இழுத்து மூடிய கதவு!




Image result for shutdown us








இழுத்து மூடிய கதவு! - ட்ரம்ப்பின் நோக்கம் என்ன?

அமெரிக்க அரசின் செயல்பாடுகளை ட்ரம்ப் தலைமையிலான அரசு நிறுத்தி 23 நாட்களுக்கு மேலாகின்றன. குடியரசுக்கட்சியைச் சேர்ந்த அதிபர் ட்ரம்பின் மூர்க்கமான நடவடிக்கையால் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஊதியமின்றி வேலை செய்யும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். எதற்கு இந்த நடவடிக்கை?

அமெரிக்கா - மெக்சிகோ இடையே சுவர் கட்டுவதற்குத்தான். இதற்கான தோராய செலவு 5.7 பில்லியன் டாலர்கள். இத்தொகையை ட்ரம்ப் பெறுவதை ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் தடுத்து வருகின்றனர். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என ஷங்கர் படம் போல கருத்து கேட்பதுதானே அமெரிக்காவின் வழக்கம்? யெஸ். அதேபோல ஏபிசி நியூஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் ட்ரம்ப் வழுக்கி விழுந்துள்ளார். ஏறத்தாழ அமெரிக்க மக்கள் 53% ட்ரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னே பலரும் ஏர்போர்ட் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் இழுத்து மூடினால் எப்படி?

தேர்தல் வாக்குறுதியாக ட்ரம்ப் சொன்ன வாக்குறுதிதான் இது. ஆனால் செலவிடுவது மக்கள் பணம் என சபையில் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் மசோதாவை நிறுத்தி வைக்க, ட்ரம்ப் கண்சிவந்து ஷட் டவுன் என சொல்லி அரசு சேவைகளை நிறுத்தி ஜனநாயக கட்சியை பணிய வைக்க முயற்சித்து வருகிறார். ஜனநாயக கட்சி தலைவர்களில் ஒருவரான பெலோசி, சுவர் கட்டும் திட்டத்தை வேஸ்ட் என சொல்லிவிட்டார். ஆனால் ட்ரம்ப் மனம் தளராமல் இருக்கிறார்.

நன்றி: கார்டியன்.காம்

பிரபலமான இடுகைகள்