்பு பசூகா எனும் சூயிங்கம் நிறுவனத்திற்கு ஜோக்குகளை எழுதி வந்தார். சிறிய எழுத்தாக i எழுதும்போது அதன் மேலே வைக்கும் சிறிய புள்ளிக்கு டிட்டில்(tittle) என்று பெயர்.      

லாலிபாப் ஓவியர் தெரியுமா?

படம்
பிட்ஸ்! 1940 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதை வரலாற்றில் முதல்முறையாக ஆப்பிரிக்க அமெரிக்க நடிகையான ஹேட்டி மெக்டேனியல்(1895-1952) பெற்றார். மனதின் குரல் உங்களுக்கு கேட்பது போல தோன்றுகிறதா? அதற்கு உங்களின் குரல்வளையிலுள்ள சிறுதசைகளின் அசைவும்(larynx) காரணம். டச்சு – பெல்ஜியம் நாட்டிற்கிடையேயுள்ள எல்லைப்பகுதி அங்குள்ள வீடுகள், கஃபே ஆகியவற்றின் குறுக்கேயும் செல்கிறது. மெக்சிகோவில் ஃபெஸ் நகரில் இயங்கும் பல்கலைக்கழக நூலகம் al-Qarawiyyin( கி.மு. 859), தொன்மையான நூலகங்களில் ஒன்று.   சிபா சப்ஸ் என்ற ஸ்பெயினைச் சேர்ந்த லாலிபாப் கம்பெனியின் லோகோவை வரைந்தவர் புகழ்பெற்ற ஓவியர் சால்வடோர் டாலி.   

மிளகாய்க்கு அங்கீகாரம்!

படம்
பிட்ஸ்! மிளகாய் சேவல்! சீனாவின் லினி நகரில் 20 அடியில் பிரமாண்ட சேவலை தனியார் ரிசார்ட் உருவாக்கியுள்ளது. பச்சை மற்றும் சிவப்பு நிற மிளகாய்களைப் பயன்படுத்தி சேவலின் உடலும் சோளத்தின் மூலம் கால்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 200 ஆண்டுகளுக்கு மேலாக லினி நகரின் வருவாய் ஆதாரம் மிளகாய் என்பதால் அதற்கு கௌரவ அங்கீகாரமாக மிளகாய் சேவலை உருவாக்கியுள்ளனர். காரமான சேவல்! கார்ட்டூன் கஃபே! தென்கொரியாவிலுள்ள கஃபே, கறுப்பு- வெள்ளை கார்ட்டூன் போல சுவர், நாற்காலிகள், உணவுகளை வடிவமைத்து உலகளவில் ட்ரெண்டிங்காகியுள்ளது. “எங்களது உணவகத்தின் பெயரும், இன்டீரியரும் வித்தியாசமானது. கஃபேயில் சாப்பிடுபவர்கள் அனைவரும் போட்டோ எடுக்காமல் செல்வதில்லை ” என்கிறார் கஃபே மேலாளரான ஜே.எஸ். லீ. விநோத விளம்பரம்! சிமெண்ட் கல்யாண உடை! இணையத்தில் சீனாவைச் சேர்ந்த   இளம்பெண் கல்யாண கவுன் அணிந்து நடந்து செல்லும் விநோத வீடியோ மெகா ஹிட்.   இதில் மிராக்கிள், கல்யாண கவுன், 40 சிமெண்ட் பைகளால் தைக்கப்பட்டுள்ளது என்பதே. டான் லிலியின் கண்களுக்கு சிமெண்ட் பைகளைப் பார்த்ததும் கலையார்வம் பீறிட்டதே இம்முயற

வரலாற்று பிட்ஸ்!

படம்
வரலாற்று துளிகள்! ஆய்வுத்தந்தை! பெலோபொனேசியன் போரை ஆவணப்படுத்திய கிரேக்க அறிஞர் துசைடிடெஸ்(கி.மு460-400), அறிவியல் வரலாறுகளின் தந்தை என அழைக்கப்படுகிறார். அழுத்தமான ஆராய்ச்சி தரவுகள், சாட்சிகளை பதிவு செய்த துசைடிடெஸ் தனது மெலியன் டயலாக் எனும் உலகநாடுகளுடான உறவு குறித்த தியரியும் பிரசித்தமானது. களமாடும் களிறு! பைரிக் போர்களில்(கி.மு 280-275) கிரேக்க நாடு, ரோமானிய ராணுவத்தை எதிர்க்க முதல்முறையாக பயிற்றுவிக்கப்பட்ட யானையைப் பயன்படுத்தியது. கி.மு 331 இல் பெர்சியர்கள், மகத மன்னர் நந்தா, கங்காரிதாய் ஆகியோர் 6 ஆயிரம் வரையிலான போர்யானைகளை போரில் கிரேக்க மன்னர்   அலெக்ஸாண்டருக்கு எதிராக பயன்படுத்தினர். முழுமையடையாத ஆண்! தத்துவவியலாளர் அரிஸ்டாட்டில், பெண்களை முழுமையடையாத ஆண் என கருதினார். அன்று கிரேக்கத்தில் பெண் ஆணுக்கு சமமில்லாத தாழ்வானவர்களாக கருதப்பட்டனர். அலெக்ஸாண்டரி ன் பிரதி! நாம் இன்று பார்க்கும் அலெக்ஸாண்டரின் சிற்பத்தை(Azara herm) உருவாக்கிய கலைஞர், லைசிபஸ். அலெக்ஸாண்டரை பிரதிபலிக்கும் இச்சிலை பிரான்சின் பாரிசில் உள்ளது.  

பெண்களை அரிஸ்டாட்டில் ஏன் வெறுத்தார்?

படம்
வரலாற்று துளிகள்! ஆய்வுத்தந்தை! பெலோபொனேசியன் போரை ஆவணப்படுத்திய கிரேக்க அறிஞர் துசைடிடெஸ்(கி.மு460-400), அறிவியல் வரலாறுகளின் தந்தை என அழைக்கப்படுகிறார். அழுத்தமான ஆராய்ச்சி தரவுகள், சாட்சிகளை பதிவு செய்த துசைடிடெஸ் தனது மெலியன் டயலாக் எனும் உலகநாடுகளுடான உறவு குறித்த தியரியும் பிரசித்தமானது. களமாடும் களிறு! பைரிக் போர்களில்(கி.மு 280-275) கிரேக்க நாடு, ரோமானிய ராணுவத்தை எதிர்க்க முதல்முறையாக பயிற்றுவிக்கப்பட்ட யானையைப் பயன்படுத்தியது. கி.மு 331 இல் பெர்சியர்கள், மகத மன்னர் நந்தா, கங்காரிதாய் ஆகியோர் 6 ஆயிரம் வரையிலான போர்யானைகளை போரில் கிரேக்க மன்னர்   அலெக்ஸாண்டருக்கு எதிராக பயன்படுத்தினர். முழுமையடையாத ஆண்! தத்துவவியலாளர் அரிஸ்டாட்டில், பெண்களை முழுமையடையாத ஆண் என கருதினார். அன்று கிரேக்கத்தில் பெண் ஆணுக்கு சமமில்லாத தாழ்வானவர்களாக கருதப்பட்டனர். அலெக்ஸாண்டரின் பிரதி! நாம் இன்று பார்க்கும் அலெக்ஸாண்டரின் சிற்பத்தை(Azara herm) உருவாக்கிய கலைஞர், லைசிபஸ். அலெக்ஸாண்டரை பிரதிபலிக்கும் இச்சிலை பிரான்சின் பாரிசில் உள்ளது.  

இலக்கணம் திருத்தும் நோய்!

