லவ் இன்ஃபினிட்டி: பிரம்மச்சரியத்தை உடைத்த நண்பன்



Check your daily horoscope here.
pinterest





லவ் இன்ஃபினிட்டி 15
குமார் சண்முகம்
தொகுப்பு: ராக்கி, தேஜஸ்வின் ராஜ்


சுமதி தன்னோடு கருத்தை தெளிவா சொல்லிட்டா. எனக்கு ஆசையிருக்குன்னு. அவ ரொம்ப போல்ட். சில சமயங்களில் நான்தான் விலக வேண்டியிருந்தது. ஒருவகையில் அது இயற்கைதான். எனக்கு அப்போ புனிதமானவன்னு ஒரு பிடிவாதம் இருந்தது. என் உடம்பும் மனசும் ஒண்ணுக்கொண்ணு சண்டை போட்டது அவளோட இருக்கும்போதுதான்.

உண்மையில் அவளோட ஆர்வம் வேற வகையில் யோசிக்க வெச்சாலும் நான் யூ சர்டிஃபிகேட் வாங்கின பையன். அந்த மாதிரியெல்லாம் கல்யாணத்துக்கு அப்றம்தான்னு சொல்றவன். ஆனாலும் இயற்கை ஜெயிக்கிறது முடியுமா? ஃப்ரெண்டா, அதுக்கும் மேலயான்னு உடம்பு விவாதிக்க விடல.

ஆனால் என்னோட கூட்டாளி கில்டி குணா, மீட்டர் வட்டி விட்ட ஜெகன்கிட்ட மூவாயிரம் ரூபாய் காசு வாங்கிட்டுப் போய், பிரம்மச்சரியத்தை உடைத்து எங்க வயித்தெரிச்சலை சம்பாதிச்சான். அப்போ அங்க இந்த விஷயத்துல ஃபேமஸா இருந்தது, திட்டுப்பாறை ஸ்வேதாதான்.

இதையெல்லாம் என்னோட ஃபிரண்டு மங்கை முருகன்கிட்ட சொன்னா சிம்பிளா ஒரு த த்துவம் சொன்னான். கோவம்தான். பட் அவன் சொன்னதுல ஒரு நேர்மை இருந்துச்சு பல்லு இருக்கிறவன் பக்கோடா திங்கிறான். விடு.

ரைட்டுன்னு விட்டுட்டா.. எங்க ஆண்மையின் பெருமை என்னாவறது சொல்லுங்க...இதுக்காகவே பக்கத்துட்டு வீட்டு பாம்பே லோகு அண்ணன், சுப்ரமணி அண்ணன்கிட்ட ஆலோசனை கேட்போம். பொதுவாக நமக்கு அடுத்தவங்க ஐடியா கேட்டாங்கன்னா சாணக்கியன் லெவலுக்கு ஃபீல் பண்ண ஆரம்பிச்சிருவாங்க.

சுப்ரமணியண்ணன் அப்படி ஒரு ஆளு. அவரு பேர நாய்க்கே வெச்சு ஆசையாக கூப்பிடலாம்னு நினைச்சேன். ஆனா, அது பெரிய சண்டையக் கொண்டுவந்து வுட்ருமுடா எங்க ஆயா சொன்னதால உறவுப்போர் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

எங்க சனத்துல எல்லாம் வேகம்தான். யோசிக்கிறது படுவேகமாக இருக்கும்னா வேல பார்க்கிறது எப்படி... எங்க ஊட்டு பொம்பளையாளுக வார்த்தையே பேசிப்புடுவாங்க. வெந்தண்ணிய எங்க ஊத்திக்கிட்டானோ இந்த தண்டுவன்னு. அதையெல்லாம் கேட்கிறதுக்கு கூட எனக்கு அப்பெல்லாம் டைமில்லை. இளமையின் வேகம் அப்படி.

Ilustraciones de María Uve para darte cuenta de que estás con el amor de tu vida 2


2

போன்ல பேசறதுக்கு அப்பன் குடுக்கிற காசு பத்தாது. அதனால சேசாயி நோட்டுப்பேப்பர்ல எழுதித்தள்ளுறது, இருபது வயசுல கம்யூனிஸ்டாகி போராடாட்டி எங்க வம்சம் என்ன சொல்லும் அப்படின்னு சமூக கவிதைங்கிற கெரகத்தையும் எழுதினேன். நடுவுல பிரேக் வுட்டா சுமதி, மைதிலி எல்லாம் உள்ளே புகுந்துருவாங்க. உடனே எனக்கு ஒரே குழப்பமாயிரும்.

ஸ்டாலினா, ஷாலினியா, மைதிலியா கோர்ப்பசேவா, லெனினா, லதாவா ன்னு உளறிக்கிட்டே திரிஞ்சேன். ஆத்தா, அப்போ திடீர்னு ஆசாரத்துக்குள்ள வந்து எழுகாண்டியம்மனை வேண்டிக்கிட்டு, தின்னீற நெத்தியிலும், தாவாங்கொட்டையிலும் பூசிவிட்டுட்டு போய்க்கிட்டே இருக்கும். எப்படி நாசூக்கா இன்சல்ட் பண்றா கிழட்டு முண்டைன்னு நெனச்சாலும், என்னோட பழைய பெண்தோழி அவதான்.  பாசம் நமக்கு எப்பவுமே பாயாசம் மாதிரி ஆல்டைம் டிலைட்தானே!

