குழந்தைகள் இடம் மாறினால் வாழ்க்கை என்னவாகும்? - ஆல வைகுந்தபுரம்லோ
ஆல வைகுந்தபுரம்லோ
இயக்கம் திரிவிக்ரம்
ஒளிப்பதிவு - பி.எஸ் வினோத்
இசை - எஸ்எஸ் தமன்
பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான வன்மம் இருக்கும். அவர்கள் அதனை சந்தர்ப்பங்களைப் பொறுத்து வெளிப்படுத்துவார்கள். இப்படத்தில் வால்மீகி என்ற கணக்காளர் தன் வன்மத்தை சரியாகப் பயன்படுத்துகிறார். இதனால் அவரது குழந்தை வசதியாகவும், முதலாளி வீட்டுக்குழந்தை இவரது வீட்டில் பல்வேறு வசைகளை கேட்டும் வளருகிறது. இதனால் இவர்களது வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் கதை.
ஆஹா
சுவாரசியமான கதை. அல்லு அர்ஜூன் பின்னி எடுத்துவிட்டார். பெரும்பாலும் நாயகிகள் பாடலுக்கானவர்கள்தான். வால்மீகியாக நடித்துள்ள முரளி சர்மா அசத்தல். வைகுந்த புர நடிகர்களில் தாத்தாவாக வரும் ஏஆர்கே - சச்சின் கேடேட்கர் பிரமாதமாக நடித்திருக்கிறார். இவருக்கு மகிழ்ச்சி, பெருமை, சோகம் என அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்த வாய்ப்பு உள்ளது. பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
ஜெயராம் தன் பார்வையில் தன் மகன் தன்னைப் போல வேகமாக இல்லையே நடித்துவிடுகிறார். தன் மகனை விட்டுக்கொடுக்காத தன்மையில் தபு பின்னுகிறார்.
வால்மீகியும், ஜெயராமும் கிளர்க்காக ஒரே நேரத்தில் வேலை செய்தாலும் ஜெயராம் தன் திறமையால் வேலையிலும் முன்னுக்கு வருகிறார். தன் சாமர்த்தியத்தால் ஏஆர்கே மகளை திருமணம் செய்து தொழிலும் இயக்குநராகிறார். இதுதான் வால்மீகி மனதில் பொறாமையை ஏற்படுத்துகிறது. குழந்தையை ஓரிரவில் மாற்றி வைத்து விதியை மாற்றிவிட நினைக்கிறார். ஆனால் அது அவருக்கே எதிராக பின்னாளில் மாறுகிறது எப்படி என்பதுதான் கிளைமேக்ஸ். பாடல்கள், பின்னணி என அனைத்திலும் கொடி பறக்கவிட்டிருக்கிறார் தமன்.
வசனங்களிலும் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் பின்னியிருக்கிறார். வாய்ப்பிருந்தால் சப்டைட்டிலுடன் பாருங்கள். உருகிப்போய்விடுவீர்கள்.
ஐயையோ
வில்லனுக்கான அத்தியாயங்கள் அநியாய நீளம். தன் எதிரி யாரென்று தெரிந்துவிட்டால் சட்டென போட்டுத்தள்ளாமல் இருக்கும் சமுத்திரக்கனி செம சோம்பேறி. சுஷாந்த் படத்தில் இருக்கிறார். எந்த பிரயோஜனமுமில்லை. நிவேதாவுக்கும் இதே வார்த்தைதான். வீண்.
ஜாலியாக படம் பார்க்க இந்தப்படத்தைப் பார்க்கலாம்.