படம்
பிட்ஸ்! படுக்கையில் படுத்துக்கொண்டு புத்தகங்களை படிப்பதற்கு Librocubicularist என்று பெயர். கூகுள் சர்ச் எஞ்சினில் Askew என டைப் செய்தால் கிடைக்கும் ரிசல்டுகள் சற்றே வலதுஓரம் தள்ளி கோணலாக வரும். பஜ்ஜி மடித்து கொடுத்த காகிதம் முதற்கொண்டு மாரியம்மன் கோவில் பத்திரிக்கை வரையில் இலக்கணத் திருத்தம் செய்யும் பழக்கத்திற்கு 'Grammar Pedantry Syndrome' என்று பெயர். உலகம் முழுக்க சீரியல்கொலைகாரர்களின் பொதுவான ராசிகள் சிம்மம்,கன்னி, தனுசு, மீனம். பீநட் பட்டரை கண்டறிந்த மர்சிலஸ் கில்மோர் எட்சன், அதனை உணவை மென்று தின்ன முடியாத பற்களில்லாத முதியவர்களுக்கு முதலில் பரிந்துரைத்தார். தாராள, பழமைவாதிகள் என அனைவரும் பெரும்பான்மையாக புகாரின்றி வாசிக்கும் பத்திரிகை வால்ஸ்ட்ரீட் ஜர்னல் மட்டுமே.          

ஆங்கில திரைப்படத்தை தடுத்த சீனா!

படம்
பிட்ஸ்! உலகிலேயே வாட்டிகனிலுள்ள வங்கியில் மட்டுமே லத்தீன் மொழியில் இன்றும் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும். மனிதர்களின் மூளை உறைந்து போவதற்கு Sphenopalatine ganglioneuralgia   என்று பெயர். போக்குவரத்து சிக்னல்களை மதிக்காது செல்பவர்களை Jaywalker என்று குறிப்பிடுகின்றனர். Jay என்ற சொல்லுக்கு முட்டாள் மனிதர் என்று அர்த்தம். 1931 ஆம் ஆண்டு சீனாவின் ஹூனன் பகுதியில் Alice In Wonderland ஆங்கிலத்திரைப்படம் தடை செய்யப்பட்டது. கரடி, சிங்கம் உள்ளிட்ட விலங்குகள் மனிதர்களின் மொழியைப் பேசுவது அவர்களை அவமானப்படுத்துவது போல இருக்கிறது என விநோத காரணம் சொன்னார் நகர ஆளுநர். உலகின் 95 சதவிகித விஸ்கி தயாரிப்பாளரான கென்டக்கி மாநிலத்தின் அதிகாரப்பூர்வ குடிபானம், பால். போலந்திலுள்ள வனத்தின் பைன் மரங்கள் 90 டிகிரியில் விநோதமாக வளர்ந்து பார்வையாளர்களை ஆச்சரியமூட்டுகிறது. துருக்கியின் அங்காரா நகரிலுள்ள நூலகத்தில் சிறப்பு, அங்குள்ள நூல்கள் அனைத்தும் குப்பைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்டவை என்பதுதான்.

நீருக்கடியில் செஸ் விளையாட்டு!

படம்
பிட்ஸ்! நீச்சல்குளத்தில் செஸ்! லண்டனில் செஸ் பிளேயர்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டு விளையாடி வருகின்றனர். ஏனெனில் செஸ் மேட்சுகள் நடைபெறுவது நீச்சல் குளத்தின் நீருக்கடியில். நீரில் குதித்து ஒருவர் செஸ் போர்டில் காயை நகர்த்திய பின்பே, அடுத்தவர் நீரில் குதித்து தன் காயை நகர்த்தவேண்டும் என்பதுதான் இப்போட்டியின் விதி. டவல் எடுத்துட்டு போனா குளிச்சிட்டும் வந்துடலாம் ப்ரோ! கல்யாணத்தில் ஒட்டகச்சிவிங்கி! தென் ஆப்பிரிக்காவிலுள்ள அரீனா ரிசார்ட்டில் லுக் - டிரிஸ்டன் கர்ஸாகென் தம்பதிகளின் திருமணம் சொந்தம், உறவுகளுடன் கொண்டாட்டமாக நடைபெற்றது. போட்டோகிராபர் பிஸியாக கல்யாண ஜோடியை போட்டோ எடுக்க திடீரென பின்புறமாக ஒட்டகச்சிவிங்கி நுழைந்துவிட்டது.”சிறப்பு விருந்தினராக ஒட்டகச்சிவிங்கி வந்தது மகிழ்ச்சி” என ஜாலியாக அதனுடன் ஸ்பெஷல் போட்டோக்களை எடுத்திருக்கிறது லுக்- டிரிஸ்டன் தம்பதி.   சூப்பர் சீனர்! சீனாவின் ஜீயாங் நகரில் சீனர் ஒருவர் ஸ்கூட்டரில் சைக்கிள்களை பாசிமணிபோல கோர்த்து எடுத்துச்செல்லும் வீடியோ வைரல் ஹிட்டாகியுள்ளது. பின்னே 16 சைக்கிள்களை இரும்புக்கம்பியில் கோர்த்து

