புத்தகம் புதுசு! - பழைய ஆடைகளை அணிந்தால் சூழலுக்கு நல்லதா?
இன்று டயட் என்ற வார்த்தையை நினைக்காத ஆட்கள் கிடையாது. வெள்ளையர்கள் இறுக்கிப் பின்னிய நரம்பு நாற்காலி போல இருக்க, இந்தியர்கள் பலருக்கும் வயிறு முன்னே தள்ளிவிட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இந்த டயட் சார்ந்து கோலா, சத்து பானங்கள், மாத்திரைகள், ஊட்டச்சத்து பானங்கள் என பெரும் சந்தை இயங்கி வருகிறது. இதன் மதிப்பு பல கோடிகள் வரும்.
டயட் கலாசார வரலாறு, அதன் தன்மை, பாதிப்புகள் ஆகியவற்றை ஆசிரியர் பல்வேறு நோயாளிகளிடம் பேட்டி கண்டு எழுதி உள்ளார். எனவே டயட் சார்ந்த பல்வேறு போலி நம்பிக்கைகளை நீங்கள் இதன் மூலம் உணர்ந்து வெளியே வரமுடியும்.
அண்ணன்களைக் கொண்ட தம்பிகள் அனைவருக்கும் கிடைப்பது செகண்ட்ஹேண்ட் ஆடைகள்தான். இதுவே உலகம் முழுக்க பெரிய சந்தையாக உள்ளது.. பயன்படுத்திய ஆடைகளை வெளுத்து புதிய துணிகளைப் போல விற்கும் நிறுவனங்கள் இப்போது அதிகமாக உருவாகி வருகின்றன. அடிக்கடி புதிய துணிகள் வாங்கினால் உங்கள் பீரோ தாங்காது. காரணம், பழைய துணிகளை உங்களுக்கு போடவும் மனசு வராது. மயிலாப்பூரிலுள்ள அட்சய பாத்ரா மாதிரியான இடங்கள் உங்கள் பழைய துணிகளை பிறருக்கு கொடுக்க உதவின. உண்மையில் இத்துறை இயற்கைக்கு பாதிப்பின்றி வாழ உதவுகிறதா என இந்த நூலாசிரியர் ஆராய்ந்து எழுதியுள்ளார்.
பெண்கள் உரிமை முதல் உலகப்போர்கள் வரை பல்வேறு விஷயங்களைத் தொகுத்து அவை நம் வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புகளை, விளைவுகளை எழுதி இருக்கின்றனர். இந்த நூலை படித்துவிட்டால் இந்த உலகை முன்பு போல நீங்கள் அணுக மாட்டீர்கள் என்பது நிச்சயம்.
நன்றி - குட் ரீட்ஸ்