சந்தையில் அசத்தும் டெக் சமாச்சாரங்கள்




Image result for apple watch series 4


டெக் பொருட்கள்!

 DJI Mavic Zoom 2

திரைப்பட ஒளிப்பதிவாளர்களை எளிதில் கவரும் ட்ரோன் ஜூம் கேமரா. 31 நிமிடங்கள் பேட்டரி சக்தியில் செயல்படும் ட்ரோன் விமானம் 72 கி.மீ வேகத்தில் பறந்து படமெடுக்கும் திறன் கொண்டது.  விலை ரூ. 79,490.

Apple Watch Series 4

இதயத்துடிப்பைக் கண்காணிக்கும் இசிஜி மானிட்டர் வசதி, ஆப்பிள் வாட்ச்சை மதிப்பற்ற கேட்ஜெட் ஆக்கியுள்ளது. வேகமான புரோசஸர், ஸ்லிம் வடிவமைப்பு எவரையும் வசீகரிக்கும். விலை ரூ.27,943

Google Home Hub

வீட்டை ஸ்மார்ட் வீடாக்க கூகுள் ஹோம் ஹப் உதவும். நெட்ஃபிளிக்ஸ், யூட்யூபில் உள்ள வீடியோக்களைக் காண்பதற்கான வசதிகளும் இதில் உண்டு. கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் இதனை இயக்கலாம். விலை ரூ. 9,034

 Xbox Adaptive Controller

கம்ப்யூட்டர் கேம் விளையாடுபவர்களிலும் மாற்றுத்திறனாளிகள் உண்டு. ஸ்பெஷலாக அவர்களுக்கென உருவாக்கிய எக்ஸ் பாக்ஸின் கன்சோல் . எக்ஸ்பாக்ஸ் 1, விண்டோஸ் 10 ஆகியவற்றில் செயல்படும் இக்கருவி கையாள எளிதாக பெரிய D-Pad பட்டன்கள், ஜாய்ஸ்டிக்குகளை இணைக்கும் போர்ட்களைக் கொண்டுள்ளது. ரூ.6,928