இடுகைகள்

ஆளுமை பிறழ்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பல் ஆளுமை பிறழ்வு வரலாறு

படம்
  இருப்பதிலேயே வரம் என்றும் சாபம் என்றும் மனிதர்கள் பெற்ற ஒரு அம்சத்தைச் சொல்லலாம். அதுதான் நினைவுகள். இவைதான் நமக்கு நல்ல விஷயங்களையும், தவறான விஷயங்களையும் கற்றுத் தருகிறது. அதுதான் நிறைய விஷயங்களைப் புரிந்துகொள்ளவும் நீதியை உணர்த்தவும் அறிவுச் சேகரமாகவும் உள்ளது. அவை சில காயங்களை கு்ணப்படுத்துகிறது. வரலாற்றில் கருப்பின அடிமைத்தனங்களைப் பற்றிய அறியவும் உதவுகிறது. பல தலைமுறைகளுக்கு நினைவுகளைக் கடத்தி கவனமாகவும் நாம் இருக்க உதவுகிறது.  சிறுவயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் அனுபவங்கள், ஆளுமை பிறழ்வு அனுபவங்களை மனங்களில் உருவாக்குகிறது என்ற கருத்து பொதுவாக உள்ளது.  இந்த ஆளுமை பிறழ்வு சிக்கலும் கூட வலியான நினைவுகளை திரும்ப திரும்ப நினைவுபடுத்திக்கொள்வதால்தான் நேருகிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் என்ற பாதிப்பு அதிகம் வெளித்தெரியாத ஒன்று. இன்று இந்த பாதிப்பை நோயாளிகள் வெளிப்படையாக சொல்லுகிறார்கள். அதற்கான சிகிச்சையும் பெறுகிறார்கள். வலியும், வேதனையும் நினைவுகளாக மூளையில் பதிந்துவிடுகிறது. இதில்தான் அத்தனை நல்லவைகளும் அல்லவைகளும் உருவா

என்னை மட்டுமே எனக்குப் பிடிக்கும் - நார்ச்சிஸ்ட் டிஸார்டர்

படம்
  இன்று உலகில் வாழும் இளைஞர்கள் பெரும்பாலும் நார்ச்சிஸ்ட் மனநிலை கொண்டவர்கள்தான். இவர்கள், அனைத்து விஷயங்களிலும் தாங்களே முன்னிலை பெறவேண்டும், மையமாக இருக்கவேண்டுமென நினைப்பார்கள். இதனால்தான் போன்களில் இன்ஸ்டா ரீல்ஸ், ஃபேஷன், நேபாளம் வரை பைக்கில் ட்ரிப் என பல்வேறு லட்சியங்களைச் சொல்லுவார்கள். எப்படி பிரபலமாவது என யோசிப்பார்கள். அவர்களது நண்பர்களையும் தங்களை பாராட்டியே ஆகவேண்டும் என வலியுறுத்துவார்கள். கோரஸ் பாடவே நண்பர்களை வைத்திருப்பார்கள். சுயமோகிகளை யாரும் விமர்சனம் செய்யமுடியாது. அப்புறம் என்னுடைய உடலின் ஒவ்வொரு அங்குலமும் அவ்வளவு பர்ஃபெக்ட் தெரியுமா? என வம்புச்சண்டைக்கு வந்துவிடுவார்கள். எதிர்கொள்வது கடினம்.  நார்ச்சிஸ்ட் என தன்னை மட்டுமே விரும்பும் மனநிலை கூடுதலாகி, ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறையும்போது தற்கொலை செய்துகொள்வார்கள். குறிப்பாக, வயதாகும்போது இயல்பாகவே ஆண், பெண்ணின் அழகு குறையும். அப்போது தன்னை  பிறர் நினைக்கவேண்டும், அழியாப்புகழை அடைய தற்கொலை செய்துகொள்வார்கள்.  இலக்கிய எடுத்துக்காட்டாக லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரீனினா நாவல் உள்ளது. ஆயிரம் பக்கங்களுக்கு மேல் செல்

