விண்வெளியில் ரேடியோ சிக்னல்?
ரேடியோ சிக்னல் மர்மம்
சில நாட்களுக்கு முன்பு விண்வெளியிலிருந்து ரேடியோ சிக்னல் கிடைத்துவிட்டது என ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ந்தனர். ஆனால் அதன் அளவு மில்லி செகண்டுகள் என்பது பின்னர் தெரிந்தபோது மகிழ்ச்சி பலருக்கும் குறைந்துபோனது. என்ன காரணம், ஏனென்றால் அதனை ஆராய முடியாது என்பதுதான்.
2007 ஆம் ஆண்டு வானியலாளர் டன்கன் லோரிமெர் ரேடியோ சிக்னலை முதலில் கண்டுபிடித்தார். கருந்துளையில் வெளிப்படும் ஆற்றல் காரணமாக அல்லது நட்சத்திரங்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வதால் ஏற்படும் அலைகள் என ரேடியோ அலைகளை ஆராய்ச்சியாளர்கள் நினைத்தனர். இதனை ஃபாஸ்ட் ரேடியோ பர்ஸ்ட் எனக் குறிப்பிடுகின்றனர். சுருக்கமாக எஃப்ஆர்பி.
2012 ஆம் ஆண்டு புவர்ட்டோ ரிகோவிலுள்ள கண்காணிப்பகத்தில் ரேடியோ அலை ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் பெயர் எஃப்ஆர்பி 121102. தொடர்ச்சியாக கிடைத்த ரேடியோ அலைகள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்வதற்கு உதவின. தற்போது சிமே(CHIME) டெலஸ்கோப் மூலம் 13 புதிய ரேடியோ அலைகளை இரண்டு மாதங்களில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை செய்துள்ளனர். செய்திகளை இந்த ரேடியோ அலைகளில் அனுப்பி அவை ஒருவருக்கு சென்று சேர்ந்துவிட்டாலும் வானியலாளர்களின் ஆராய்ச்சிக்கு அப்டேட் கிடைக்கும்.
ரேடியோ அலைகளை ஆராய்வது அவ்வளவு எளிதல்ல. பல்வேறு தொலைநோக்கிகளை வைத்து ஒப்பீடு செய்து ஆய்வு செய்யவேண்டும். ரேடியோ அலைகள் வரக்காரணம், புதிதாக தோன்றிய நியூட்ரான் நட்சத்திரம் வெளிப்படுத்தும் சக்தி என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
நன்றி: டவுன் டூ எர்த்