வரலாற்று பிட்ஸ்!









வரலாற்று துளிகள்!




Related image


ஆய்வுத்தந்தை!

பெலோபொனேசியன் போரை ஆவணப்படுத்திய கிரேக்க அறிஞர் துசைடிடெஸ்(கி.மு460-400), அறிவியல் வரலாறுகளின் தந்தை என அழைக்கப்படுகிறார். அழுத்தமான ஆராய்ச்சி தரவுகள், சாட்சிகளை பதிவு செய்த துசைடிடெஸ் தனது மெலியன் டயலாக் எனும் உலகநாடுகளுடான உறவு குறித்த தியரியும் பிரசித்தமானது.

களமாடும் களிறு!
பைரிக் போர்களில்(கி.மு 280-275) கிரேக்க நாடு, ரோமானிய ராணுவத்தை எதிர்க்க முதல்முறையாக பயிற்றுவிக்கப்பட்ட யானையைப் பயன்படுத்தியது. கி.மு 331 இல் பெர்சியர்கள், மகத மன்னர் நந்தா, கங்காரிதாய் ஆகியோர் 6 ஆயிரம் வரையிலான போர்யானைகளை போரில் கிரேக்க மன்னர்  அலெக்ஸாண்டருக்கு எதிராக பயன்படுத்தினர்.

முழுமையடையாத ஆண்!

தத்துவவியலாளர் அரிஸ்டாட்டில், பெண்களை முழுமையடையாத ஆண் என கருதினார். அன்று கிரேக்கத்தில் பெண் ஆணுக்கு சமமில்லாத தாழ்வானவர்களாக கருதப்பட்டனர்.

அலெக்ஸாண்டரின் பிரதி!

நாம் இன்று பார்க்கும் அலெக்ஸாண்டரின் சிற்பத்தை(Azara herm) உருவாக்கிய கலைஞர், லைசிபஸ். அலெக்ஸாண்டரை பிரதிபலிக்கும் இச்சிலை பிரான்சின் பாரிசில் உள்ளது. 

 2


காதல் ஜோடி!


ஆன்டனி- கிளியோபாட்ரா

ஷேக்ஸ்பியரின் எழுத்துக்களால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக புகழ்பெற்ற காதல் ஜோடி. ஹாலிவுட்டில் 1963 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கிளியோபாட்ரா படத்தில் ஆன்டனி – கிளியோபாட்ரா வேடத்தில் ரிச்சர்ட் பர்மன் – எலிசபெத் டெய்லர் நடித்து புகழ் பெற்றனர். கி.மு. 31 இல் சீசரின் வளர்ப்புமகன் ஆக்டேவியனுடன் போரிட்டு தோற்று எகிப்துக்கு தப்பியோடிய இருவருக்கும் இரு ஆண்கள்,ஒரு பெண் என மூன்று பிள்ளைகள் உண்டு. ஆக்டேவியனிடம் சிறைபடுவதைத் தவிர்க்க கி.மு 30 இல் ஆன்டனி தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.

சர்ச்சில் -– கிளமென்டைன்

உலகில் இன்றும் சரி, இனிமேலும் உன்னைத்தவிர வேறு பெண்ணை காதலிக்கவில்லை; காதலிக்கப்போவதுமில்லை என்று சர்ச்சில் தன் மனைவியிடம் கூறுவது வழக்கம். 1904 ஆம் ஆண்டு சர்ச்சில், வருங்கால மனைவி கிளமென்டைனை சந்தித்தார். அடுத்து நான்கு ஆண்டுகள் கழித்து 1908 ஆம் ஆண்டு சந்தித்தபோது தான் பிறந்த பிளெய்ன்ஹெம் மாளிகைக்கு கிளமென்டைனை அழைத்து சென்று காட்டி அன்று மாலையே காதலை சொல்லி செப்டம்பரிலேயே மாலை மாற்றி மனைவியாக்கிய வேகம் அமேஸிங்.  

3

பிட்ஸ்!

சமையற்கலைஞரின் தலையிலுள்ள தொப்பியின் நூறு மடிப்புகளுக்கு, முட்டையை நூறு வழிகளில் சமைக்கலாம் என்று அர்த்தம்.

எச்சிலில் பின்னிய வலையை சிலந்திகள் உண்டு அதனை மறுசுழற்சி செய்கின்றன.

லூயிஸ் ப்ரெய்லி தன் பனிரெண்டு வயதில் பிரெஞ்சு ராணுவத்தில் சைகை மொழியை பார்வையற்றவர்களுக்கான உருவாக்கினார்.

உலகின் தொன்மையான பியானோ அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள மெட்ரோபொலிடன் கலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1720 ஆம் ஆண்டு இதனை கண்டுபிடித்த இத்தாலியர் பார்த்தலோமியோ கிரிஸ்டோஃபோரி.

1991 ஆம் ஆண்டு மிக்கி மௌஸ் கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசிய வேய்ன் ஆல்வைன், மின்னி கதாபாத்திரத்திற்கு குரலால் உயிரூட்டிய ரூசி டெய்லரை திருமணம் செய்து கொண்டார்.

அமெரிக்க மாநிலங்களின் பெயர்களில் க்யூ(Q) என்ற எழுத்து இடம்பெற்றிருக்காது.