உங்கள் கதையிலும் நான்தான் ஹீரோ - ஹிஸ்டிரியானிக், நார்ச்சிஸ்ட் பிறழ்வு மனிதர்கள்

படம்
  கல்யாண வீடு என்றால் கல்யாண மாப்பிள்ளை, சாவு வீடு என்றால் பிணம். உங்களுக்கு என்ன புரிகிறது? கல்யாண வீட்டில் பெரும்பாலும் விருந்தினர்கள் மாப்பிள்ளையைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இழவு வீடுகளில் இறந்தவரைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். அடிப்படை கான்செப்ட் என்ன? நிகழ்ச்சியின் நாயகன் மாப்பிள்ளை, இன்னொன்றில் இறந்துபோனவரின் உடல்.  இப்படித்தான் ஹிஸ்டிரியானிக், நார்சிஸ்டிக் பர்சனாலிட்டி டிஸார்டர் பாதிப்பு உள்ள நோயாளிகள் நடந்துகொள்வார்கள். பள்ளி, கல்லூரி, கிளப், விடுதி, உணவகம் என எங்குமே தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். இவர்களின் நண்பர்களுக்கு ஒரே வேலை, நாயகனுக்கு லாலலா.. பாடுவதுதான். இல்லையென்றால் அவர்களுடன் எளிதாக நட்பை துண்டித்துக்கொள்வார்கள்.  சாதாரணமாக நடக்கும் நிகழ்ச்சிகள் எதுவும் மேற்சொன்ன குறைபாடு உள்ளவர்களுக்கு பிடிக்காது. அனைத்திலும் புதிய கதைகளை சொல்லி, சில உணர்ச்சிகரமான தன்மையை ஏற்படுத்தி தன்னை அனைவரும் கவனிக்கவேண்டுமென நினைப்பார்கள். இதனால், பிறரை எளிதாக கவனிக்க வைப்பார்கள். செல்வாக்கானவர்கள் தங்களது நண்பர்கள் என காட்டிக்கொள்வார்கள். அப்படி கவனம் கிடைக்காதபோது தற்க

இரண்டு குறைபாடுகளுக்கும் இடையில் -- பார்டர்லைன் டிஸார்டர்

படம்
  நியூரோசிஸ், சைகோசிஸ் ஆகிய குறைபாடுகளுக்கும் இடையில் உள்ளவர்கள் என்ற அடிப்படையில்தான் பார்டர்லைன் பர்சனாலிட்டி டிஸார்டர் என பெயர் உருவானது.  இக்குறைபாட்டை உளவியல் ஆய்வாளர் சிக்மன்ட் பிராய்ட், நியூரோட்டிக் என குறிப்பிட்டார். மேலும் இதனை அந்தளவு ஆபத்தான குறைபாடாக அவர் கருதவில்லை.  பார்டர் லைன் பர்சனாலிட்டி டிஸார்டர் நோயாளிகளுக்கு, தங்களுக்கு நெருங்கியவர்கள் தன்னை விட்டுவிட்டு போய்விடுவார்கள் என்ற பயம் எப்போதும் இருக்கும். எனவே பயத்திலும், தவிப்பிலும், மன அழுத்தத்திலும் இருப்பார்கள். நண்பர்கள், தோழி, மனைவி என யாராவது வரச்சொல்லிவிட்டு காலதாமதம் செய்தாலோ அல்லது இன்னொருநாள் வருகிறேன் என்று சொன்னாலோ அதை இவர்க ளால் தாங்கிக்கொள்ள முடியாது.  தங்களை காயப்படுத்திக்கொள்வார்கள், தற்கொலை செய்துகொள்ள முயல்வார்கள். பொறுத்துக்கொள்வது என்பதே இவர்களுக்கு தெரியாத ஒரு வார்த்தை.  கஃபேயில் நண்பர்களின் நண்பர்கள் என அறிமுகமாகும் ஆட்களிடம் கூட பழகுவார்கள். சில மணி நேரத்திலேயே தனது அந்தரங்கமான விஷயங்களைப் பகிர்வார்கள். எதிரிலுள்ளவர் அட்டா என்னை இன்ஸ்டன்டாக நண்பராக ஏற்றுவிட்டாரே என மனம் குழைந்தால், விரைவில் அவர்

