முஸ்லீம்களை வாழவைத்த சஞ்சீவ் பிரதான்!
முஸ்லீம்களை இணைத்த நல்மனிதர்!
உத்தரப்பிரதேசத்தின் முசாஃபர்நகர்
மாவட்டத்திலுள்ள துல்ஹெடா கிராமத்தைச் சேர்ந்த முஸ்லீம் குடும்பங்களை சஞ்சீவ் பிரதான்
என்ற நல்மனிதர், அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே திரும்ப குடியமர்த்தி வாழ உதவியுள்ளார்.
2013 ஆம் ஆண்டு முசாஃபர்நகர் மாவட்டத்தில்
ஏற்பட்ட கலவரங்களால் உயிருக்கு பயந்து துல்ஹெடா கிராமத்தை விட்டு வெளியேறிய 65 முஸ்லீம்
குடும்பங்களில் 30 குடும்பங்களை அவர்கள் வாழ்ந்த கிராமத்திற்கே கொண்டுவந்துள்ளார் சஞ்சீவ்.
குடியமர்த்துவதோடு அவர்களை வாழ்விடங்களை பாதுகாத்தும் வருவது சஞ்சீவ் பிரதானின் பெயர்
சொல்லும் செயல்.
முன்னாள் பஞ்சாயத்து தலைவராக செயல்பட்ட
சஞ்சீவ், அங்குள்ள பெரும்பான்மையினரான ஜாட் சமூகத்தை சேர்ந்தவர். 2015 ஆம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கு
உதவிய காரணத்தாலே பிரிவினைவாதிகளால் தோற்கடிக்கப்பட்டும் மக்கள் சேவையில் குறையொன்றுமில்லை.
“கலவரத்தின்போது முஸ்லீம்களை பாதுகாப்பதில் நானும் என் நண்பர்களும் உறுதியாக இருந்தோம்.
ஒருவரின் குணத்தை விட மதம் முக்கியமல்ல. முஸ்லீம்களும் நாங்களும் எங்கள் கிராமத்தில்
ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்கிறோம். மீதியுள்ள முஸ்லீம்களையும் இங்கு திரும்ப
வரவைக்க முயற்சிக்கிறோம்” என உறுதியான குரலில் பேசுகிறார் சஞ்சீவ் பிரதான்.