’இந்தியாவின் சக்தி அதிகரித்துள்ளது’





Image result for satheesh reddy
சதீஸ் ரெட்டி, டிஆர்டிஓ


நேர்காணல்

இந்தியா தன் சாட்டிலைட்டை ஏவுகணை மூலம் தகர்த்து எறிந்துள்ளது. சக்தி எனும் திட்டத்தைப் பற்றி டிஆர்டிஓ இயக்குநகர் சதீஸ் ரெட்டி பேசுகிறார்.

இந்தியா இன்று உலகநாடுகளின் லிஸ்டில் இணைந்துள்ளது. நீங்கள் இந்த திட்டம் பற்றி விரிவாக கூறுங்களேன். 

சக்தி எனும் இத்திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக 2016-17 வாக்கில் தொடங்கினோம். திட்டத்தை வேகமாக்கியது ஆறுமாதங்களுக்கு முன்புதான். முன்பே நடைமுறையில் உள்ள தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த புதிய ஏவுகணையை உருவாக்கி சாதித்துள்ளோம்.

இதில் சந்தித்த சவால்களைப் பற்றிக் கூறுங்கள்.

இதில் பயன்படுத்திய தொழில்நுட்பம் பற்றி பேசமுடியாது. ஆனால் இதில் சவால்கள் என்பது மூன்று இடத்தில் இருந்தது. இலக்கின் மீதான துல்லியம், இலக்கை சரியான கோணத்தில் தாக்கும் திட்டம், டெக்னாலஜியைப் பயன்படுத்தி இலக்கை சரியான முறையில் அணுகுவது ஆகியவை பெரும் சவாலாக இருந்தது.


இதன்மூலம் நாம் அடையும் நிலை என்ன?

இந்தியா தயாரித்துள்ள இந்த செயற்கைக்கோள் முழுமையாக இந்தியாவில் தயாரானது என்ற பெருமை கொண்டது. இதன் அமைப்பு, மென்பொருட்கள், சென்சார்கள் என அனைத்தும் நாமே தயாரித்ததுதான். இது எதிர்காலத்தில் நமது நாட்டின் பாதுகாப்பிற்கும் உதவும்.

உங்களது அடுத்த திட்டம் என்ன?


இன்று நாம் தொழில்நுட்பத்தை நேரடியாக சோதித்துப் பார்த்துவிட்டோம். இனி இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டிய நேரம். இன்று நம்மிடம் உள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆயிரம் கி.மீ. தூரத்திலுள்ள இலக்கை சரியாக தாக்கி அழிக்க முடியும்.


நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா