முன்னோர்களைத் தேடி....





Image result for frederic fougea  first man

முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் சென்று வர வாய்ப்பு கிடைத்தால் எப்படியிருக்கும்? மனிதர்களின் முன்னோர்களை நீங்கள் நேரடியாக சந்திக்கலாம்.  அவர்கள் இரு கால்களைக் கொண்டவர்களாக அல்லது வேறுபட்டும் இருக்கலாம்.  இதே கனவைத்தான் ஆவணப்படமாக்கியுள்ளார் பிரெஞ்சு இயக்குநரான ஃபிரடெரிக் ஃபோகியா.

”நாம் அனைவரும் தெரிந்துகொள்ள விரும்பும் கேள்வி நாம் எங்கிருந்து வந்தோம் என்பது. நாம் யார், எங்கிருந்து வந்தோம், நமக்கான விதிகள் எப்படி உருவாயின, நமக்கான அரசியல் எது, ஆகியவற்றை இந்த ஆவணப்படம் உள்ளடக்கும் ” என்கிறார் ஃபிரடெரிக். இவர் இதற்கு முன்பு ஹனுமான், வைல்ட் பிரான்ஸ் ஆகிய ஆவணப்படங்களை எடுத்துள்ளார்.

90 நிமிஷ ஆவணப்படத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட கேரக்டர்கள் உள்ளனர். உண்மையான பல்வேற உயிரினங்களின் மண்டை ஓடுகள், படிமங்கள் ஆகியவற்றை காட்சிபடுத்தியுள்ளனர். ரெவனனட் படத்திற்கான மேக்அப் குழு இந்த ஆவணப்படத்திற்கு பணிபுரிந்துள்ளது. “நம் முன்னோர்கள் எப்படியிருப்பார்கள் என்ற தெளிவுக்கு வரவே இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சி தேவைப்பட்டது. அதனை சுவாரசியமாக சொல்லுவது என்பது அடுத்தகட்ட சவால். இதில் பங்கேற்ற நடிகர்களுக்கு எப்படி நடப்பது என்று கூட பயிற்சி கொடுத்தோம் ” தகவல் சொல்லி வியக்க வைக்கிறார் ஃபிரடெரிக்.


நன்றி: இன்டல்ஜ், பாத்திமா அஸ்ரஃப்