பூனை சிரிக்குமா?

ஏன்?எதற்கு?எப்படி?
பூனை சிரிக்குமா?
புலியின் வம்சாவளியான பூனை 96 பட இயக்குநர் ச.பிரேம்குமார் கூறியது போல ராஜா போலத்தான் தன்னை நினைத்துக்கொள்ளும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதன் சேவகன்தான். பூனை சிரிக்குமா என்றால் சோம்பல் முறித்து உதட்டு முடிகளை சரிசெய்யும் போது சிரிப்பது போல தோன்றலாம். ஆனால் அது உண்மையல்ல.
உரிமையாய் பால்சோறு கேட்டு சாப்பிட்டு தூங்கிவிட்டு ராஜநடை போடும் பூனை சிரிக்குமா என்றால் நான் பார்த்தவரை கிடையாது. பிரச்னையில்லை, நீங்கள் பார்த்தால் கூட மின் மடலிடுங்கள். பதிவு செய்துவிடுவோம்.