உறவும் கிடையாது, நம்பிக்கையும் கிடையாது! பாரனாய்ட் பர்சனாலிட்டி டிஸார்டர்

படம்
பாரனாய்ட் என்பதை,  மனதை விட்டு வெளியே என சுருக்கமாக சொல்லலாம். ஆங்கிலத்தில் பேசுபவர்கள் பாரனாய்ட் என்பதை் எளிதாக இயல்பாக பயன்படுத்துவார்கள். பாரனாய்ட் எனும் ஆளுமை பிறழ்வு கொண்டவர்கள் பிறரை எளிதாக நம்ப மாட்டார்கள். இவர்களது தினசரி நடவடிக்கையில் பிறரை நம்பாமல் நடந்துகொள்வது தெரியும்.  அலுவலகமோ, வீடோ, பிற இடங்களோ அங்குள்ள அனைவருமே பாரனாய்ட் பிறழ்வு உள்ளவர்களுக்கு எதிரிகள்தான். அவர்கள் தன்னை தாக்க முயல்கிறார்கள் என்றே நோயாளி நினைப்பார். இதனால், அந்த தாக்குதலுக்கு எப்படி பதில் தருவது என யோசித்தபடி, மனதில் பயந்துகொண்டிருப்பார். இவர்களை சொற்கள், உடல் என யாராவது தாக்கினால் அவர்கள் பாடு கஷ்டம்தான். பழிவாங்க நேரம் பார்த்துக்கொண்டிருப்பார்கள், திருப்பி பதிலடி தருவதிலும் சளைக்காத மனிதர்கள். வார்த்தைக்கு வார்த்தை கண்களுக்கு கண் என எதையும் மறக்காத மன்னிக்காத ஆட்கள்.  பாரனாய்ட் ஆளுமை பிறழ்வு கொண்டவர்களுக்கு ஸீசோபெரெனியா குறைபாடும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வன்முறை எண்ணங்களும், உணர்ச்சிக் கொந்தளிப்பும் பாரனாய்ட் நோயாளிகளுக்கு அதிகம் உண்டு. நடக்காத விஷயங்களை நடப்பதாக, சந்திக்காத மனிதர்களை சந்திப்பதாக

ஆளுமை பிறழ்வின் அறிகுறிகள்

படம்
  தற்கொலை அல்லது தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் எண்ணம் ஆரோக்கியமான உறவை பராமரிக்க முடியாத குணம் செய்யும் வேலையைத் தக்க வைத்துக்கொள்ள இயலாமை எப்போதும் சட்டத்தை மீறிக்கொண்டே இருப்பது கட்டுப்படுத்த முடியாத கோபம் திறன் இன்மை பற்றிய தீராத ஆதங்கம் , ஏக்கம் சமூகத்தோடு இணையாமல் நிகழ்ச்சிகளை தவிர்ப்பது பிறரின் மீது கருணையின்றி இருப்பது பிறரின் கவனத்தை ஈர்க்க அதீதமாக முயல்வது துன்புறுத்தப்படுவது பற்றிய பயம் பிறரது மீது நம்பிக்கையின்மை படம் - பின்டிரெஸ்ட் 

ஆளுமை பிறழ்வின் அடிப்படை, அடையாளம் காணும் முறை

படம்
  ஆளுமை பிறழ்வு பல்வேறு வகையாக பத்து முக்கிய வகையாக இருப்பதைக் குறிப்பிட்டோம் அல்லவா. குறைபாடுகளைப் பார்க்கும் முன்னர் நாம் ஆளுமை என்பதை தெளிவாகப் பார்த்துவிடுவோம்.  ஆளுமை என்பது எப்படி உருவாகிறது, ஒருவர் வாழ்ந்து வரும் சூழ்நிலை, அவருக்கு கிடைக்கும் விஷயங்கள், கல்வி, குடும்ப சூழ்நிலை, இதனால் அவர் உலகை புரிந்துகொள்ளும் விதம். சிந்தனை, ஆகியவற்றை நாம் ஆளுமை உருவாக்கும் அம்சங்கள் எனலாம். நாட்டின் அதிபராக உள்ளவர் பற்றி கருத்து என்றால் அதை நீங்கள் அடுத்த பிரதமர் வேறு ஒரு கட்சி சார்ந்து தேர்ந்தெடுக்கப்படும்போது மாற்றி்க்கொள்ளலாம். ஆனால் ஒருவரின் ஆளுமை அப்படிப்பட்டதல்ல.  உளவியல் ஆய்வாளர் சிக்மண்ட் ஃபிராய்ட் இந்த வகையில் பல்வேறு ஆய்வுகளை செய்துள்ளார். காலப்போக்கில் இவரது சில யூகங்கள் தவறு என்றாலும் கூட உளவியல் ஆய்வில் முக்கியமான ஆய்வுப்பங்களிப்பு செய்தவர் இவர். இவரைப் பற்றி தமிழில் நிறைய நூல்கள் வந்துள்ளன. இணையத்தில் கூட இவரைப் பற்றி தேடிப்படிக்கலாம். ஒருவரின் ஆளுமை என்பது அவர் பிறந்து சில ஆண்டுகளிலேயே முடிவாகிவிடுகிறது என்று சிக்மண்ட் ஃபிராய்ட் கூறுகிறார். பிற விலங்கினங்கள் குட்டிகளாக பிறந்து

ஆளுமை பிறழ்வுக்கு என்ன காரணம்?

