கிராமங்களுக்கு டாக்டர்கள் தேவை!
மகாராஷ்டிரத்தில் எம்பிபிஎஸ் படிக்கவும், முதுநிலைப்படிப்பான எம்டி படித்தவர்களுக்கும் சிறப்பு இட ஒதுக்கீடு உண்டு. இதனை அரசு வழங்குவது, இதில் படிக்கும் மாணவர்கள் ஏழு ஆண்டுகள் கிராமத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற கருத்தில்தான்.
இந்த இட ஒதுக்கீட்டில் படிப்பவர்கள் கட்டாயமாக ஏழு ஆண்டுகள் பழங்குடி மக்களின் கிராமத்தில் மருத்துவ சேவை செய்வது கட்டாயம். கிராமங்களில் ஏற்படும் தொற்றுநோய் கவனிக்காமல் விட்டால், அந்த இனத்தையே அழித்துவிடும் அபாயம் உள்ளது. இதற்காகவே அரசு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் உள்ள கிராம ப்புற மருத்துவநிலைமை சொல்லிக்கொள்ளும் படி இல்லை. இதன் பொருள், அங்கு மருத்துவமனைகள் இல்லை என்பதில்லை. சரியான மருத்துவர்கள், செவிலியர்கள் கிடையாது என்கிறார் மருத்துவத்துறையைச் சேர்ந்த தன்னார்வலரான டாக்டர் அமோல் அன்னடேட். 400 மருத்துவமனைகள், 76 துணை மாவட்ட மருத்துவமனைகள், 26 நகர மருத்துவமனைகள் இருந்துமே இந்த அவலநிலைமை.
இந்நிலைமை ஒடிசாவில் உச்சம் தொட்டு நிற்கிறது. இங்கு மருத்துவர்கள் வி0, வி4 என்று தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதில் முதல் பிரிவினர் அதிக ஆபத்தில்லாத நிலையில் பணிபுரிவார்கள். வி4 என்ற பிரிவு, நக்சலைட்டுகள் பகுதி, பின்தங்கிய பகுதி என பணிபுரிய ஏற்பாடு செய்துள்ளனர். பின்தங்கிய பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 40 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 80 ஆயிரம் வரை.
இதில் பயிற்சி மருத்துவர்களாக பணிபுரிபவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண்களையும் மாநில அரசு வழங்குகிறது. இளைஞர்கள் மேல்படிப்பு படிக்க கூடுதல் மதிப்பெண்களை அரசு வழங்குகிறது. இது அவர்களை கிராமங்கள், தொலைதூர பகுதிகளுக்கு பணிசெய்ய உதவுகிறது என்கிறார் சுகாதாரத்துறை செயலரான பிரமோத் மெகர்தா.
பின்தங்கிய பகுதிகளில் மூன்று ஆண்டுகள் பணிசெய்த மருத்துவர்களுக்கு வி4 பிரிவில் பத்து சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. வி1 பிரிவினருக்கு 2.5%, வி2 பிரிவினருக்கு 5%மும், வி3 க்கு 7.5% மும் வழங்கப்படுகிறது. இதனால் 2014 ஆம் ஆண்டு 786 ஆக இருந்த மருத்துவர்களின் எண்ணிக்கையை 1,072 ஆக மாற்றியுள்ளது.
ஜார்க்கண்டில் கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் மூன்று மருத்துவக்கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. பலாமு, தும்கா ஹசார்பாக் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள கல்லூரிகளில் 350 சீட்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதும் இதில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள 24 மாவட்டங்களில் பத்தொன்பது மாவட்டங்கள் தீவிரவாதப் பாதிப்புகொண்டவை. தற்போது பதினோராயிரம் பேரை மருத்துவப்பணிக்காக அரசு தேர்ந்தெடுத்துள்ளது. இவங்கள் பணிபுரியப்போவது தீவிரவாத பாதிப்பு உள்ள பகுதிகளில்தான்.
மருத்துப்படிப்புகளுக்கான சீட்டுகளை அரசு இட ஒதுக்கீட்டில் வழங்குவதோடு, குறைந்த விலையும் அளிக்கிறது. காரணம், இதில் படிப்பவர்கள் அரசின் விதிக்கு உட்பட்டு கிராமங்களில் பணியாற்றுவது கட்டாயம். தனியார் கல்லூரிகளில் 7 லட்சம் செலவாகிறது என்றால் அரசு அக்கட்டணத்தை 15 ஆயிரம் 40 ஆயிரமாக சுருக்கியுள்ளது.
அரசின் நோக்கம் சிறந்ததுதான். ஆனால் மருத்துவமனையில் நோய்களைக் கண்டறிய சரியான சாதனங்கள் தேவை என்பதை அரசு புரிந்துகொள்வதில்லை. மலைப்பகுதிகளில் உடனே அப்பொருட்களை பெறுவதற்கான வாய்ப்புகளும் இல்லை. அரசு இதனைக் கவனிக்கவேண்டும் என்கிறார் முன்னாள் மருத்துவ சேவைத்துறை செயலரான டாக்டர் என்எஸ் நாப்சியல்.
நன்றி: டைம்ஸ்