இடுகைகள்

கேரள அரசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மருத்துவராகப் போராடும் செரிபெரல் பால்சி குறைபாடு கொண்ட மாணவி! - இது கேரளத்தில் நடைபெறும் துயரம்

படம்
             sample picture     செரிபெரல் பால்சியோடு போராடும் மாணவி மூளையைப் பாதிக்கும் ஸ்பாஸ்டிக் செரிபெரல் பால்சி எனும் குறைபாடுடன் பிறந்தவர் அஸ்வதியிஸ் . இவர் பிறந்து 52 நாட்களில் தனது பெற்றோரை இழந்தார் . கேரளத்தில் மலப்புரத்தை பூர்வீகமாக கொண்டவர் இவர் . பல்வேறு சிரமங்களுடன் படித்து நீட் தேர்வு எழுதியவர் 3,44,859 என்ற ரேங்கைப் பெற்றார் . மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர் விண்ணப்பித்தார் . ஆனால் இவருக்கு மருத்துவப்படிப்பை படிப்பதற்கான தகுதி இல்லை என்று கூறி அரசு அவரை படிப்பில் சேர்க்க மறுத்துவிட்டது . சாதாரணமானவர்கள் என்றால் மனம் தளர்ந்து போயிருப்பார்கள் . ஆனால் அஸ்வதியிஸ் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை . கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் . வழக்கில் அவருக்கு தனியாக சிறப்பு சோதனை ஒன்றை நடத்த நீதிமன்றம் ஆணையிட்டது . ஓடுவதில் , குதிப்பதில் , நடப்பதில் பிரச்னை இருந்தது . ஆனால் பொருட்களை கையாளுவதில் திறன் இருந்தது . டிசம்பர் மாதம் 2020 ஆம் ஆண்டு வழக்கில் தீர்ப்பு வந்தததால் மருத்துவக்கல்லூரியில் படிப்பதற்காக சேர்ந்த