இடுகைகள்

கிருஷ்ணா விரிந்தா விகாரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிற்போக்குத்தனங்களின் அவியல் - கிருஷ்ணா விரிந்தா விகாரி - அனிஷ் ஆர் கிருஷ்ணா - நாக சௌரியா, ஷிர்லி சேதியா

படம்
  கிருஷ்ண விருந்தா விகாரி இயக்கம் அனிஷ் ஆர் கிருஷ்ணா ஒளிப்பதிவு சாய் ஶ்ரீராம் இசை மகதி ஸ்வர சாகர் மரபான ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்தவன், கிருஷ்ணா. இவன் ஹைதராபாத்தில் உள்ள சொந்தக்காரரின் ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறான். அங்கு விரிந்தா இளம் பெண்ணைப் பார்த்து காதல் கொள்கிறான். அவள் வட மாநிலத்துப் பெண். அவளுக்கு உடலில் ஒரு குறைபாடு இருக்கிறது. அதைசொல்லி திருமணம் வேண்டாம் என்கிறாள். ஆனால் கிருஷ்ணா, அவளுக்கு சாக்கு போக்குகளை சொல்லி மணக்கிறான். திருமணத்திற்கு பிறகு இருவரின் வீட்டாருக்கும் கலாசார வேறுபாடு, பெண்களை அடிமைப்படுத்தி வைக்கும் பிற்போக்கு தனம் காரணமாக வேறு பாடு வர தம்பதிகள் பிரிகின்றனர். இறுதியில் இவர்கள் இணைந்தார்களா என்பதே கதை. அன்டே சுந்தரானிக்கு என்ற தெலுங்குபடம் பார்த்திருப்பீர்கள். நானி நடித்து வந்த படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியிருப்பார். சாதி, மதம், பெண்ணின் திருமணம், குழந்தைப் பேறு ஆகியவற்றை முற்போக்காக அணுகிய படம். அதேசமயம் அந்த சிக்கலான விஷயங்களை நகைச்சுவையாக அணுகியிருப்பார்கள். அந்த படத்தின் கதையேதான். ஆனால் அனைத்தும் இங்கே தோசையைத் திருப்பிப்போடு கணக்