நோர்வீஜியன் வுட்! - தோற்றுப்போகும் திரைப்பிம்பம்

நோர்வீஜியன் வுட்: காமமே காயகல்ப மருந்து!





Image result for norwegian wood movie



நாவல்

ஹாருகி முரகாமி எழுதிய நோர்வீஜியன் வுட்டில் டோரு வாட்டனபி கிஸூகியுடன் டபுள் டேட்டிங் செல்லும்போதுகூட பரிதவிப்பிலேயே இருக்கிறான். காரணம், கிஸூகியின் பால்ய கால தோழியும் காதலியுமான நவோகோ தன்னை ஏதாவது கூறுவாளோ என்ற தடுமாற்றம் மூவரும் சேரும் கணம் தோறும் ஏற்படுகிறது.

பின்னாளில் நவோகோவுடன் கிஸூகி பற்றி பேசாதவரையில் உறவு சிறப்பாகவே செல்கிறது. நவோகோ, மனதும் உடலும் ஒருங்கிணையாத பெண். இறந்த காலத்தை தோண்டினால் அவளது குடும்பவே மனச்சிதைவு கொண்டதாக உள்ளது. உதாரணம்: படிப்பில் வென்ற நவோகோவின் சகோதரி அறையில் தற்கொலை செய்துகொள்ளும் பகுதி.

Related image




டோரு, பல்கலைக்கழகத்தில் படிப்பதோடு செலவுக்கு வார நாட்களில் பல்வேறு வேலைகளை செய்து சம்பாதித்தபடி இருக்கிறார். கல்லூரி வேலை நிறுத்தம், ஜப்பானின் சமகால பிரச்னைகள் என எதுவும் நாவலில் கிடையாது. ஒட்டநறுக்கிய அகவுணர்வுகளின் துல்லியம் கூடுவது இதனால்தான். நவோகோ, மிடோரி,  ஹாட்சுமி, ரெய்கோ ஆகியோருடனான உறவு இணக்கமும் அதேவிதத்தில் விலகலும் கொண்டிருக்கிறது. பீட்டில்ஸ் இசைப்பகுதி ஒலிக்கும்போது நவோகோவும் டோருவும் உறவுகொள்கிற காட்சி வருகிறது எனில் நாவலோடு ஒட்டிபோய்விட்டீர்கள் என்றே கூறலாம். கிஸூகியின் காலத்திலேயே நவோகோவை தள்ளிநின்று ரசித்து மனதிற்குள்ளேயே காதலித்த டோரு, பின்னாளில் அவள் இறந்துபோகும்போதுதான் தவித்து போகிறான்.

மனிதர்கள் அனைவருமே பலாபலன்களுக்கு ஆசைப்படுகிறவர்கள். ஒன்றை விலையாக கொடுத்து ஒன்றை பெறுபவர்கள் என்பதற்கு மிடோரி உதாரணம். டோருவின் பதில் கேட்டு வற்புறுத்தினால் பேசும் குணம் மிடோரியை கவர, காதலாகிறாள். அதேசமயம் டோருவின் மிகை உணர்ச்சி கொள்ளாத தன்மை அவளை ஈர்க்கவே அவளாகவே அறிமுகம் செய்துகொள்ளும் காட்சி ஈர்க்கும்படியான பகுதிகளில் ஒன்று. ரெய்கோ இதில் வேறுவிதமானவள். நவோகோவின் துயரக்கதையைக் கேட்டு அவள் இறந்தபின் அவளது உடையை அணிந்து அவளாகவே மாற முனைபவள். பீட்டில்ஸ் இசையோடு ஐம்பதிற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிவிட்டு டோருவுடன் உறவுகொள்ள அனுமதி கேட்பது தன் மனநிலையை திருத்திக்கொள்ள பாலுறவு உதவும் என்ற நோக்கத்தில்தான்.  ஆணுடன் பெண் நட்பு என திரிந்தாலும் உயிரியல்ரீதியான வழி பாலுறவு மட்டுமே.

Image result for norwegian wood movie



நவோகோவின் திடீர் பிரிவை முன்பே எதிர்பார்த்தாலும் அவளின் மீதான ஈர்ப்பு மிடோரியை நெருங்கும் கணம்தோறும் டோருவை குற்றவுணர்வில் தள்ளுகிறது. மோட்டார்சைக்கிள் பயணமும், துயரில் அழுவதும் அதிலிருந்து மீண்டு வாழவே சாக அல்ல.




Image result for norwegian wood movie
திரைப்படம் 

நவோகோ, கிஸூகி, டோரு வாட்டனபி கேரக்டர்களை தவிர திரைப்படம் யாரையும் நம்பவில்லை. இவர்களை காட்சிப்படுத்துவதிலும் சிக்கனம் காட்டியதால் என்ன பிரச்னை என்பது படம் முடியும் வரையில் புரிவதேயில்லை.

கிஸூகி இறப்பதற்கான காரணத்தை அறிய படத்தின் நிறைவில் ஒருவருக்கு ஆர்வமிருந்தால் அதனை நவோகோவின் டயலாக் மூலம் அறியலாம். மற்றபடி ரெய்கோ, ஸ்டோர்ம் ட்ரூப்பர்,  மிடோரி கதாபாத்திரங்களை ஊறுகாய் ரேஞ்சுக்கு பயன்படுத்தியதால் படத்தில் கடந்துபோகும் ஜூனியர் நடிகர்கள் போன்று ஆகிவிடுகிறார்கள்.

Related image
இயக்குநர் ஹங்





நாவலைப்படித்தால் மட்டுமே படம் புரியும் என்ற நிலைக்கு திரைக்கதை ஆசிரியர் கொண்டு வந்துவிடுவது ஏன்? மற்றபடி ஒளிப்பதிவு, இசை அற்புதமாக சூழல்களை பதிவு செய்கிறது. குறிப்பாக, டோருவின் ஹாஸ்டலின் படிக்கட்டுகளை அவர் கடக்கும் காட்சியை பதிவாக்கியது, மிடோரியின் வீட்டுக்குள் கடல் அலைபோல துடிப்புடன் அலையும் காட்சி.  நவோகோ புல்வெளியில் வேகமாக நடந்து திரும்பும் காட்சி.  நாவலின் குறிப்பிட்ட கேரக்டர்களை மட்டுமே  பதிவு செய்தால் போதும், நாவல் படித்தவர்கள்தான் இப்படத்தை பார்ப்பார்கள் என இயக்குநர் ஹங் உறுதியாக இருந்ததால் படம் அழகான காட்சிகளை ஒருங்கிணைத்த படமாக உணர்ச்சிகளற்று நகர்கிறது.


தகவல்கள்:




Initial release30 September 2010 (South Korea)


நன்றி: கே.என்.எஸ், த.சக்திவேல்
விக்கிபீடியா

பிரபலமான இடுகைகள்