பாம்பே அண்டர்கிரவுண்ட் காமிக்ஸ்!


Image result for bombay underground
Verve Magazine



பாம்பே அண்டர்கிரவுண்ட் காமிக்ஸ்




Image result for bombay underground

Image result for bombay underground
ஹிமான்சு குழந்தைகளுடன்



ஓவியர் பாலமுருகன் வெளிநாடுகளில் அண்டர்கிரவுண்ட் காமிக்ஸ் உண்டு என்று கூறினார. காமிக்ஸ் என்றால் டிஸ்கவரி புக்பேலஸ் மாதிரி கடை போட்டு விற்பதுதானே என்று நான் நினைத்தேன். ஆனால் இந்த காமிக்ஸ் வேறு வகையானது.


நாம் பெரும்பாலும் டெக்ஸ்வில்லர், லக்கிலுக் வகையறாக்களையே முழுதாக படித்திருக்க மாட்டோம். அவற்றையே சூப்பர், சுமார் என விமர்சனம் செய்துகொண்டிருப்போம். 

ஆனால் இந்த அண்டர்கிரவுண்ட் காமிக்ஸ், தனிப்பட்டவர்களின் வாழ்க்கை, சுகம், துக்கம், அரசியல், செக்ஸ் , வன்முறை என எதுவாகவும் இருக்கலாம். அழகான பேப்பரில் காமிக்ஸ் ஸ்ட்ரிப்புகளை வரைந்து சென்டர் பின் அடித்தால் சேல்ஸூக்கு ரெடி.

காமிக்ஸ்கள் இப்படித்தான் இருக்கும் என்றால் அண்டர்கிரவுண்ட் காமிக்ஸ்களை படித்தால் மனதை மாற்றிக்கொள்வீர்கள். ஓவியர் பாலமுருகன் சொன்னதை நினைத்துக்கொண்டே சனிக்கிழமை மின்டைத் திறந்தால், மும்பை டெல்லியிலும் பாம்பே அண்டர்கிரவுண்ட் என்ற காமிக்ஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவர்களும் பல்வேறு இடங்களில் சிறுசிறு கண்காட்சிகளை நடத்தி வருகிறார்.


ஏதாவதொரு மாலில் சிறிய டேபிளில் தனி காமிக்ஸ், (இன்டிபென்டன்ட் என புரிந்துகொள்ளுங்கள்) வைத்திருப்பார்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் வாங்கலாம். இல்லையென்றால் புரட்டிப்பார்த்து விண்டோ ஷாப்பிங் செய்துவிட்டு செல்லலாம். இதுவொரு தனி ருசி.

முத்து காமிக்ஸின் பிரச்னை என்னவென்றால், விஜயனுக்கு அதிமுக பிடிக்கும் என்றால் காமிக்ஸில் அம்மாவுக்கு நன்றி என ஒரு பக்கத்தை ஒதுக்குவார். நான் காசு கொடுத்து வாங்கும் நூலில் எதற்கு இந்த அத்துமீறல். எனக்கு காமிக்ஸ்தான் வேண்டும். ஒருவரின் நம்பிக்கையோ, அல்லது நன்றி பாராட்டல்களோ அல்ல. அப்படியென்றால் இதுபோன்ற இன்டிபென்டன்ட் காமிக்ஸ்களே ஒரே வழி. 


காமிக்ஸ்களின் ரேட் எவ்வளவு? 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை இருக்கும்.  இந்த காமிக்ஸ்களை ஸைன்(zine) என்று அழைக்கின்றனர். 1930களில் அமெரிக்காவின் அறிவியல் வட்டாரங்களில் ஸைன் புத்தகங்கள் மிக பிரபலம்.  இலக்கிய நூல்களை அரசு பதிவின்றி வைத்து விற்கிறோமே அதே முறையில்தான் ஸைன் நூல்கள் மக்களிடையே விற்கப்படுகின்றன.

சமூகம் என்பது தனிமனிதர்களின் சிந்தனைகளால் வலுவூட்டப்பட்டு வளருகிறது என்பதில் நம்பிக்கை கொண்டவர்களால் ஸைன் காமிக்ஸ் கலாசாரம் இந்தியாவில் பரவி வருகிறது. 1990களில் மும்பையைச் சேர்ந்த எஸ்.ஹிமான்சு என்பவர் ஸைன் காமிக்ஸ்களை பலருக்கும் அறிமுகப்படுத்த தொடங்கினார். இன்று அவரும் அவரது தோழி அக்யூ தமியும் பாம்பே அண்டர்கிரவுண்ட காமிக்ஸ்ளை விற்று வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் இதுகுறித்து தேடி தகவல்களைப் பெறமுடியும்.

ஸைன் புத்தகங்கள் ரத்தப்படலம் போல கொள்ளை விலைக்கு விற்கப்படுபவை அல்ல. இவற்றின் நோக்கம், குறிப்பிட்ட விஷயங்களின் மீதான கருத்தை முன்வைப்பதுதான். ஆனால் இன்று கிராபிக் கதைகள் இதிலும் புதுமையாக எழுதப்பட்டு வரையப்பட்டு மக்களை சென்றடைந்து வருகின்றன.


இடதுசாரியா, வலதுசாரியா என்பது தாண்டிய கருத்துகள் மக்களுக்கு இருக்கும் அல்லவா? அதற்கான வழியே இது. “பல்வேறு கல்வியாளர்கள்,  மனிதர்கள் தங்கள் கருத்தைச் சொல்வதற்கான வழிகளை தேடிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கான வழித்தடம் ஸைன் காமிக்ஸ்களே” என்கிறார் அக்யூ தமி.

இந்தியாவில் ஸைன் கலாசாரத்தை தொடங்கியது இடது சாரி பதிப்பகமான லோக்வாங்மே கிரிகா. 1953 ஆம் ஆண்டு அம்பேத்கர், பூலே ஆகியோரை வழிகாட்டிகளாக கொண்டு காமிக்ஸ்களை வெளியிட்டது. வெறும் முதிர்ச்சியான ஆட்கள் என்று மட்டும் இல்லாமல், குழந்தைகளுக்காகவும் உழைத்துள்ளது ஹிமான்சுவின் குழு.

2006 ஆம் ஆண்டு ஹிமான்சு தாராவி குழந்தைகளுக்கான ஆர்ட் ரூம் என்ற திட்டத்தை உருவாக்கினார். “மற்றவர்களை விட குழந்தைகளுக்கான கதைகளை உருவாக்குவது எளிதாக இருந்தது” என்கிறார் ஹிமான்சு.