கொரோனா வைரஸ் பாதிப்பு - தெரிஞ்சுக்கோ டேட்டா




Image result for coronavirus



தெரிஞ்சுக்கோ


கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுக்க பரவி வருகிறது. மருந்து நிறுவன பங்குதாரரான பில்கேட்ஸ் மனம் முழுக்க மகிழ்ச்சியுடன் இதைப் பார்த்துக்கொண்டு இருப்பார். சீனாவில் நூற்றுக்கும் மேலான மக்கள் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் சீனாவிலிருந்து வந்த அறுபதிற்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதுபற்றிய தகவல்களைப் பார்ப்போம்.

கொரோனா வைரஸில் ஏழு வகைகள் உண்டு. அத்தனையும் மனிதர்களை தாக்கி கொல்லும்.

வுகான், ஹியூபெய் ஆகிய நகரங்களில் உள்ள மக்கள் தொகை 35 மில்லியன் ஆகும். வைரஸ் பிரச்னையால் இவர்கள் வேறு இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரசிற்கு முன்பே சார்ஸ் பாதிப்பால் 774 பேர் பலியாகி உள்ளனர்.

2012ஆம் ஆண்டு மெர்ஸ் பாதிப்பில் 858 பேர் வைகுந்தம் சேர்ந்தார்கள்.

2019-2020 ஃப்ளூ காய்ச்சல் சீசனில் 8,500 முதல் 20 ஆயிரம் பேர் வரை இக்காய்ச்சலுக்கு பலியானார்கள்.

உலகம் முழுக்க நிமோனியா காய்ச்சலின் அறிகுறிகளை ஏற்படுத்தி மக்களை தாக்கி வருகிறது கொரோனா வைரஸ். பாதிப்பின் அளவு 33 சதவீதம்.

சார்ஸ் உடன் கொரோனா வைரஸ் ஒத்துப்போகும் அளவு 70%. மெர்ஸ் உடன் ஒத்துப்போகும் அளவு 40%


நன்றி - க்வார்ட்ஸ் 

பிரபலமான இடுகைகள்