மூக்கு பத்திரம் ப்ரோ!
ஏன்?எதற்கு?எப்படி?
மிஸ்டர். ரோனி
மூக்கில் அடிபட்டால் கண்ணில் கண்ணீர் வருவது ஏன்?
கமர்கட்டை கடன் தரவில்லை என சுபாஷ் மூக்கில் குத்தினாலோ, இல்லை தானாகே மூக்கில் ரத்தம் சொட்டினாலோ கண்கள் கண்ணீரை சொட்டி சிம்பதி உருவாக்கும். காரணம் கண்களும், மூக்கும் ஒரே பகுதியாக இணைந்துள்ளதுதான் காரணம். இதனால்தான் காரக்குழம்பை கலந்துகொண்டு எஸ் மை ஹோட்டலில் வெளுத்தால் தலைமுடிகள் சிலிர்த்துக்கொண்டு நிற்க, மூக்கில் ஜலம் வரும் மாயாஜாலம்.
மூக்கில் இயல்பாக சுரக்கும் திரவம், அதில் புகுந்துள்ள மாசுக்களை இணைத்து வெளியேற்றுகிறது. எனவே மூக்கில் திரவம் சுரப்பது அதனைக் காக்கவே. அதில் ஜில்லெட் ஷேவரை வைத்து சுத்தம் செய்யும் அம்பிகளே இனி அப்படி செய்யாதீர்கள். மூக்கிலுள்ள முடிகள் தூசு தும்புகள் மூக்கினுள் செல்லாதிருக்கும் தற்காப்பு ஏற்பாடு. மூக்கில் முடிகள் பெரும் புதராக வளராமல் பார்த்துக்கொண்டால் போதும். மூக்கு மிகவும் சென்சிடிவ்வான பிரதேசம். கவனம் கவனம்.