இடுகைகள்

டைட்டானியம் ஆக்சைடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டைட்டானியம் ஆக்சைடு உடல்நலனை பாதிக்குமா?

படம்
டைட்டானியம் ஆக்சைடு மணமற்ற பவுடர் ஆகும். இதனை பொருட்களுக்கு சிறப்பான நிறத்தைத் தர பற்பசை, மிட்டாய்கள், சன்ஸ்க்ரீன் க்ரீம்கள், காபி க்ரீம்கள்  ஆகியவற்றில் சேர்க்கிறார்கள். இதன் பயன்பாடு அதிகமாகும் போது தோலில் சிறியளவு எரிச்சல் ஏற்படும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பொதுவாக உணவின் நிறம், தரத்தின் மேம்பாட்டிற்காக டைட்டானியம் ஆக்சைடை தூய வடிவில் சேர்க்கிறார்கள். பொதுவாக அனைத்து சாக்லெட்டுகளிலும், சூயிங்கம்மிலும் இந்த பொருள் சேர்க்கப்படுகிறது. பொருட்களை அதிக நாட்கள் பயன்படுத்தவும் இந்த வேதிப்பொருள் உதவுகிறது. பழங்களிலுள்ள எத்திலீன் அதிகரிப்பை குறைத்து பழங்கள் வேகமாக பழுப்பதைக் குறைக்கிறது. டைட்டானிம் ஆக்சைடு முக்கியமாக பயன்படுவது அழகுசாதனப் பொருட்களில்தான். இதில் பல்வேறு பொருட்களில் நிறத்தை அதிகரிக்கவும், புற ஊதாக்கதிர்களைத் தடுக்கும் க்ரீம்களிலும் பயன்படுகிறது. உணவுத்துறையில் இதன் பங்கு குறைவு. உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டுத்துறை இதனை பயன்படுத்த அனுமதித்துள்ளது. ஆனால் டைட்டானியம் ஆக்சைடு புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளில் ஒன்