இடுகைகள்

நோய்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலநிலை மாற்றத்தை சமாளிக்க மரங்களை இடம்பெயர்த்து நடும் கொலம்பிய வனத்துறை!

படம்
  காலநிலை மாற்றத்தை சமாளிக்க புதிய வழி - மரங்களை இடம்பெயர்த்து நடலாம்! உலக நாடுகள் அனைத்துமே காலநிலை மாற்றத்தின் விளைவுகளை சந்தித்து வருகின்றன. இதனால், பருவகாலங்களின் இடைவெளியில் மாற்றம் ஏற்பட்டுவருகிறது. கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த இயற்கை செயல்பாட்டாளர்,  கிரேக் ஓ நீல். இவரும் இவருடைய குழுவினரும், பிரிட்டிஷ் கொலம்பியாவின் வனப்பகுதியில் உள்ள மரங்களை  வேறிடங்களுக்கு இடம்பெயர்த்து வருகின்றனர்.  முதல் பணியாக, ஒகனகன் பள்ளத்தாக்கு காடுகளிலுள்ள லார்ச், பைன், யெல்லோ செடார், ஹெம்ஸ்லாக் ஆகிய இன மரங்களைப் பிடுங்குகின்றனர். பிறகு இம்மரங்களை, அமெரிக்காவின் வடக்கு கலிஃபோர்னியா பகுதியிலிருந்து கனடாவின் தெற்குப்புற யூகோன் எல்லை வரை நடுகின்றனர்.  ஒகனகன் பள்ளத்தாக்கு பகுதியில், காலநிலை மாற்ற பாதிப்பு தொடங்கியுள்ளது. இதனால்  நீர்பஞ்சம், கடும் பனிப்பொழிவு காரணமாக 1995-2015 வரையிலான காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் அழிந்து போயின. அதை தடுத்து மர இனங்களைப் பாதுகாக்கவே இடம்பெயர்த்து நடுகின்றனர். . மரம் குறைவாக உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். 2009ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் கொல

கலாசார அழுத்தங்கள் தூக்கத்தை பலி கேட்கிறதா?

படம்
              கலாசார அழுத்தங்கள் தூக்கத்தை பலி கேட்கிறதா ? சரியான நேரத்தில் படுத்து சரியான நேரத்தில் எழவேண்டியது ஆரோக்கியத்திற்கு முக்கியம் . ஆனால் இன்று நகரவாசிகள் நள்ளிரவில் படுத்து காலையில் 9.30 க்கு ஆபீஸ் செல்லவேண்டிய அவசரத்திற்கு வேகமாக எழுந்து வருகின்றனர் . இது அவர்களின் உடலிலுள்ள உயிரியல் கடிகாரத்தை பாதிக்கிறது . உயிரியல் கடிகாரம் என்பது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குமுறைபடுத்துகிறது . இதுவே பகலா , இரவா எந்த நேரத்தில் உறங்குகிறோம் என்பதை கவனிக்கிறது . ஆனால் இந்த கடிகாரம் நாம் தூங்கவேண்டிய நேரத்திற்கு அலாரமடித்து நம்மை உஷார் செய்யாது . ஆனால் எழவேண்டிய நேரத்தை இதுவே தீர்மானிக்கிறது . இதுபற்றி சயின்ஸ் அட்வான்ஸ் இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது . அதில் ஒருவ்ர் தூங்கச்செல்வது அவரின் கலாசார அழுத்தம் சார்ந்தது . ஆனால் எழுவதை உயிரியல் கடிகாரம் தீர்மானிக்கிறது என்றார் ஒலிவியா வாட்ச் . இவர் , மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தூக்கம் பற்றிய ஆய்வை செய்து வரும் பட்டதாரி மாணவி . . இந்த ஆய்வில் நூறு நாடுகளைச் சேர்ந்த 8 ஆயிரம் பங்கேற்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர் . பல்வேறு

அலர்ஜியை ஏற்படுத்தும் சோடியம் லாரல் சல்பேட்! - அறிந்துகொள்ளுங்கள்!

