அடுத்த நொடியை நம்மால் தீர்மானிக்க முடியாது - லிசா ரே






Image result for lisa ray



லிசா ரே, கேன்சரால் பாதிக்கப்பட்டு உயிருடன் மீண்டிருக்கிறார். தற்போது 4 மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் என்ற அமேசான் ப்ரைம் தொடரில் நடிக்கவிருக்கிறார்.

2018 ஆம் ஆண்டு உங்களுடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக நீங்கள் தாயானது, நடிப்பு ஆகியவை....

ஜார்ஜியாவிலுள்ள காகஸ் மலைத்தொடருக்கு சென்று வந்தது அருமையாக இருந்தது. என் குழந்தைகளுடன் சென்று வந்த பயணம் அது. 2009 ஆம் ஆண்டு மைலோமா புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்ட நொடி தொடங்கி 2012 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டம் நெருக்கடியான நிலைகளைக் கொண்டது.

2018 ஆம் ஆண்டு என் குழந்தைகளை பிரசவித்தேன். மகிழ்ச்சியான நிகழ்வு அது. பொறுப்பு, தகவல் தொடர்பு என நிறைய விஷயங்கள் மாறியுள்ளன.

குறிப்பிட்ட விதிகளின்படி வாழ்கிறீர்கள் என்று கூறியுள்ளீர்கள். அதைப்பற்றி விளக்குங்கள். 

நான் நடிகை என்பதை என் ஆழ்மனம் ஏற்க மறுக்கிறது. புற்றுநோய் சம்பந்தமான கட்டுரைகள், அனுபவங்களை முன்னமே நான் எழுதியுள்ளேன். யெல்லோ டையரீஸ் என்ற நூலை நீங்கள் படித்திருக்க கூடும்.

மேலும் பல்வேறு மேடைகளில் புற்றுநோய் பற்றிய தன்னம்பிக்கை பேச்சுகளை நிகழ்த்தியுள்ளேன். இவையெல்லாம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகள்.

இரு குழந்தைகளுக்கு தாயாகி உள்ளது எப்படி உள்ளது? 

நான் யார் என்பதை என் குழந்தைகள்தான் நினைவூட்டுகிறார்கள்.  என் முகத்தில் சிறுவிரல்களை பதித்து, கூந்தலைப்பற்றி விளையாடும் அவர்கள் தங்களின் உடல்மொழியில் எனக்கு கதைகளை கூற முயற்சிக்கின்றனர். அவர்களின் மனவேகத்திற்கு ஏற்ப என்னை தயாரிக்க முயற்சித்து வருகிறேன். அவர்களுடன் இருக்கும் நொடியும் கூட எனக்கு பரிசாக கிடைத்ததாகவே நினைக்கிறேன்.

உங்கள் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயங்கள் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?

பெரிய திட்டங்களிட்டு அதனை செய்ய நினைக்கவில்லை. நாம் எதையும் கட்டுப்படுத்த முடியாது என்பதே உண்மை. ஆனால் நாம் நம்பும் விஷயங்கள், நம்பிக்கைகள் அடுத்தடுத்த விஷயங்களை தீர்மானிக்க உதவும். மகிழ்ச்சியும் அமைதியும் எனக்கு இப்படித்தான் கிடைத்தன.

தமிழில்: ச.அன்பரசு
நன்றி: இன்டல்ஜ், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்(சோனாலி செனாய்)