தொல்எலும்புகளின் சுவை எப்படி?
அர்கன்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஜெனிஃபர் |
ஏன்?எதற்கு?எப்படிழ
மிஸ்டர். ரோனி
தொல்பொருட்களை சுவைத்தால் எப்படியிருக்கும்?
இதென்ன யுனிபிக் பிஸ்கட்டா, வாங்கும் விலைக்கேற்ப ரசித்து சாப்பிட? முதலில் சாப்பிட வாயருகில் கொண்டுவருவதே பெரிய சாதனை. ஆனால் மனிதர்களில் சிறப்புத்தகுதி கொண்ட அகழாய்வு மனிதர்கள் இதுபோல கிறுக்குத்தனங்களை அடிக்கடி செய்வதுண்டு.
பொதுவாக எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்கும். அதுசார்ந்து உப்புச்சுவையோடு டைனோசர் எலும்புகள் ருசிக்கும். உடனே வாயைக் கொப்புளித்து விடுவது டின்னருக்கு நல்லது. ஜெனிபரைப் பாருங்கள். கற்றுக்கொண்டு எலும்புகளை சுவையுங்கள்.
நன்றி: க்யூரியாசிட்டி