இடுகைகள்

வாயு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எல்இடி விளக்கின் வரலாறு

படம்
  எல்இடி விளக்கு ஆற்றலை சேமிக்கும் விளக்கு -LED   விளக்கை யார் கண்டுபிடித்தது என ரூபி வாய்ப்பாட்டில் பார்த்தால் அன்றைக்கு அனைவரும் நம்பிய அறிவியலாளரான எடிசனைக் கூறுவார்கள். ஆனால் அவரே அவரது உதவியாளராக இருந்த நிகோலா டெஸ்லாவின் அறிவை பயன்படுத்தி துரோகம் செய்துதான் தன்னை நிலைநிறுத்தினார். இதற்கு எடிசன் கடைசிவரை பல்வேறு அரசியல் சதிகள் செய்துகொண்டே இருந்தார்.   எனவே இதுபற்றி முழுமையாக அறிய கிழக்கு டுடேவில் ராம் எழுதும் நிகோலா டெஸ்லா தொடரை வாசித்துக்கொள்ளுங்கள். சாதாரணமாக பல்பு என்றால் பிலிப்ஸ் குண்டு பல்பு அனைவருக்கும் நினைவு வரும். உருண்டையான பல்பில் நடுவில் டங்க்ஸ்டன் இழை இருக்கும், மின்சாரம் அதில் பாயும்போது ஒளிரும். இரண்டே நிமிடங்களில் பல்பின் கண்ணாடி கை பொறுக்க முடியாத வெப்பத்தை அடைந்துவிடும். இன்று அந்த பல்பு விடைபெற்றுவிட்டது. அதே சைசில் மின்சாரத்தை சேமிக்கும் திறன் உள்ள எல்இடி வந்துவிட்டது. குண்டு பல்புகளை பயன்படுத்தும்போது அதிக மின்னாற்றல் செலவாகும். கிடைக்கும் வெளிச்சம் குறைவு. மேலும் அதன் அருகில் நாம் உட்கார்ந்து வேலை செய்வது கடினம். இரவில் சூரியன் வந்துவிட்டதோ எனும்படி ச

இறந்துபோன பிணங்கள் வெடிக்குமா?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ!? பிணங்கள் வெடிப்பது சாத்தியமா? இறந்துபோனவரின் உடலில் ஏதாவது பேஸ்மேக்கர், அல்லது வேறு பொருட்கள் பொருத்தப்பட்டிருந்தால் அப்படி வெடிக்க வாய்ப்புள்ளது. மற்றபடி உடலை எரிக்கும்போது நீர்ச்சத்து குறைந்து தசைகள் இறுக்கமாகின்றன. அதனால் எழுந்து உட்கார வாய்ப்புகள் அதிகம். பிணத்தை தகனம் செய்பவர்கள் ராஸ்கோல் என தடியாலேயே நெஞ்சில் ஒரு போடு போட்டு அடக்குவார்கள். பிணம் படுத்துவிடும். மற்றபடி உடலிலுள்ள வாயுக்கள் காரணமாக உடல் வெடிக்கும் என்பது அரிதாகவே நடக்கம். அந்தளவு அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள் கிடையாது.  உடல் அழுகிப்போகும் நிலையை பதப்படுத்தும் செயல் மட்டுப்படுத்துகிறது. இதனால் உடலிலுள்ள நுண்ணுயிரிகள் இறந்துபோன செல்களை தின்னும் செயல் தடைபடுகிறது. தசைகள் இறுக்கமடைந்தாலும் உடல் முழுக்க அழுகிப்போவதை தள்ளிப்போடலாம். அழுகும் உடலிலிருந்து மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு, அம்மோனியா ஆகிய வாயுக்கள் வெளியே வருகின்றன.  ஐஸால் படகு செய்து பயணிக்க முடியுமா? கேட்க நன்றாக இருந்தாலும் சாத்தியம் குறைவு. கடல் வெப்பநிலை அதிகரித்தால் ஐஸ் படகில் அல்லது கப்பலில் பயணிக்கும் பயணிகளின் கதி என்ன? இங்கிலாந்

குளிர வைக்கும் லேசர் !

படம்
  குளிர வைக்கும் லேசர் ! வாயுக்களிலுள்ள எலக்ட்ரான்களை குளிர்விக்க லேசர் ஒளிக்கற்றையை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துகின்றனர். வெற்றிடமாக்கப்பட்ட கண்ணாடிக்குள் திரவம் அல்லது திட நிலையில் வாயுவை நிரப்ப வேண்டும். இந்நிலையில் அதிலுள்ள அணுக்கள் இயங்கிக் கொண்டிருக்கும். இதனை மாற்ற, லேசர் கற்றைகளை வாயுவை நோக்கிச் செலுத்த வேண்டும்.  இப்போது, வாயுவிலுள்ள எலக்ட்ரான் லேசரிலுள்ள ஒளித்துகளான போட்டானைப் பெறும். பதிலுக்கு வாயுவும் போட்டானை உமிழும். பல்வேறு திசைகளிலிருந்து லேசர் கற்றைகளை வாயு மீது செலுத்த வேண்டும். இச்செயல்முறை தொடரும்போது வாயுவின் எலக்ட்ரான் செயல்வேகம் குறையும். அணுக்களின் வேகத்தைக் குறைக்க இயற்பியலாளர்கள் லேசர் கூலிங் (Laser Cooling) எனும் இம்முறையைப் பயன்படுத்துகின்றனர். இம்முறை 1970ஆம் ஆண்டு முதலாக செயல்பாட்டில் உள்ளது.  தற்போது இம்முறையை விட ஆவியாக்கும் முறையில் (Evaborate Cooling) அணுக்களை குளிர்விக்கிறார்கள்.  1926 ஆம் ஆண்டு வேதியியலாளர்கள், காந்த அலைகளைப் பயன்படுத்தி அணுக்களை குளிர்விக்கும் முறையைக் (adibatic DeMagnetization) கண்டுபிடித்தனர்.இம்முறையில் பொருட்களின் வெப்பநிலை ஒரு