பாலினப்பாகுபாடு அதிகரித்துள்ளது!
பாலினப் பாகுபாடு பயங்கரம்!
இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாலினப்பாகுபாடு தீவிரமாக உள்ளது என்பதை நிதி ஆயோக் அமைப்பு தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பெண்களுக்கு பாரபட்ச அணுகுமுறை உள்ளதாக நிதி ஆயோக் கருத்து தெரிவித்துள்ளது. 2001 ஆம் ஆண்டில் 927 என்ற பெண்களின் எண்ணிக்கை 2011 ஆம் ஆண்டு 919 என்ற எண்ணிக்கையாக குறைந்துள்ளது. கல்வி அறிவில் ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்கள் 65 சதவிகிதம்தான் என்கிறது நிதி ஆயோக் அறிக்கை.