ஆப்பிளின் எதிர்காலத் தோற்றம்!
கணினி உலகில் தன்னை தனித்துவமான நிறுவனமாக காட்டிக்கொள்ள ஆப்பிள் நிறுவனம் அளவு யாரும் மெனக்கெட்டு இருக்க மாட்டார்கள். பலரும் கணினியின் வேகம் பற்றி கவலைப்பட்டபோது, கணினியின் அழகைப் பற்றி ஸ்டீவ் ஜாப்ஸ் கவலைப்பட்டார். இன்று மேக் கணினி என்றால், அது வீடியோ, கிராபிக் டிசைனர் சார்ந்தது என்று மாறிவிட்டது. அங்கு விண்டோஸ் உள்ளே நுழைய அணுவளவும் வாய்ப்பில்லை. காரணம், ஆப்பிளின் சமரசம் இல்லாத தரம்.
தற்போது தனது எதிர்காலத்திற்கான கணினி தோற்றத்திற்கு ஆப்பிள் காப்புரிமை பெற்றுள்ளது. முழுக்க கண்ணாடியால் ஆனது போன்ற தோற்றத்தை புதிய ஆப்பிள் கணினி கொண்டுள்ளது. சற்றே திரை வளைந்தது போல செம ஸ்டைலாக இருக்கிறது.
பழைய கணினியில் கீபோர்ட் தனியாக இருக்கும். கணினிக்கு ஏற்றபடி வெள்ளை நிறத்தில் கொடுத்திருப்பார்கள். இம்முறை புதிய கணினியில் விசைப்பலகை கணினியுடன் அப்படியே இணைக்கப்பட்டுள்ளது. இது புதிதாக இருக்கிறது. கடந்த ஜனவரி 23ஆம் தேதி கணினியின் வடிவமைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இன்றே கவனமாக பார்த்து புக் செய்யப் பாருங்கள்.
நன்றி - கிரியேட்டிவ் பிளாக்