அரசரைக் கொல்ல தற்கொலைப்படை திட்டம் - தி ஃபேட்டல் என்கவுண்டர்!




Image result for the fatal encounter




தி ஃபேட்டல் என்கவுன்டர் - தென்கொரியா 2014

இயக்கம் - லீ ஜே க்யூ

ஒளிப்பதிவு - கோ நாக் சியோன்

இசை மோவிக்


தென்கொரிய மன்னர் ஜியாஞ்சோவை படுகொலை செய்ய நோரன் எனும் கொலைகாரப்படை திட்டமிடுகிறது. இதற்காக, அவர்கள் செய்யும் முயற்சியும், உள்ளுக்குள் அரசருக்கு நெருக்கமான உறவுகளின் அதிகாரப்போட்டியும்தான் படம்.

படத்தின் காட்சிகள் முன்பின்னாக நகர்கின்றன. ஒரு காட்சி முடிந்தபின், அதற்கு 45 நிமிடங்கள் முன்னதாக என மாறி மாறி நகர்வது ஒரு கட்டத்தில் இயக்குநர் நம்மை பரிசோதனை எலியாக மாற்றுகிறாரோ என்று தோன்றுகிறது.

Image result for the fatal encounter




தொடக்க காட்சியில் அரசு படைவீரர்கள் விழுந்து கிடக்க, அறை உள்ளேயிருந்து தீனமான அலறல் கேட்க காட்சி மாறுகிறது.


உண்மையில் தென்கொரிய மன்னர் ஜியாஞ்சோவின் வாழ்க்கையை தழுவியது. பதினேழாம் நூற்றாண்டிலிருந்து, பதினெட்டாம் நூற்றாண்டுவரை இவரது ஜோசியன் வம்சம் தென்கொரியாவை ஆண்டது. துரதிர்ஷ்டமான மன்னர் என்று வரலாற்றில் இவர் அழைக்கப்படுகிறார். காரணம், இவர் மன்னரான சமயம் இவரது குடும்பத்தில் நேர்ந்த அநீதியான மரணங்கள்தான். அதற்கு இவர்களின் ரத்த வழி உறவுகளை காரணமாக இருக்கின்றன.

Image result for the fatal encounter


தற்கொலைப்படை தாக்குதல்தான் முக்கியமான காட்சி. அதற்கு பார்வையாளர்களை தயார் செய்யும் காட்சிகளில் இசை தீவிரமான பீதியை ஊட்டுகிறது. ஒளிப்பதிவு இறுதிக்காட்சிகளில் மிரட்டுகிறது.

மன்னராக நடித்துள்ள ஹியூன் பின் நெகிழ்ச்சி, உருக்கம், பரிதாபம் என அனைத்து உணர்வுகளையும் கண்கள் வழியாக நமக்கு கடத்தியிருக்கிறார். இவர் ராணுவசேவை முடித்து வந்த தும் நடித்த திரைப்படம் இது. வெறும் சண்டைக்காட்சிகள் மட்டுமல்லாது நட்பு, துரோகம், கௌரவம், குடும்பம், தனிமை, காதல் என பல்வேறு உணர்வுகளை ஏற்படுத்துகிற படம்.

நன்றி - சேதுமாதவன் பாலாஜி 

பிரபலமான இடுகைகள்