இடுகைகள்

டெக் - ஃபான்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காமிக் சன்ஸ் ஃபான்ட் மீது வெறுப்பு ஏன்?

படம்
மைக்ரோசாப்ட் கம்யூட்டர்களுக்காக வின்சென்ட் கானரே கண்டுபிடித்த எழுத்துருதான் டைப்ஃபேஸ் காமிக் சன்ஸ். 1994 ஆம் ஆண்டு கண்டுபிடித்தபோது அதனை யாரும் குற்றம் சொல்லவில்லை. காமிக் நூல்களுக்கான எழுத்துரு போல அமைந்திருந்தது காமிக் சன்ஸ்.  “காமிக் நாய்களுக்கு வைக்கப்படும் பலூன்களில் வசனங்களை டைம்ஸ் நியூ ரோமனில் வைக்க முடியாது” என்றார் வின்சென்ட். விண்டோஸில் அனிமேஷனில் வந்த நாய் இந்த எழுத்துருவைக் கொண்டு மக்களுக்கு வழிகாட்டியது. வின்சென்ட் குழந்தைகளுக்காகவே இந்த எழுத்துருவை வடிவமைத்தார். அனைவருக்குமான எழுத்துரு அல்ல என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.  ஆனால் நினைத்து பார்க்க முடியாத விஷயங்கள் நடப்பதுதானே வாழ்க்கை. காமிக் சன்ஸ், வின்சென்டே நினைத்து பார்க்க முடியாதபடி விளம்பரங்களில் ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து 2002 ஆம் ஆண்டு ban comic sans என்ற குழு இந்த எழுத்துருவை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அதனை ஏளனப்படுத்த தொடங்கியது. வின்சென்ட் அதனை இயல்பான நகைச்சுவையோடு நான் பாடிகார்டாக மாறி என் எழுதுத்துருவை காப்பேன் என லண்டன் மியூசியத்தில் பேட்டி தட்டினார்.  காமிக் ச