படம்
pixabay சோடியம் லாரல் சல்பேட்டின் ஆபத்து என்ன? நாம் தினசரி பயன்படுத்தும் பற்பசை, முகத்திற்கு பயன்படுத்தும் க்ரீம்கள் என பெரும்பாலான பொருட்களில் இந்த வேதிப்பொருள் உள்ளது. எதற்கு? முகத்தை ஃபேஸ்வாஷ் போட்டு கழுவியதும் எண்ணெய் நீங்கியது போன்ற உணர்வு ஏற்படுகிறது அல்லவா அதற்குத்தான். முக்கியமாக, அழகு சாதனப் பொருட்களில் உள்ள எண்ணெய் பொருட்களையும் பிற பொருட்களையும் ஒன்றாக சேர்க்க சோடியம் லாரல் சல்பேட் அவசியம். பொதுவாக தோல் நமது உடலில் பல்வேறு நோய்களைத் தடுக்கும் விதமாக உள்ளது. இதனை பாதிப்பதில் முக்கிய வேதிப்பொருளாக சோடியம் லாரல் சல்பேட் உள்ளது. தோலின் அடுக்குகளை பாதித்து அவற்றின் நோய் தடுக்கும் திறனை அகற்றுகிறது. பின் அதில் ஓவ்வாமையை ஏற்படுத்துகிறது.  ஏன் இதனைப் பயன்படுத்துகிறார்கள் என்று உங்களுக்கு கேள்வி எழும். காரணம் இதன் விலை மிகவும் குறைவு. மேலும் இதன் அளவு 0.5 முதல் 2.5 கிராம் வரையில்தான் இப்பொருட்களில் இருக்கிறது. இதனை நீங்கள் உடலில் அதிகநேரம் வைத்திருப்பதில்லை என்பதால் இதன் பாதிப்பும் குறைவு. எனவே பல்வேறு நாடுகளில் இதன் அளவைக் குறைத்து பயன்படுத்தி வருகின்றனர். எக்

பிளாஸ்டிக்கில் உணவுப்பொருட்கள்! - ஆபத்தா?

படம்
பிளாஸ்டிக்கின் சேர்மானத்தில் நீக்கமற கலந்துள்ள பொருள் பிஸ்பெனால் - பிபிஏ. தற்போது உணவுப்பொருட்கள் மற்றும் நீர் வைத்துக்கொள்ள அரசு அனுமதிக்கும் பிளாஸ்டிக்குகளில் பிஸ்பெனால் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இதிலும் ஆபத்து இல்லாமல் இல்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில்,  பிஸ்பெனால் எஸ் மற்றும் பிஸ்பெனால் எஃப் எனும் இரு பொருட்கள் உள்ள பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் உடல் பருமன் பிரச்னை ஏற்படும் என ஜர்னல் ஆஃப் தி எண்டோகிரைன் சொசைட்டி இதழ் கூறியுள்ளது. பிபிஏக்கும் மேற்சொன்ன இருபொருட்களுக்குமான அமைப்பு பெரிதும் வேறுபடவில்லை. இவை பிளாஸ்டிக் பாட்டில்கள், கேன்கள் மற்றும் பிற பொருட்களில் காணப்படுகின்றன. எண்டோகிரைன் சொசைட்டி பத்திரிகை 2012 ஆம் ஆண்டு செய்த ஆய்வுப்படி, பிபிஏ வேதிப்பொருள் குழந்தைகளுக்கு உடல் பருமனை ஏற்படுத்துவதாக கண்டுபிடித்து கூறியிருந்தது. பிபிஎஸ், பிபிஎஃப் ஆகிய பொருட்கள் உடல் பருமனை நேரடியாக அதிகரிப்பதில்லை. இவை உடல் பருமனால் அவதிப்படுபவர்களை பாதிக்கிறது என்கிறது இந்த ஆராய்ச்சி. இதனால் பிபிஏக்கு மாற்று இல்லையா என வேதனைப்பட அவசியமில்லை. அம