இடுகைகள்

ரிசர்வ் வங்கி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாட்டை நிலைநிறுத்த போராடி வரும் ரிசர்வ் வங்கிக்கு வயது 90!

படம்
  ரிசர்வ் வங்கிக்கு வயது 90 இன்று அனைத்து ஜனநாயக அமைப்புகளும் சீரழிவுப்பாதையில் உள்ளன. காவிக்கட்சி ஆட்கள் உள்ளே புகுந்து எளிய மக்களின் நம்பிக்கையாக உள்ள அனைத்து அமைப்புகளையும் உருக்குலைத்து வருகிறார்கள். அதில் முக்கியமான அமைப்பு, ரிசர்வ் வங்கி.  1935ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்ட மத்திய வங்கி நிர்வாக அமைப்பு. நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளுக்குமான நெறிமுறைகள், நிதி நிர்வாகம், பணநோட்டுகள் மேம்பாடு, பணவீக்கம் கட்டுப்பாடு, வட்டிவிகிதம், வங்கிமுறையை சீரமைப்பது ஆகியவற்றை செய்து வருகிறது. தொண்ணூறாண்டு பயணத்தில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வந்துள்ளது ரிசர்வ் வங்கி.  செயல்பாடு ஏப்ரல் ஒன்று என்றாலும் திட்டம் தொடங்கியது, 1935ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி. அப்போதே அரசியலமைப்பு சட்டப்படி உரிமைகள், கடமைகள், வகுத்து தனியாக சுயாட்சியாக செயல்படுவதற்கான சிந்தனைகள் வடிவம் பெற்றுவிட்டன. முதல் ஆளுநராக ஆஸ்பர்ன் ஆர்கெல் என்பவர் பொறுப்பேற்றார். சிடி தேஷ்முக் என்பவர் முதல் இந்திய ஆளுநராக பொறுப்பேற்றார்.  பிரிவினை காலத்தின்போது பாகிஸ்தான், இந்தியா என இருநாடுகளுக்குமான நிதி நிர்வாகத்திற்கு பொறுப்புள

மீண்டும் மவுசு பெறும் பிட்காயின்! - பல்வேறு நிறுவனங்கள் பணப்பரிவர்த்தனைக்கு ஏற்கின்றன!

படம்
            மீண்டு வரும் பிட்காயின் . பேபால் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பிட்காயின்களை வாங்கவும் பிற கரன்சிகளை கையாளவும் அனுமதி வழங்கியுள்ளது . இந்த நிறுவனத்தைப் போலவே 26 நிறுவனங்கள் பிட்காயின்களை வாங்க விற்க அனுமதியை வழங்கிவிட்டன . பிட்காயின் கணக்கு வழக்கு இல்லாமல் புழங்கவில்லை . தேவைக்கு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது . ஸ்கொயர் என்ற ஸ்டார்ட்அப்பை டிவிட்டர் நிறுவனர் ஜேக் டோர்சி தொடங்கியுள்ளார் . இந்த நிறுவனம் தங்களது நிதி வர்த்தகத்தில் பாதியை பிட்காயின் பக்கம் திருப்பியுள்ளது . பிட்காயின் மியூசுவல் பண்ட் கூட திட்டம் தயாராக உள்ளது . இதனை ராபின்ஹூ்ட் , ரிவோல்ட் ஆகிய நிறுவனங்கள் செயல்படுத்த உள்ளனர் . பெருந்தொற்று காலம் பிட்காயின் வணிகத்தை ஊக்குவிக்கிறது . உலகளவில் பங்குசந்தைகள் நிலையில்லாமல் சரிந்து வருகின்றன . இதனால் முதலீட்டாளர்கள் பிட்காயினை பாதுகாப்பான் முதலீடாக பார்க்கின்றனர் . அடிக்கடி ஏற்ற இறக்கங்களை பிட்காயின் சந்தித்து மீண்டு வந்துள்ளது . குறிப்பாக 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட சரிவு பிட்காயின் மீது நம்பிக்கை குறைய முக்கியமான காரணமாகும் . சைப

