டிஜிலாக்கர் எதற்கு?





Image result for digilocker


டிஜிலாக்கரில் மதிப்பெண் பட்டியலை பெறலாம்!

ரயிலில் செல்லும் போது அடையாள அட்டை கொண்டு செல்ல மறந்தவர்களின் தவிப்பு,  போக்குவரத்து காவலரிடம் லைசென்ஸ் இன்றி அபராதம் கட்டிய சங்கடம் உள்ளிட்ட அனுபவங்களை கண்முன்னே பார்த்திருப்பீர்கள். இப்பிரச்னையைத் தீர்க்க உதவுகிறது டிஜிலாக்கர் எனும் ஆன்லைன் ஆவண காப்பக வசதி. இந்திய அரசின் மேக கணிய வசதிகொண்ட டிஜிலாக்கர் இணையதளத்தில் உங்களுடைய ஆதார், குடும்ப அட்டை ஏன் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் மதிப்பெண் பட்டியலைக்கூட இதில் சேமித்து வைக்கமுடியும்.

அரசு அங்கீகாரம் பெற்றது என்பதால் இதனை  உரிய பதிவு எண்ணுடன் திறந்து ஆவணங்களைக் காட்டினாலே போதும். ரயில்வே மற்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் டிஜிலாக்கர் கோப்புகளை முறையான அரசு ஆதாரங்களாக ஏற்கத்தொடங்கியுள்ளனர். டிஜி லாக்கரை கோடக், ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகள் பணப்பரிமாற்றத்திற்கு ஏற்கின்றன. 
“டிஜி லாக்கரில் உள்ள PIN எண் ,பயனர்களின் பாதுகாப்புக்காக. அதிலுள்ள பிரச்னைகளை பயனரின் பாதுகாப்பை சமரசம் செய்யாமல் விரைவில் தீர்ப்போம்” என்கிறார்  டிஜிலாக்கர் திட்ட இயக்குநரும் தொழில்நுட்ப வல்லுநருமான டெபபர்த்தா நாயக்.  சில மாநில போக்குவரத்துதுறை மற்றும் விமானத்துறை டிஜி லாக்கரை ஏற்காததற்கு காரணம், அது குறித்த விழிப்புணர்வு இல்லாததுதான் என்கிறது அரசு வட்டாரம்.

ஒரு டெராபைட் சேமிப்பு வசதியுள்ள டிஜி லாக்கரில் Jpeg, Png,Pdf  வடிவில் ஆவணங்களை சேமிப்பதோடு அதனை எளிதில் அணுகுவதற்கான அனுமதியையும் பயனர்கள் பெறுவது அவசியம். டிஜி லாக்கரில் இதுவரை  1 கோடியே 70 லட்சத்து 25 ஆயிரத்து 902 பேர் பதிவு செய்துள்ளனர். பதிவேற்றப்பட்டுள்ள ஆவணங்களின் எண்ணிக்கை 2 கோடியே 26 லட்சத்து 5 ஆயிரத்து 959.  பதிவு செய்ய:  https://digilocker.gov.in/



பிரபலமான இடுகைகள்