புத்தகங்கள் புதுசு! - மொழிகளை அறிவதில் மூளையின் பங்கு!
இயற்கையில் நாம் அனைவரும் ஒருவரே என்று பல்வேறு ஆதாரங்களைச் சொல்லி விளக்குகிறார் சூழலியலாளர் டாம் ஆலிவர். நம் அனைவரும் தானியங்கியாக சுயமாக இயங்குவதாக தோன்றலாம். ஆனால் அனைவரும் குறிப்பிட்ட விதமாக இணைக்கப்பட்டிருக்கிறோம் என்று கூறுகிறார் ஆசிரியர்.
நாற்பது ஆண்டுகால நரம்பியல் மருத்துவத்துறையில் தான் சந்தித்த நோயாளிகள் பற்றி எழுதியுள்ளார் டேவிட். நோயாளிகளின் நோய்களோடு இன்றுள்ள உளவியல் பிரச்னைகளையும் இணைத்து எழுதியுள்ளார் ஆசிரியர். உளவியல் பற்றி ஆழமாக தெரிந்துகொள்ள உதவும் நூல் இது.
உண்மையில் மொழிகளை கற்பது என்பது சாதாரணமானதல்ல. அப்படி பல்வேறு மொழிகளை கற்றவரை நாம் அறிவாளி என ஏற்றுக்கொள்கிறோம். ஆல்பெர்ட் காஸ்டா இருபது ஆண்டுகளாக இதுபற்றி ஆராய்ச்சி செய்து தன் முடிவுகளை, அதில் கண்ட ஆச்சரிய விஷயங்களை எழுதியுள்ளார். படித்துப்பாருங்கள்.பிரமித்துபாருங்கள்.
நன்றி - பிபிசி