இடுகைகள்

சுனந்தாபுஷ்கர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உங்களால் முடிந்த பெஸ்டை கிடைக்கின்ற வாய்ப்புகளில் கொடுத்தால் போதும் ஜெயித்துவிடலாம்! சசி தரூர் - அரசியல்வாதி, எழுத்தாளர், அறிவுஜீவி

படம்
            சசிதரூர் பிரபல எழுத்தாளர் , காங்கிரஸ் கட்சி தலைவர்களுள் ஒருவர் . 2009 இல் தான் அரசியலில் காலடி எடுத்து வைத்தார் தரூர் . அதற்கு முன்னர் 1997-2007 வரை ஐ . நாவில் தகவல்தொடர்பு தொடர்பான பணியில் இருந்தார் . கேரளத்தை பூர்விகமாக கொண்டவர் , திருவனந்தபுரத்தில் நின்று வென்று மக்களவை உறுப்பினரானார் .   வெளிநாடுகளைப் பற்றிய கட்டுரை நூல்கள் , நாவல் , தத்து வம் என டஜன் கணக்கிலான நூல்களை எழுதி குவித்துள்ளார் . டிவிட்டர் இவர் எழுதும் பல்வேறு கருத்துகளை எட்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் படிக்கின்றனர் . விவாதிக்கின்றனர் . 2006 இல் சசி தரூரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஐ . நா தலைவராக்க பரிந்துரைத்தது . ஆனால் அத்திட்டம் நிறைவேறவில்லை . 22 வயதில் ஐ . நாவில் அதிகாரியாக இணைந்து பணியாற்றிய அனுபவத்தில் , ஐ . நா தலைவர் போட்டியில் இருந்து பின்வாங்கினார் . இந்த பதவி முழுக்க பல்வேறு நாடுகளின் அரசியல்போட்டியை உள்ளடக்கியது என்று கூறினார் . 50 வயதில் அடுத்து நான் என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருந்தேன் . அப்போது ஒரு வேலையைத் தேடுவது என்பது சரியான முடிவல்ல . நான் எடுத்த முடிவு சரிதா