நமது உடலிலுள்ள உண்மையான நீரின் அளவு என்ன?




Image result for body water




ஏன்?எதற்கு?எப்படி?

நமது உடலிலுள்ள தண்ணீரின் அளவு எவ்வளவு?

உடனே பாடப்புத்தக பாதிப்பில் எழுபது என முந்திரியாக பதில் சொல்லாதீர்கள். அது தவறான விடை. நீங்கள் பிறக்கும்போது உங்களின் உடலில் அதிகபட்சமாக 78 சதவீத நீர் இருக்கும். பின்னர் படிப்படியாக 70, 65, என குறைவதுதான் உண்மை.

டீனேஜ் பையனின் உடலில் அறுபது சதவீத நீரும், பெண்ணின் உடலில் 55 சதவீத நீரும் இருக்கும். ஐம்பது வயதுக்குப் பிறகு ஆண்களின் உடலில் 50 சதவீத நீரும், பெண்களின் உடலில் 45 சதவீத நீரும் இருக்கும். மெல்ல விகிதம் குறைந்து கொண்டே வரும்.  நம் உடலின் எலும்புகளில் 31 சதவீத நீரும், மூளை, இதயம், கல்லீரல் ஆகிய பகுதிகளில் 68 சதவீத நீரும் இருக்கும்.

உறுப்புகள் ஈரத்தன்மை இல்லாவிட்டால் அதன் இயக்கம் ஸ்தம்பிக்கும் அபாயம் உண்டு. எனவே நீர்ச்சுருக்கம் ஏற்படாதவாறு சரியான இடைவெளியில் நீர் பருகுவது நல்லது.

நன்றி: க்யூரியாசிட்டி







பிரபலமான இடுகைகள்