இடுகைகள்

மீச மாதவன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மீசையை முறுக்கி சவால் விட்டுத் திருடும் மாதவன்! - மீச மாதவன், கிரேஸி கோபாலன் - கேரக்டர் புதுசு

படம்
  மீச மாதவன் - மலையாளம் மீச மாதவன் - மலையாளம் மீச மாதவன் மலையாளம் திலீப் (மாதவன் நாயர்)   கிரேஸி கோபாலன், மீசை மாதவன் என இரு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டிலும் திலீப் நடித்தார் என்பதல்ல. இரண்டு படங்களிலும் நாயகன் திருடன். ஆனால் அப்படி மாறியதற்கு இறந்தகாலத்தில் நெகிழச்செய்யும் ஃபிளாஷ்பேக் உண்டு. அதை நேர்த்தியாகவும் சொல்லியிருக்கிறார்கள்.   மாதவன் நாயர். இந்தப் பெயரைச் சொன்னாலே ஊரில் உள்ள அனைவருக்குமே அவர் திருடன் என்பது தெரியும். மலையாளத்தில் கள்ளன் என்கிறார்கள்.   மீசை மாதவன் என்பதுதான் அவன் பட்டப்பெயர். ஊர் மக்கள் யாராவது அவனிடம் லொள்ளு பேசி கோபம் வந்து மீசை முறுக்கினால் அன்று, சம்பந்தப்பட்டவர் வீட்டுக்குள் முக்கியமான ஏதாவது ஒரு பொருளேனும் களவு போகும். அதை தடுக்கவே முடியாது. அந்தளவு திருட்டில் ஜெகஜாலன். திருட்டில் ரிடையர்டாகி கால் ஆணி வந்துவிட்ட முன்னாள் திருடரிடம் வித்தை கற்ற ஆள், மாதவன். ஊருக்குள் புதிய பொருட்களை வாங்க முடியாத சிலர், மீசை மாதவனிடம் எனக்கு இந்த பொருட்கள் வேண்டுமென்று சொல்லி, ஆர்டர் செய்து காசு கொடுத்து வாங்குவதும் உண்டு. மாதவனைப் பொறுத்தவரை அவனுக

வட்டி கட்டி தன் சொந்த நிலத்தை மீட்க திருட்டை தொழிலாக கொள்ளும் நல்லவன் மாதவன்! - தொங்கோடு - ரவிதேஜா

படம்
              தொங்கோடு சிறுவயதில் தனது தோழிக்காக காத்தாடியை திருடும் சிறுவன் , வளர்ந்தபிறகு எப்படியாகிறான் என்பதுதான் கதை .    கிராமத்தில் நடைபெறும் கதையில் மாதவன் தனது தோழிக்காக முதலில் திருட்டில் ஈடுபட்டு வீட்டுக்கு வரும்போது வீடு வட்டிக்கடைக்கார ரால் சூறையாடப்பட்டுள்ளது . அந்த வட்டிக்கார ர் வேறு யாருமல்ல . அவனது பெண்தோழியின் அப்பாதான் . இந்த சோகத்தில் மாதவனின் தந்தை இறந்துவிடுகிறார் . தங்கையுடன் வீடில்லாமல் இருக்கும் மாதவன் மெல்ல கிராமத்தில் சோற்றுக்காக திருடத் தொடங்குகிறான் . அதுவே அவனது தொழிலாக மாற முன்னாள் திருடர் சிறப்பாக பயிற்சி கொடுக்கிறார் . ஆனாலும் மாதவனிடம் இருக்கு்ம் நேர்மை , தான் கட்டவேண்டிய வட்டியை சரியாகத்தான் வட்டிக்காரருக்கு கட்டுகிறார் . அவரது தந்தை வட்டிக்காரரால் இறந்துபோனாலும் கூட அவர் மேல் துவேஷம் கொள்வதில்லை .    ஆதரவற்ற சிறுவர்களை முடிந்தவரை படிக்க வைக்க பணம் கொடுத்து உதவுகிறான் . இதனால் ஊரிலுள்ளவர்கள் மாதவனை பெரிதாக நினைத்து பயப்படுவதில்லை . பணக்காரர்கள் மட்டுமே பயப்படுகிறார்கள் . இந்த நேரத்தில் நகரத்தில் படித்து வந்த பெண்தோழி வளர்ந்