பாழடைந்த மாளிகையில் மர்ம கொலை - ஜில் ஜோர்டான் துப்பறிகிறார்





Image result for ஜில் ஜோர்டான் காமிக்ஸ்
பிளேட்பீடியா


ஜில் ஜோர்டான் துப்பறியும்

அலைகளின் ஆலிங்கனம்

லயன் காமிக்ஸ் - நெவர் பிஃபோர் ஸ்பெஷல்

ரூ.400


நிகிடா ஜிக்ஸ் என்ற அரிய பொருட்களை சேகரிப்பவர் லாப்ரான் எனும் இடத்திலுள்ள பாழடைந்த கோட்டைக்குச் செல்கிறார். அவருக்கு அங்கு வரச்சொல்லி ஓர் கடிதம் வந்திருக்கிறது. அதைப் பின்பற்றி வந்தவரைக் காணோம். கார் மட்டும் கடல் நீரில் மூழ்கிக் கிடக்கிறது. இந்த கொலையை விசாரிக்க அவரின் உறவினர் ஹென்றி ஹிக்ஸ் ஜில் ஜோர்டானை நாடுகிறார். அவர் மீதும் ஜோர்டானுக்கு சந்தேகம் இருக்கிறது.
இதன் பின்னால் உள்ள மர்மங்களை கண்டறிய ஜில் ஜோர்டான் குழுவினர் அங்கு செல்கின்றனர்.

இவர்களை விட வேகமாக செயல்படும் கொலையாளி, ஜிக்சை கொன்றுவிட்டு அவரின் சொத்துகளை அடைய முயற்சிக்கிறான். அந்த மறைந்திருக்கும் கொலையாளி யார் என ஜில் ஜோர்டான் யூகம் செய்து செயல்களை ஆராய்ந்து கண்டுபிடித்துவிடுகிறார். இறுதியில் சுபமான முடிவு என்றாலும், ஜிக்ஸை மீட்க முடிவதில்லை. எப்படி குற்றவாளியைக் கண்டுபிடித்தார் என்பது படிக்க சுவாரசியமாக இருக்கிறது.  அரிய பொருட்களுக்கு பதிலாக அந்த இடங்களில் போலியான பொருட்கள் உள்ளன. இதைச் செய்தவர் யார் என்று ஜோர்டான் பல்வேறு நகரங்களுக்கு பயணித்து கண்டுபிடிக்கிறார். இதில் சீரியஸோடு காமெடியும் உண்டு. ஜோர்டானை காமெடி டார்ச்சர் செய்ய லிபெல் என்ற உதவியாளரும், போலீஸ் இன்ஸ்பெக்டரும் உண்டு. பெல்ஜியத்தைச் சேர்ந்த துப்பறிவாளர் உங்களை வசீகரிக்க வைப்பார்.


கோமாளிமேடை டீம்