நம்பிக்கை நாயகர்கள் 2020- மாற்றங்கள் இங்கிருந்து தொடங்குகின்றன!




Image result for dr sankar ramchandani

சிறந்த மருத்துவர்

சங்கர் ராம்சந்தானி

ஒடிசாவில் சம்பல்பூரிலுள்ள தொழுநோய் நோயாளிகள் அதிகம் உள்ள பகுதி புர்லா. இப்பகுதியை த த்து எடுத்து அங்குள்ள மக்களுக்கு கல்வியும், மருத்துவ உதவிகளையும் அளித்து வருகிறார் மருத்துவர் சங்கர் ராம் சந்தானி.  உங்கள் மருத்துவப்பணி கடந்து இப்படி ஏழைகளுக்கு உதவக்காரணம் என்ன என்று கேட்டதற்கு, சமூகத்திற்கு செய்யும் பிரதி உபகாரம் இது. என்னுடைய கடமையும் கூட என்று பேசுகிறார்.


இவை தவிர ஏழைகள் உள்ள இடங்களில் மருத்துவ முகாம்களையும் நடத்தி உதவிகளை வழங்கி வருகிறார்.


Related image

சூழலியலாளர்

சாலுமாரதா திம்மக்கா

கர்நாடகத்தைச் சேர்ந்த திம்மக்கா, நாற்பது ஆண்டுகளாக மரக்கன்றுகளை நட்டு சூழலியலை மேம்படுத்த உதவியுள்ளார். இப்பணிக்கு அவரின் கணவர் சிக்கய்யாவும் உதவி வருகிறார். தனது கிராமமான ஹூலிக்கில் தன் பணிகளை முதலில் செய்யத் தொடங்கினார்.

குழந்தை இல்லாத குறையை உறவுகள் சொல்லிக்காட்ட, தற்கொலை செய்யப்போனவரை மரக்கன்றுகள்தான் காப்பாற்றின. இதன் விளைவாக, இன்று 107 வயதிலும் நன்றாக இருக்கிறார். அவர் வைத்த ஆலமரங்கள் இன்று ஹூலிக்கிலும் குடூரிலும் நன்றாக வளர்ந்து விட்டன. “இயற்கையை நாம் மதிக்க கற்கவேண்டும். இந்த இயற்கைச் சூழல் நமக்கு இறைவன் கொடுத்த பரிசு என்கிறார்”


Image result for vanlalruati, pwnm

ஆரோக்கிய பிரசாரகர்

வன்லா ருவாடி

மிசோரத்தை சேர்ந்த பெண்மணி. 22 வயதில் போதை ஊசிப் பொருட்களை பயன்படுத்தி ஹெச்ஐவி வைரசால் பாதிக்கப்பட்டார். அன்றிலிருந்து இன்றுவரை மிசோரத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் விற்கப்படும் போதைப்பொருட்களுக்கான எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மிசோரத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பெண்களை சீர்செய்வதற்கான அமைப்புகள் கிடையாது. இதற்காக பிரசாரம் செய்துவருபவர், உள்ளூர் அமைப்புகளோடும், தேவாலயங்களோடும் இணைந்து செயல்பட்டு வருகிறார். இதுவரை 10 ஆயிரம் பேருக்கு ஆலோசனை வழங்கி அவர்களை போதைப்பழக்கத்திலிருந்து மீட்டுள்ளார். 2007இல் இவர் தொடங்கிய பெண்கள் அமைப்பு மூலம் 167 ஆலோசகர்களை பயிற்சி கொடுத்து உருவாக்கி உள்ளார். நேர்மறையான மாற்றத்திற்கு பாடுபடும் ருவாடிக்கு வாழ்த்துகள்.


நன்றி - ரீடர்ஸ் டைஜஸ்ட்


பிரபலமான இடுகைகள்