காபியை குடித்துவிட்டு தூங்கினால் என்னாகும்?



giphy



மிஸ்டர் ரோனி


காபி குடித்து தூங்கினால் என்ன விளைவு ஏற்படும்?

நீங்கள் கடுமையான உழைப்பாளி. வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். தூங்க கூட நேரமில்லை. அப்போது என்ன செய்வீர்கள்? டீயை விட காபியை இப்போது தேர்வு செய்யலாம். இதன் விளைவுகள் என்ன?

பொதுவாக மிகவும் சோர்வாக இருக்கிறது. உடனே காபியை குடிக்கத் தோன்றுகிறது. உடல் சோர்வாக தூக்கம் வருவது போன்று இருந்தால் 30 நிமிடங்கள் ஓய்வு எடுப்பது நல்லது. காபி குடித்தால் இதே தூக்க நேரத்தை பத்து நிமிடங்களாக மாற்றிக்கொள்ளலாம். இது ஆழமான தூக்கத்தை ஒத்த நல்ல பயன்களைக் கொடுப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.


உண்மையில் டீ, காபி குடித்தால் உங்களுக்கு தூக்கம் வராது. அப்படி தூங்கி எழுந்தாலும் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். எப்படி? காபி குடித்தவுடன் அதன் மூலக்கூறுகள் சிறுகுடலுக்கு செல்கிறது. அங்கிருந்து அதிலுள்ள அடென்சின் மூலக்கூறுகள் மூளையில் உள்ள செல்களுக்கு செல்கிறது. காபீனின் தன்மையால் மூளை சோர்விலிருந்து விழிக்கிறது. இந்த மாற்றங்கள் காபி குடித்த 20 நிமிடங்களிலிருந்து தொடங்கிவிடுகிறது. இதனால் காபி குடித்து எழும் நேரம் குறைகிறது. எழும்போது புத்துணர்ச்சியாக இருக்கிறது.


இங்கிலாந்திலுள்ள லாஃப்பாக் பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் பல்கலைக்கழகம் செய்த ஆய்வில் காபி குடித்தபின் தூங்கியவர்கள் வண்டி ஓட்டும்போதும், ஞாபகப்படுத்தும் சோதனைகளிலும் சிறப்பாக செயல்ப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனை எப்படி செயல்படுத்துவது?

முதலில் காபியை குடிக்க ஆயத்தமாகுங்கள். இதில் பால், சர்க்கரை சேர்க்க கூடாது. இதற்கு பதிலாக காஃபீன் மாத்திரைகளைக் கூட எடுத்துக்கொள்ளலாம்.

கடிகாரத்தில் 30 நிமிடங்கள் கழித்து அலாரம் செட் செய்து வைத்துக்கொள்ளுங்கள். கண்களில் மாஸ்க் மாட்டிக்கொண்டு அப்படியே சோபாவில் அல்லது படுக்கையில் படுங்கள். எழும்போது புத்துணர்ச்சியை உணர்வீர்கள்.

நன்றி -

தாட்.கோ வலைத்தளம்.



பிரபலமான இடுகைகள்