2020 இல் விரும்பப்படும் புதிய வேலை வாய்ப்புகள்!



congrats GIF
giphy



2019இல் உற்பத்தி துறை சரிவைச் சந்தித்தது. சேவைத்துறை வளர்ச்சி பெற்றது. இதன் விளைவாக, வேலைவாய்ப்புகள் இல்லாத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. பின்னர், உள்நாட்டு உற்பத்தி குறைந்து பங்குச்சந்தை வீழ்ந்து நாடு 1960 காலகட்ட இந்தியாவாக மாறியது. அதற்கு பல்வேறு சமாதானங்கள் மனதின் குரல் தொடங்கி பேசினாலும் இந்து ராஷ்டிர பணிகள் காரணமாக தொழில் முதலீடுகள் இந்தியாவுக்கு வரவில்லை.

அரசும் பொருளாத வளர்ச்சி தவிர்த்த பிற காரியங்களில் அதிக ஈடுபாடு காட்டியது. தற்போதைய பாஜக அரசு, ஒரு தேர்தலை வென்றவுடன் அடுத்த தேர்தலில் ஜெயிக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கிறதே தவிர உருப்படியான எந்த திட்டங்களையும் கொண்டு வர நினைக்கவில்லை. உலகளவில் உருவாகும் புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய பட்டியல் இது. இவை இந்தியாவில் உருவாகுமா என்று கேட்டால் யாமறியேன் பராபரமே...

டேட்டா சயின்டிஸ்ட் - இயந்திர வழிக் கற்றல் அது தொடர்பான அப்ளிகேஷன்களை உருவாக்கும் பணி.


ஏஐஆப்ஸ் - AIOps

தகவல் தொடர்புக்கான செயற்கை நுண்ணறிவு மேம்படுத்தல் தொடர்பான பணிகளை செய்வது. பல்வேறு அமைப்புகளிலுள்ள பிக் டேட்டா விஷயங்களை ஆராய்ந்து பெறுவது.

டேவ்ஆப்ஸ் -DevOps

இந்த துறை சார்ந்த பொறியியலாளரின் பணி, மக்களுக்குத் தேவைப்படும் பொருட்கள் சார்ந்த அப்டேட்டுகளைக் கொடுப்பதுதான்.

ஃபுல் ஸ்டாக் மேம்பாட்டாளர்

கணினி மொழிகளில் ஃபிரன்ட் எண்ட் மற்றும் பேக் எண்ட் வகை வல்லுநர்களைக் குறிப்பிடலாம்.

மீன் ஸ்டாக் மேம்பாட்டாளர் - MEAN stack developer

ஜாவா தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர் பணி.


ஏஆர் விஆர் மேம்பாட்டாளர்

பல்வேறு துறைசார்ந்த பிரச்னைகளுக்கு கலப்பு மெய்நிகர் காட்சி உலகம் சார்ந்து தீர்வுகளைத் தருவது.


செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டாளர்

பல்வேறு வணிகம் சார்ந்த சிக்கல்களை தீர்க்கும் பணி இது.

மேலாளர்

வாடிக்கையாளர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டு பொருட்களை மேம்படுத்துவது இவர்களின் பணி. விற்பனை, பொருட்கள் பற்றிய விமர்சனங்களை ஆராய்வதும் இவர்கள்தான்.

நன்றி - டைம்ஸ் 1, 2020


\





பிரபலமான இடுகைகள்