படம்
  ஆளுமை என்பதை நூல் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பார்கள். சுய முன்னேற்ற நூல்களில் ஆளுமை என்பது முக்கியமான வார்த்தையும் கூட. ஒருவர் பேசுவது, சிந்திப்பது, செயல்படுவது ஆகியவற்றில் தனது கலாசாரம் சார்ந்த தன்மைகளை தாண்டி இருப்பது ஆளுமைக் குறைபாடு அல்லது பிறழ்வு என கூறலாம். அதாவது சமூகத்தை சீர்திருத்துபவர்களை இதில் உள்ளடக்க முடியாது. குறிப்பிட்ட தன்மையில் யோசிப்பது, செயல்படுவது ஆகியவற்றால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உடல், மனம் என இரண்டுமே பாதிக்கப்படும் நிலை என புரிந்துகொள்ளலாம். உளவியலாளர், ஒருவருக்கு ஆளுமை பிறழ்வு உண்டா இல்லையா என சோதனை மூலம் உறுதி செய்ய முடியும். ஆளுமை பிறழ்வு அல்லது குறைபாடு வகையில் மொத்தம் பத்து வகைகள் உள்ளன. பாரனாய்டு, ஸிசோய்டு, ஸிசோடைபால், ஆன்டி சோசியல், பார்டர்லைன், ஹிஸ்டிரியோனிக், நார்சிஸ்டிக், அவாய்ட்ன்ட், டிபென்டன்ட்,ஆப்செசிவ் கம்பல்சிவ். இவற்றைப் பெயரைப் பார்த்தால் கொஞ்சம் திகைப்பாகவே இருக்கும். எப்படி உச்சரிப்பது என்பது முக்கியல்ல. என்ன அறிகுறிகள், பாதிப்பை குறைத்து கட்டுப்படுத்துவது மட்டுமே அவசியமானது. மனநல குறைபாடுகளுக்கு தீர்வு

சிறுவயது தோழிக்காக ஆளுமை பிறழ்வில் சிக்கிக்கொள்ளும் தொழிலதிபர்! கில் மீ, ஹீல் மீ - கொரிய டிவி தொடர்

படம்
            கில் மீ ஹீல் மீ கொரியத் தொடர் யூட்யூப் டாக்டர் சா தொடருக்கு பிறகு லீ சங் நடித்துள்ள தொடர் இது . மனிதர் எப்படி சவாலான கதைகளை தேடிப்பிடிக்கிறார் என்று தெரியவில்லை . இத்தனைக்கும் டிவி தொடருக்கு ஆறு பாத்திரங்களாக மாறி நடிக்கவேண்டுமென்றால் எவ்வளவு கஷ்டம் ? எதையு்ம் முகத்தில் காட்டாமல் தோளில் போட்டுக்கொண்டு முழுத்தொடரையும் பார்க்க வைப்பது லீ சங்தான் . சிறுவயதில் குழந்தைகளை துன்புறுத்தினால் அந்த பாதிப்பு அவர்களின் உளவியலை எப்படி பாதிக்கிறது என்பதை செய்தியாக சொன்னதற்கு உண்மையாகவே இயக்குநரை பாராட்டவேண்டும் . பாலியல் ரீதியான குழந்தையை கொடுமை செய்யும்படி காட்சிகள் இல்லையென்பது ஆறுதல் சியூஜின் என்ற நிறுவனத்தின் அடுத்த தலைவராகப் போகும் ஒருவர் , சா டியூ ஹியூன் . இவருக்கு சிறுவயதில் ஏற்பட்ட மோசமான சம்பவம் ஒன்றால் ஆளுமை பிறழ்வு கொண்டவராக இருக்கிறார் . இதனை ஆங்கிலத்தில் முதலில் மல்ட்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் என்று சொன்னார்கள் . இப்போது அதனை டிஸ் அசோசியேட்டிவ் ஐடென்டிட்டி டிஸார்டர் என்று கூறுகின்றனர் . அமெரிக்காவில் இருந்து படித்துவிட்டு திரு

