இடுகைகள்

ராதா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கள்ளக்கடத்தல் செய்யும் நாயகன் திருந்தி வாழ நினைக்கும்போது ஏற்படும் விளைவுகள்!

படம்
  உள்ளத்தில் நல்ல உள்ளம்  விஜயகாந்த், ராதா, ராதாரவி, வினுசக்ரவர்த்தி இயக்கம் மணிவண்ணன் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து நைனாவின் உதவியால் கள்ளக்கடத்தல் தொழிலுக்குள் நுழையும் ஒருவன், காதல்வயப்பட்டு தனது தொழிலை கைவிட முயன்றால் என்ன நடக்கும் என்பதே கதை.  சுபமாக முடியும் கதை கிடையாது. அதை முதலிலேயே கூறிவிடுகிறேன். படத்தில் அந்தமோசமான முடிவுக்கு நைனா பாத்திரம் மூலம் ஏற்கெனவே நம்மை தயார்படுத்திவிடுகிறார்கள். அதனால் பெரிய ஆச்சரியம் ஏதுமில்லை, மைக்கேல்ராஜ் என்பவர், கடலை ஒட்டியுள்ள ஊரில் கள்ளக்கடத்தல் செய்கிறார். அதில் கிடைக்கும் பணத்தை காவல்துறை அதிகாரிகளுக்கு கொடுக்கிறார். இதனால் அவர் செய்வதை காவல்துறை கண்டுகொள்வதில்லை. அங்கு புதிதாக வரும் இன்ஸ்பெக்டர் ஷீலா இதை தடுக்க நினைக்கிறார். இவரை மைக்கேல்ராஜ் பெரிதாக தடுக்கநினைப்பதில்லை. கல்யாணம் செய்துகொள்ள நினைக்கிறார். உண்மையில் அவர் யார் என்பது சற்று சுவாரசியமாக உள்ளது.  நைனாவிடம் தொழில் கற்றவரான மைக்கேல் ராஜ், தான்செய்யும் தொழிலை நியாயப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.இறுதியாக அவரோடு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த, இப்போதைக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள ஷீலா சொல்

அப்பாவின் முன்கோபத்தால் திருடனாக மாறும் மகன் - கூண்டா - சிரஞ்சீவி, ராவ் கோபால் ராவ், ராதா

படம்
  கூண்டா  சிரஞ்சீவி, ராதா, சைகலா நாராயணா  இயக்கம் - கோதண்டராமி ரெட்டி இசை கே சக்ரவர்த்தி கொல்கத்தாவில் தொடங்கும் கதை, ஆந்திரத்தின் ஹைதராபாத்தில் முடிவடைகிறது. கொல்கத்தாவில் காளிதாஸ் என புகழ்பெற்ற நகை கொள்ளையன் தனது வளர்ப்பு தந்தையோடு வாழ்கிறான். வளர்ப்புத்தந்தைக்கு திருட்டுதான் தொழில். அதில் சாதிக்கும்படி காளிதாசுக்கு பயிற்சி கொடுக்கிறார்.அ வனும் வளர்ந்து, வளர்ப்புத்தந்தையின் வணிகத்தை பெருமளவு வளர்த்துக்கொடுக்கிறான். இந்த நிலையில் வளர்ப்புத் தந்தையின் தொழிலை யார் தொடருவது என காளிதாசுக்கும், வளர்ப்புத்தந்தையின் மருமகன் காசிராமுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதில் தோற்றுப்போகும் காசிராம் காளிதாசை கொலைசெய்ய நேரம் பார்த்து காத்திருக்கிறான். இந்தநேரத்தில் வளர்ப்புத்தந்தை விபத்து ஒன்றில் இறக்க, அங்கிருந்து கிளம்பும் காளிதாஸ் ஹைதராபாத்திற்கு வேலை தேடி வருகிறான். அ்ங்கு எஸ் பி ஒருவரை ரயில் சந்திக்கிறான். அவரை கொல்ல முயல்பவர்களை விரட்டுகிறான். பிறகு அவர் வீட்டில் தங்கி வேலை தேடுகிறான். உண்மையில் அந்த எஸ்பி யார், காளிதாசின் சிறுவயது, அவனது பெற்றோர் யார் என்பதை படம் விவரிக்கிறது.  மேற்சொன்னபடியும் கதை

அநீதி வில்லன்களை எதிர்க்கும் பொறுப்பான திருடன் - சிரஞ்சீவி, ராதா

படம்
  தொங்கா  சிரஞ்சீவி, ராதா மற்றும் பலர்  யூசுவலான பழிக்குப்பழி கதைதான். அதையே சீரியல் போல மாற்றி வள வளவென இழுத்து பிறகு சுபம் போட்டிருக்கிறார்கள்.  சிரஞ்சீவி கார்களைத் திருடுவது, பணத்தை கொள்ளையடிப்பவர்களிடமிருந்து கொள்ளையடிப்பது என செய்து பிழைக்கிறார். இன்னொரு விஷயம், அவர் தனது குடும்பத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார். திருடர் என்றாலும் அவர் ஒரு லட்சியவாதி. திருடும் பணத்தில் தனது மெக்கானிக் நண்பனுக்கும், தனக்கு கொஞ்சம் வைத்துக்கொண்டு மீதியை அனாதை இல்லங்களுக்கு கொடுத்துவிடுகிறார். எவ்வளவு நல்ல மனசு பாருங்க சாரே! ஊரில் இரண்டு பணக்கார ர்கள் இருக்கிறார்கள். அத்தனையும் கடத்தல், பிறரை ஏமாற்றுதல் செய்தே சம்பாதித்தது. அவர்களிடம் உள்ள சொத்துக்களை தன் பக்கம் இழுத்து அவர்களை கதறவிட நினைக்கிறார். ஏன் அப்படி செய்கிறார் என்றால் நிச்சயம் அதற்கான ஃபிளாஷ்பேக் சொல்லித்தானே ஆகவேண்டும். அதை முதலிலேயே சொல்லிவிடுவதால், கதையில் புதிய பாத்திரங்களைக் கொண்டு வந்து கதையை இழுக்கிறார்கள்.  வருமானவரித்துறை அதிகாரி விஸ்வநாதன், அடுத்து இன்ஸ்பெக்டர். விஸ்வநாதனை தூண்டிவிட்டுத்தான் ஊரின் இரு பணக்காரர்களையும் பீதி அடைய வைக்கி