மன்மதனுக்கு குடும்பம் உருவாகிறது - மன்மதுடு 2
மன்மதுடு - தெலுங்கு
இயக்கம் - ராகுல் ரவீந்திரன்
கதை - கிட்டு விசாபிரகடா
திரைக்கதை - சத்யானந்த்
இசை - சைத்தன் பரத்வாஜ்
ஒளிப்பதிவு - எம். சுகுமார்
திரை மூலம் - ரென்ட் எ வொய்ப் - பிரெஞ்சு
பிரெஞ்சு படத்தை உரிமை பெற்று தெலுங்கு படமாக்கியிருக்கிறார்கள். படம் முழுக்க போர்ச்சுக்கலில் நடைபெறுகிறது. அங்கு பர்ஃப்யூம் தயாரிப்பாளராக இருக்கும் நாகர்ஜூனாவுக்கு காதலில் நம்பிக்கை கிடையாது. பெண்கள் ஒரு இரவுக்கு மட்டுமே ஆனவர்கள் என்பது அவர் நம்பிக்கை. ஆனால் அவரது அம்மா, சகோதரிகள் எல்லோரும் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்க்கிறார்கள். ஆனால் நாகர்ஜூனாவுக்கு எதுவும் ஒத்துவரவில்லை. அதேசமயம் அவருக்கு திருமண பிரச்னையிலிருந்தும் மீள வேண்டும். இதற்காகவே, ரகுலை காசுக்கு காதலியாக ஒப்பந்தம் செய்கிறார். இவரை நாகர்ஜூனாவின் அம்மாவுக்கு மிகவும் பிடித்துப்போகிறது. இதனால் நேரும் காமெடி, நெகிழ்ச்சி, அழுகை, சண்டை இவைதான் மன்மதுடு 2
ஆஹா...
ராகுல் ரவீந்திரன் இயக்குநராக நம்பவேமுடியாதபடி படத்தை நன்றாக எடுத்திருக்கிறார். நடிக்கிற படங்களில் சுமாராக நடித்தாலும் இயக்குநர் சேரில் கிரிப்பாக அமர்ந்திருக்கிறார். நாகர்ஜூனாதான் படம் முழுக்க வியாபித்து இருக்கிறார். இவரும் வெண்ணிலா கிஷோரும் வரும் காட்சிகள் பிரமாதமாக எடுத்திருக்கின்றனர். காமெடி, நாகார்ஜூனாவின் வயதை வைத்தே செய்திருக்கிறார்கள்.
ஐயையோ
ரகுல் காட்சிகள் சிலசமயங்களில் பொறுமையை சோதிக்கின்றன. மற்றபடி படத்தின் சிறப்பு கதாபாத்திரங்கள் கூட நடிக்க முயன்றுள்ளனர்.
குடும்பத்தை மன்மதன் மதிக்கவேண்டும் என்று சொல்லி முடிகிறது இந்த படம். பிரெஞ்சு மூலம் என்றாலும் திரைக்கதை, வசனம் ஆகியவற்றில் சிறப்பாக எழுதி இயக்கியிருக்கிறார் ராகுல்.
ஜாலியாக ரசித்துப் பார்க்கலாம்.
கோமாளிமேடை டீம்