மழையரசி - அன்லிமிடெட் காதல் சுனாமி
மழையரசி - இ.எஸ்.லலிதாமதி
அன்லிமிடெட் காதல் நினைவுகளோடு மழை ஈரத்தோடு எழுதியுள்ளார் கவிஞர். ஆனாலும் வலிய கைபிடித்து கவிதை நூலை திணித்துவிட்டார்கள். விமர்சனம் எழுதிவிட அப்போதே துணிச்சல் வந்துவிட்டது. காதல், தனிமை, அழைப்பை தள்ளிப்போடுவது, காதல் பொறாமை, விரக்தி என கவிதை நூல் எழுத என்ன தேவையோ அத்தனையும் இருக்கிறது.
தமிழ் இலக்கணத்தை வைத்தே காதல் சொல்லிய கவிதை அருமை. அன்பின் மறுபக்கம் வெறுப்பை என்பதை அழுத்தமாக சொல்லி அன்பு அடிமை விஷம் கவிதை கவிஞரின் பெயர் சொல்லும் கவிதை.
காதலின் வெறுமையைச் சொல்லு நிலா எனக்கு நெருக்கம் கவிதை மென்மையான காதலை இயற்கையின் இதமான காதலுடன் சொல்லிச் செல்கிறது. இதோடு குழந்தைகள் நிறைந்த வீடு, பறவைகளின் நினைவிலுள்ள கூடு ஆகியவையும் லலிதாமதியின் எழுத்துக்களில் குறிப்பிடத்தகுந்த கவிதை.
எழுதி முடிக்கும்போது பக்கத்து சீட் நண்பர் கேட்டார். ரொம்ப ஃபீலிங்கா இருக்குமே, அதனால்தான் நான் படிக்கிறதே இல்லை என அப்படி ஒரு சிரிப்பு சிரித்தார். என்ன காரணமோ தெரியவில்லை. நான் எந்த பதிலும் சொல்லவில்லை.
- கா.சி.வின்சென்ட்
நன்றி: பாலகிருஷ்ணன்