ஜெர்மன் உளவுத்துறையை மிரட்டும் கோமாளி ஹேக்கர்கள் குழு! - ஹூ யம் ஐ- ஜெர்மன் திரைப்படம்

படம்
                ஹூ எம் ஐ ஜெர்மனி திரைப்படம்    படத்தின் நாயகன் பெஞ்சமின் என்சேல் . ஆனால் படத்தில் இவரை ஜூனியர் பாத்திரமாக்கி மூன்று பேர் கொண்ட ஹேக்கர் குழு , பெஞ்சமினின் கல்லூரி தோழி என முழுக்க ஆக்கிரமித்துள்ளனர் . படத்தின் இறுதியில் பார்வையாளர்களுக்கு சஸ்பென்ஸ் யாரும் எதிர்பார்க்காத ஒன்று . பெஞ்சமின் தனது பாட்டியுடன் வாழ்ந்து வருகிறான் . அந்த வீட்டில் வேறு யாருமில்லை . அவரது பாட்டிக்கு அல்சீமர் வியாதி உள்ளது . அவரைப் பார்த்துக்கொண்டு கணினியில் ஹேக்கிங் செய்து மிஸ்டர் எக்ஸ் என்ற புகழ்பெற்ற ஹேக்கரின் கவனத்தை ஈர்க்க முயல்கிறான் . அப்போது எதிர்ப்படும் குழுதான் அவனது வாழ்க்கையையே மாற்றுகின்றனர் . கிளே எனும் பெயர் கூட பெஞ்சமின் அவர்களுக்கு கொடுப்பதுதான் . அக்குழுவில் ஸ்டீபன்தான் தலைவன் . அவனின் அன்பை தனது திறமையைக் காட்டி பெற்றுவிட்டாலும் மற்றவர்கள் அவனை சின்ன பயலே என்றுதான் நினைத்து பேசுகிறார்கள் . ஸ்டீபனின் வாழ்நாள் கனவே மிஸ்டர் எக்ஸின் சபாஷ் என்ற பாராட்டைப் பெறுவதுதான் . அதனை பெறும் முயற்சியில் அவர்கள் சந்திக்கும் ஆபத்துகளே கதை .    முழுக்க கணினியை வைத

ஃபேன்டசியாக கொலை! - ஹார்வி கிளாட்மன்

படம்
அசுரகுலம் ஹார்வி கிளாட்மன் அமெரிக்காவிலுள்ள பிராங்ஸில் பிறந்த ஹார்வி அபார புத்திசாலி. அதற்கேற்ற பிரச்னைகளும் அவரது மூளையில் இருந்தன. அவரின் செயல்பாடுகளை கவனித்த அவரது அம்மாவுக்கு அவரிடம் ஏதோ ஒரு தவறு இருப்பதாக பட்டது. தன்னைத்தானே துன்புறுத்தி மகிழ்ச்சி காணும் தன்மையை எதேச்சையாகத்தான் அவர் கண்டுபிடித்தார். உடனே மருத்துவர்களிடம் அழைத்து சென்னார். ஆனால் அவர்கள் அவரின் மனநலன் நன்றாக இருக்கிறது. வளர்ந்தவுடன் அனைத்தும் சரியாகிவிடும் என சினிமாவில் வருவது போலவே பேசினார்கள். வளர வளர ஹார்வியின் செயல்பாடுகள் பயமுறுத்துவது போலவே இருந்தது. பொதுவாக ஒல்லியாக பலவீனமாக இருப்பவர்களின் கனவு என்னவாக இருக்கும்? பலசாலியின் சில்லி மூக்கை உடைப்பதுதானே? இந்த விஷயத்தில் ஐக்யூ 130 புள்ளிகள் கொண்ட ஹார்வி வேறு மாதிரி யோசித்தார். பள்ளியில் சோனிப்பையனாக இருந்ததால் கிண்டல், கேலி, அடி, உதைகளை வாங்கினார். மெல்ல பெண்கள் என்றால் என்ன  காரணத்தாலோ பயப்படத் தொடங்கினார். நன்றாக புரிந்துகொள்ளுங்கள் மனதளவில் மட்டுமே. அக்காலகட்டத்தில் பெண்கள் தனியாக வசிக்கும் வீடுகளை நோட்டமிட்டு வந்தார். அடையாளத்தை மனதில் வைத