காமிக் சன்ஸ் ஃபான்ட் மீது வெறுப்பு ஏன்?



மைக்ரோசாப்ட் கம்யூட்டர்களுக்காக வின்சென்ட் கானரே கண்டுபிடித்த எழுத்துருதான் டைப்ஃபேஸ் காமிக் சன்ஸ். 1994 ஆம் ஆண்டு கண்டுபிடித்தபோது அதனை யாரும் குற்றம் சொல்லவில்லை. காமிக் நூல்களுக்கான எழுத்துரு போல அமைந்திருந்தது காமிக் சன்ஸ். 

“காமிக் நாய்களுக்கு வைக்கப்படும் பலூன்களில் வசனங்களை டைம்ஸ் நியூ ரோமனில் வைக்க முடியாது” என்றார் வின்சென்ட். விண்டோஸில் அனிமேஷனில் வந்த நாய் இந்த எழுத்துருவைக் கொண்டு மக்களுக்கு வழிகாட்டியது. வின்சென்ட் குழந்தைகளுக்காகவே இந்த எழுத்துருவை வடிவமைத்தார். அனைவருக்குமான எழுத்துரு அல்ல என்பதில் அவர் தெளிவாக இருந்தார். 


ஆனால் நினைத்து பார்க்க முடியாத விஷயங்கள் நடப்பதுதானே வாழ்க்கை. காமிக் சன்ஸ், வின்சென்டே நினைத்து பார்க்க முடியாதபடி விளம்பரங்களில் ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து 2002 ஆம் ஆண்டு ban comic sans என்ற குழு இந்த எழுத்துருவை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அதனை ஏளனப்படுத்த தொடங்கியது. வின்சென்ட் அதனை இயல்பான நகைச்சுவையோடு நான் பாடிகார்டாக மாறி என் எழுதுத்துருவை காப்பேன் என லண்டன் மியூசியத்தில் பேட்டி தட்டினார். 


காமிக் சன்ஸ் உருவாக்கப்பட்டு முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது அதன் பயன்பாடும் சுருங்கி விட்டதுதான். காரணம் புதிய எழுத்துருக்கள் இலவசமாக கிடைக்கின்றன. இன்று காமிக் சன்ஸிற்கான தேவை முடிந்துவிட்டதாக மக்கள் நினைக்கின்றனர். 

“எழுத்துரு என்பது உற்சாகப்படுத்துவதாக சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கவேண்டுமென மக்கள் நினைக்கின்றனர்” என்கிறார் விசிட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பார்பரா சபாரோ. குறிப்பிட்ட வாய்ப்புகள் இல்லாதபோது வீட்டுக்கணினியை ஆர்வத்தில் குடைபவர்கள் பயன்படுத்தியபோது காமிக் சன்ஸ் பெரும் புகழ் பெற்றது. சூப்பர் மார்க்கெட் தொடங்கி சலூன் விளம்பரம் வரை அனைத்தும் காமிக் சன்ஸ் எழுத்துருதான். ஆனால் இன்று குறிப்பிட்ட விஷயங்களுக்கு என தனித்தனியாக எழுத்துருக்கள் சந்தையில் கிடைக்கின்றன. 


தற்போது காமிக் சன்ஸ் எழுத்துருவை உருவாக்கிய வின்சென்ட் , பிரான்ஸ்நாட்டில் வசிக்கிறார். “என்னைப் பார்த்து பேசுபவர்கள் இன்றும் காமிக் சன்ஸை புகழ்கிறார்கள்” என ஆலிவ் மரங்களிடையே நடந்துகொண்டே பேசுகிறார். காலம் உங்கள் பெயர் சொல்லும் வின்சென்ட். 

நன்றி:லிவ் சயின்ஸ்.