அலர்ஜியை ஏற்படுத்தும் சோடியம் லாரல் சல்பேட்! - அறிந்துகொள்ளுங்கள்!
pixabay |
சோடியம் லாரல் சல்பேட்டின் ஆபத்து என்ன?
நாம் தினசரி பயன்படுத்தும் பற்பசை, முகத்திற்கு பயன்படுத்தும் க்ரீம்கள் என பெரும்பாலான பொருட்களில் இந்த வேதிப்பொருள் உள்ளது. எதற்கு? முகத்தை ஃபேஸ்வாஷ் போட்டு கழுவியதும் எண்ணெய் நீங்கியது போன்ற உணர்வு ஏற்படுகிறது அல்லவா அதற்குத்தான். முக்கியமாக, அழகு சாதனப் பொருட்களில் உள்ள எண்ணெய் பொருட்களையும் பிற பொருட்களையும் ஒன்றாக சேர்க்க சோடியம் லாரல் சல்பேட் அவசியம்.
பொதுவாக தோல் நமது உடலில் பல்வேறு நோய்களைத் தடுக்கும் விதமாக உள்ளது. இதனை பாதிப்பதில் முக்கிய வேதிப்பொருளாக சோடியம் லாரல் சல்பேட் உள்ளது. தோலின் அடுக்குகளை பாதித்து அவற்றின் நோய் தடுக்கும் திறனை அகற்றுகிறது. பின் அதில் ஓவ்வாமையை ஏற்படுத்துகிறது.
ஏன் இதனைப் பயன்படுத்துகிறார்கள் என்று உங்களுக்கு கேள்வி எழும். காரணம் இதன் விலை மிகவும் குறைவு. மேலும் இதன் அளவு 0.5 முதல் 2.5 கிராம் வரையில்தான் இப்பொருட்களில் இருக்கிறது. இதனை நீங்கள் உடலில் அதிகநேரம் வைத்திருப்பதில்லை என்பதால் இதன் பாதிப்பும் குறைவு. எனவே பல்வேறு நாடுகளில் இதன் அளவைக் குறைத்து பயன்படுத்தி வருகின்றனர்.
எக்சிமா பிரச்னை உள்ளவர்கள் இதனைத் திரும்பிக் கூட பார்க்க கூடாது. இதற்கு பதிலாக ஆல்கஹால் ஈதோஎக்ஸைடல் போன்ற வேதிப்பொருட்களைக் கொண்ட பொருட்களைப் பயன்படுத்தலாம். ஆபர் என சோப்புகளை அள்ளும் முன்பு அதில் உள்ள வேதிப்பொருட்களை பார்த்து படித்து புரிந்துகொண்டு வாங்குங்கள்.
நன்றி - சயின்ஸ் அலர்ட்