பணம் கையாளப் பழகுவோம் - பட்ஜெட் திட்டம்

படம்
        4 பணம் கையாளப் பழகுவோம் பட்ஜெட் திட்டம் இந்திய அரசு , ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை ( பட்ஜெட் ) உருவாக்குகிறது . அதில்தான் நாட்டில் வருமானம் , செலவு , பற்றாக்குறை ஆகிய விஷயங்கள் இடம்பெறும் . அனைத்து மக்களுக்கும் என்னென்ன திட்டங்களுக்கு அரசு செலவு செய்கிறது என மக்களுக்கும் தெளிவாகும் . தனிப்பட்ட முறையில் நாமும் வாரம் தோறும் , மாதந்தோறும் , ஆண்டுதோறும் செய்யும் செலவுகளையும் , சேமிப்பையும் கண்டறிய பட்ஜெட் போடுவது அவசியம் . தனிமனிதராக ஒருவர் தனது எதிர்கால வருமானத்தை யூகித்து பட்ஜெட் போடுவது அவசியம் . அப்போதுதான் தேவையில்லாத செலவுகளைக் குறைத்து அவர் முன்னேற முடியும் . ஒருவரின் நிதி நிர்வாகத்திறனை முன்னேற்றுவதற்கே பட்ஜெட் உருவாக்கப்படுகிறது . சேமிப்பு சேமிப்பு = வருமானம் - செலவு வருமானத்திலிருந்து செலவைக் கழித்தால் கிடைப்பதுதான் ஒருவரின் சேமிப்பு . செலவு = வருமானம் - சேமிப்பு வருமானத்திலிருந்து சேமிப்பைக் கழிப்பது போக கிடைப்பதுதான் செலவு . ஒருவர் தான் செய்யும் செலவுகளைத் திட்டமிட்டு , வருமானத்தில் ஒருபகுதியை சேமிப்து அவசியம் ப

ஜிஎஸ்டி சுணக்கம் - மறைமுக வரியில் தடுமாற்றம்!

படம்
dna india உற்பத்தியைப் பாதித்த வரி வசூல்! 2017ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று, நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரியை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். அனைத்து மறைமுக வரிகளுக்கும் மாற்றாக இந்த வரி இருக்கும் எனக் கூறப்பட்டது. நாட்டில் வரிகள், நேர்முகமாக மற்றும் மறைமுகமாக  வசூலிக்கப்படுகிறது. அப்போது, ஜிஎஸ்டி வரி, முந்தைய வரி வசூலை விட 2 சதவீதம் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் தன் இலக்கை எட்டுவதில் சுணங்கியுள்ளதுதான் தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது.  உள்நாட்டு உற்பத்தி 2013-14 ஆம் ஆண்டு 13.9 சதவீதத்திலிருந்து 12.2 சதவீதமாக (2018-19) குறைந்துள்ளது. இதன்மூலம் மத்திய அரசு திட்டமிட்டதை விட 1.31 டிரில்லியன் டாலர்கள் பற்றாக்குறையாகிறது.  7.3 சதவீதமாக (2013-14) இருந்த வரி வருவாய் தற்போது, 6.9 சதவீதமாக (2018-19) குறைந்துவிட்டது. இந்த வருவாய் இடைவெளி சதவீதம் அதிகரித்து வருவது ஆபத்தானது. நேர்முக வரி விதிப்பில் அலுவலகப் பணியாளர்கள், பெருநிறுவனங்கள் உள்ளடங்குவர். மறைமுகவரி விதிப்பில் பொருட்களை வாங்குவது, சேவைகளைப் பெறுவது ஆகியவை வரும். மறைமுக வரி விதிப்பில்தான், நி

பிட்ஸ் - ரிசர்வ் வங்கி

படம்
பிட்ஸ்! இந்தியாவிற்கான ரிசர்வ் வங்கி, 1947 ஆம் ஆண்டு வரை மியான்மருக்கும், 1948 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானுக்கும் வங்கிச்சேவையை வழங்கி வந்தது. பிரிட்டிஷார் ஆட்சியில் ரிசர்வ் வங்கிச்சட்டம் 1934 படி, மத்திய ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி செயல்படும் விதம், அதற்கான விதிமுறைகள் ஆகியவை டாக்டர் அம்பேத்கர் எழுதிய “The Problem of the Rupee – Its origin and its solution” என்ற நூலையொட்டி உருவானது. இந்த நூலை அம்பேத்கர், ஹில்டன் கமிஷனிடம் சமர்ப்பித்தார். இதனைப் பின்பற்றி 1926 ஆம்ஆண்டு ராயல் கமிஷன், ரிசர்வ் வங்கியை உருவாக்கும் திட்டத்தை உருவாக்கியது. ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டபோது, கோல்கட்டாவைத் தலைமையகமாகக் கொண்டு செயற்பட்டு வந்தது. பின்னர், 1937 ஆம் ஆண்டு முதல் மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படத் தொடங்கியது. ரிசர்வ் வங்கியின் நாக்பூர் கிளையில் இந்தியாவிலேயே அதிக அளவாக தங்கம் இருப்பில் சேமிக்கப்பட்டு வருகிறது.  நன்றி: பாலகிருஷ்ணன்