ஆக்ரோஷ காளைச்சுறா!
ஆபத்தான சுறா!
காளைச்சுறா(அல்லது நிகரகுவா சுறா),
Carcharhinus leucas எனும் குடும்பத்தைச் சேர்ந்தது. மிதவெப்ப சூழலில் வாழ விரும்பும்
காளைச்சுறா, உலக இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தால் அழியும் நிலையிலுள்ள விலங்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
ஆண் சுறா 2.25 மி.மீ நீளமும்,
95 கி.கி எடையும் கொண்டது. பெண் சுறாக்கள் ஆண் சுறாக்களை விட நீளமும் எடையும் அதிகம்
கொண்டவை. நன்னீர், கடல்நீர் இரண்டிலும் உடலின் ஆக்சிஜனை கட்டுப்படுத்தி வாழும் திறன்
கொண்ட காளைச்சுறா, கணிக்கமுடியாத ஆக்ரோஷ நடத்தை கொண்டவை.
பகலிலும் இரவிலும் வேட்டையாடும்
டேலன்ட் கொண்ட காளைச்சுறா, தன் இன சுறாக்கள், டால்பின்கள், சிறுமீன்களை ஆசையாக சாப்பிடும்.
பதினாறு ஆண்டுகள் வாழும் காளைச்சுறாவுக்கு வெள்ளைச்சுறா, புலிச்சுறா, முதலைகள் கடும்
சவால் கொடுக்கின்றன.
மனிதர்களை சுறாக்கள் தாக்கின என்று
செய்தி வந்தால் கண்ணை மூடிக்கொண்டு காளைச்சுறா தாக்கியது என புரிந்துகொள்ளலாம். மனிதர்களை
தாக்குவதில் காளைச்சுறா, வெள்ளைச்சுறா, புலிச்சுறா ஆகிய மூன்றும் முன்னணி வகிக்கின்றன.
தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா,
நியூகினியா ஆகிய நாடுகளில் பரவலாக காணப்படுகின்றன.