எதிர்காலத்தை சொல்லும் சிறுவனால் தீரும் கொலை மர்மம்!
மறுவாசிப்பு 2(2025) சித்திரமும் கொல்லுதடி டிடெக்டிவ் ராபின் - மார்ட்டின் முத்து காமிக்ஸ் க்ரைம் திரில்லர் காமிக்ஸ் விலை ரூ.10 கருப்பு வெள்ளை காமிக்ஸ். அமெரிக்காவின் நியூயார்க்கில் மழைபெய்யும் நாளன்று ஒரு பெண் கதவைத் திறக்கிறாள். யாரோ ஒருவர் உள்ளே நுழைகிறார். அத்தோடு அந்த காட்சி முடிந்துவிடுகிறது. மர்மக் கதைக்கு பொருத்தமான காட்சி. அடுத்த நாள், பின்னி என்ற கட்டை குட்டை தோற்றத்தோடு தொழிலதிபர், கிம் என்பவளைப் பார்க்க பூங்கொத்தோடு வருகிறார். லாஸ்கி என்ற கார் மெக்கானிக், கிம் காசுக்காக என்னவேண்டுமானாலும் செய்வாள், உங்களிடம் உள்ள காசுதான் அவளை மயக்குகிறது என வன்மத்தோடு பேசுகிறான். பின்னியைப் பொறுத்தவரை அவர் நியூயார்க்கிற்கு தொழில் விஷயமாக வந்தாலும் கிம் என்ற பெண்ணோடு கொண்டுள்ள காதல், பாலுறவு ஒரு போதையாக மாறியிருக்கிறது. அவளை மணந்துகொள்ளலாமா என்று கூட யோசித்துக்கொண்டே நடைபோடுகிறார். அவர் கிம்மின் வீட்டுக்கு படியேறுகிறார். லாஸ்கி பொறாமையில் பேசுவதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. திறந்திருந்த கதவை தள்ளியபடி உள்ளே நுழைகிறார். படுக்கை அறைக்கு சென்று பார்த்தால் கிம் தலையில் அடிபட்டு இறந்து க...