அமெரிக்காவின் முதல் கருப்பின பெண்!


சக்தி!
Image result for loretta lynch


லோரெட்டா லின்ச்

அமெரிக்காவின் முதல் கறுப்பின பெண் முதன்மை வழக்குரைஞராக(83 வது அட்டர்னி ஜெனரல்) பதவி வகித்த(2015-17) சாதனைக்கு சொந்தக்காரர் லோரெட்டா லின்ச். “கோர்ட்டுக்கு சென்று என் பெயரை ஜூரிகளிடம் அறிமுகப்படுத்தி அமர்ந்த கணம் மறக்கமுடியாது” என்பவர் சட்டம் அனைத்து மக்களுக்கானது என்ற நம்பிக்கையை உருவாக்கினார். ஆங்கில ஆசிரியரும் நூலகருமான தாயின் நூல்கள் போற்றும் குணத்தால் கிறிஸ்துமஸ் தினத்திலும் புத்தகங்களை பரிசாக கேட்கும் ஆசையுள்ளவராக லோரெட்டா வளர்ந்தார். “கழிவறையைக் கூட கருப்பின பெண்கள் பயன்படுத்தாத அனுமதி கிடைக்காத நிலையில் என் பெற்றோர் அனைத்து மக்களுக்கான உரிமைக்கு போராடுவதில் உறுதியான இருந்தனர். இவர்களின் செயல்பாடே அனைவருக்குமான சமநீதியின் என்னை வலுவானவளாக மாற்றியது” என தீர்க்கமாக பேசுகிறார் லோரெட்டா லின்ச்.

1959 ஆம் ஆண்டு வடக்கு கரோலினாவின் க்ரீன்ஸ்போரோவில் பிறந்த லோரெட்டா ஹார்வர்டு பல்கலையில் 1980-1984 ஆம் ஆண்டுகளில்  ஆங்கில இலக்கியம், அமெரிக்க இலக்கியம் மற்றும் சட்டக்கல்வியை நிறைவு செய்தவர், நியூயார்க் ரிசர்வ் வங்கியின் சட்ட ஆலோசகராக செயல்பட்டவர். பராக் ஒபாமா இவரை அமெரிக்க அரசின் முதன்மை வழக்குரைஞராக தேர்வு செய்தார்.