எதிர்காலத்திற்கு செல்ல கார்தான் பெஸ்ட்!

படம்
பிட்ஸ்! பிறந்து முதல் ஆறு ஆண்டுகள் நிலத்தில் இறங்காமல் வாழும் பழக்கம் கொண்டது அல்பட்ராஸ்(Albatross) பறவை. துறவி லூயிஸ் என அழைக்கப்படும் பிரான்ஸ் மன்னர் ஒன்பதாம் லூயிஸ்(1224-1270) பிச்சைக்காரர்களுடன் சமபந்தி உணவு சாப்பிட்டதோடு, நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் வாதிடும் முறையை நடைமுறைப்படுத்தினார்.  எகிப்திலிருந்த தொன்மை நகரமான அலெக்ஸாண்டிரியாவிலுள்ள நூலகம் புகழ்பெற்றது. கப்பலில் புதிய நூலை கொண்டுவருபவர்கள் அதனை நூலகத்தில் நகலெடுத்துக் கொண்டு மூலநூலை அங்கு ஒப்படைத்து செல்வது வழக்கம். ஸ்மார்ட்போன் பேட்டரியை ரீசார்ஜ் செய்து ஒருநாள் முழுக்க பயன்படுத்த ஒரு துளி பெட்ரோல் போதும். பேக் டு தி ஃப்யூச்சர் படத்தில் டைம் மெஷினாக பயன்படுத்த இயக்குநர் ராபர்ட் ஸெமகிஸ், நினைத்தது, குளிர்சாதனப்பெட்டியைத்தான். ஆனால் குழந்தைகள் அதனை பயன்படுத்தினால்..? என யோசித்தவர் டைம் மெஷினை காராக மாற்றிவிட்டார்.      

பூனை புரளிகள்!

படம்
மியாவ்! மியாவ்! பூனைகளுக்கு சிறந்த உணவு பால்! இது நம் கற்பனை. பாலூட்டிகளுக்கு வளர்ந்தபிறகு பால் என்பது செரிமானத்திற்கு சிக்கலான ஒன்று. குட்டியாக இருக்கும்போத பாலின் கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றுக்காக பாலை பூனைகள் டிக் அடிக்கின்றன. வளர்ந்த பூனைக்கு பால் செரிமானச்சிக்கலை ஏற்படுத்தும். பூனைகளுக்கு பயிற்சியளிக்க முடியாது. நாய்களைப் போலவே பூனைகளுக்கும் பயிற்சிகளை கொடுத்து பழக்க முடியும். ஆனால் நாய்களை விட பூனைகளிடம் சற்று பொறுமையாக நடப்பது அவசியம். மீனையும், கோழியையும் பரிசாக கொடுத்து போர் அடிக்காதபடி பூனையை பழக்கப்படுத்தலாம். மனிதர்களின் மனதை பூனைகள் அறியும்! நாய், பூனை இரண்டுமே சில வகை உடல்மொழிகள் மூலம் தம் உணர்ச்சியை வெளிப்படுத்துகின்றன. ஆனால் இவற்றில் நாய், மனிதர்களின் கவனத்தை ஈர்ப்பதில் டாப்பில் உள்ளது. மனிதர்களின் உணர்வை, கருத்துக்களை புரிந்துகொள்வதில் பூனைகள், நாய்கள் சமர்த்து என்பதை அவை நம் முகத்தை பார்க்கின்றன என்பதை வைத்து உறுதியாக கூறமுடியாது.