ஆனாலும் ஆயா, வாரத்துக்கு மூணுநாள் கறிச்சோறு போடுலீன்னு போடற நொனைச் சண்டையெல்லாம் எனக்கு ஆகாது. நான் லீவு கிடைச்சா கவியைப் பார்க்க ஈரோடு எஸ் ஆயிருவேன். இல்லீனா, அப்பன் தேங்காயை உரிச்சுப்பழகுன்னு குமட்டுல குத்துவாரு. அடுத்து, கருப்பண்ணன் தேங்காய் மில்லு கணக்கெழுதுனா செலவுக்கு ஆவுமேன்னு கல்விவேலை வழிகாட்டி இதழோட  காமெடியெல்லாம் தனியாளா நின்னு பண்ணுவாப்புல.

எனக்கு இப்பத்தான் கமலா, துர்க்கா, கஸ்தூரின்னு பேசறக்கு லேடீஸ் பட்டாளம் ரெடியாயிருக்கு. ஜாலியா இவங்களைப் பார்க்கறதுதான் என்னோடு ஒரே வேலை. பிகர்களை ஏடாகூட மூர்த்தி, சின்னிஸ் ராஜ்குமார், குமரேசன்னு செட்டுசேர்ந்து சைட் அடிக்க போறதுதான் பொழுதுபோக்கு. கூடவே ’ஏ’ மூர்த்தி மூலமாக முரடன் செந்தில் அறிமுகமானார்.

அங்கதான் எனக்கு ஸ்டோர்மி டேனியல்ஸோட பழக்கமாச்சு. இங்கிலீசுகாரிகிட்ட நான் என்ன பேசப்போறேன். ஜஸ்ட் பாக்கத்தான். செக்ஸ் நடிகைப்பா!  எனக்கு ரெண்டு நிமிஷம் பார்த்தாலே அன்னைக்குப் பூரா பொங்கலோ பொங்கல்தான்.

செந்திலண்ணன் வீட்டுக்குப் போய் இரண்டே வாரத்துல பூங்காவனம் படக்குன்னு கேள்வி கேட்டா. டேய் ஏண்டா ஜட்டியெல்லாம் அசிங்கம் பண்றா. நாத்தம் தாங்க முடியலடா. அவ கேப்பா. ஏன்னா, எங்க அம்மா இல்லியா?. உள்துறை செகரட்டரி. டிஸ்கவுண்ட விடு பொன்வண்டு போடு. தூள்கிளப்புன்னு சொன்னேன். உதட்டை மடிச்சு கெட்ட வாரத்தை ஒண்ணு சொன்னா. ஓகே  மம்மின்னு ஒரே ஜம்ப். ஆனா, வேற வழி தெரியல.  அதனால மாசத்துக்கு ஒருமுறை அங்க போய் சர்வீஸ் பண்ணிக்கறது வழக்கமாச்சு.

செந்திலண்ணன் வித்தியாசமான ஆளு. கல்கத்தாவுல வேல பாத்துக்கிட்டிருந்துட்டு அம்மா, அப்பா மர்கயா ஆனப்புறம்  தமிழ்நாட்டுக்கு ரயில் புடிச்சு வந்தாரு. ஊரே கோமணம் கட்டிக்கிட்டு திரிஞ்சப்போ, ஹேன்ஸ் பிராண்டுல ஷார்ட்ஸ் மாட்டிக்கிட்டு மனுசங்க மட்டுமில்லை ரோட்டுல போற எருமை மாடுகளைக்கூட மிரள வெச்சாரு. நிச்சயம் இதப்பார்றா புது ஜீவராசின்னு நெனச்சிருக்கும்.












3

செந்திலண்ணனுக்கு விவசாயத்தையும் ஐரோப்பா ஸ்டைல்ல பண்ணனும்னு ஆசை. ஆனா, கிராமத்தாளுங்க இவரை படிச்ச கோமாளியாத்தான் பாத்தாங்க. ஆனா, சார் ஊருல இருக்கிற எந்த புள்ளையையும் விடல. ஆளு, கருகருன்னு ஆறடி உயரம். கோழிக்குஞ்சு மாதிரி இருக்கிற புள்ளைங்க எல்லாம் கருப்பணசாமி மாதிரின்னு நெனைச்சிக்கிட்டு பயந்து ஓடுனாங்களே தவிர காதல் கருமம் எல்லாம் வரல. எல்லாம் மூஞ்சி ராசி.

செக்ஸ் படம் பார்க்க போன சாக்குல, ’ஏ’ மூர்த்தி, பக்கத்து தொண்டுப்பட்டில சாணியள்ளுன பவிதாவ உஷார் பண்ணிட்டான். காலேஜ் போகும்போது, எங்கங்க தொட்டான், சேட்டை பண்ணான்னு சொல்லி எங்கள அடிக்கடி பாத்ரூம் போக வெச்சான். ஆனா கிளைமேக்ஸ் மட்டும் நடக்கல. டக்குன்னு சொந்தத்துல மாமன் வந்ததும் கல்யாணப் பத்திரிகை கொடுத்துட்டா. மூர்த்திக்கு கல்யாணம் அப்படிங்கிறதுல பெரிய நம்பிக்கையில்லை. ஏன்னா அந்தப்பொண்ணு அவங்க சாதிதான். ஆனா, காசு பணம் வேலையைக் காட்டிருச்சு.

லவ்வாவது மசிறாவது, அவ குமாரு, தண்டபானின்னு எவன் தேன் மிட்டாய் வாங்கிக் கொடுத்தாக்கூட பல்லக் காட்டுவா. நமக்கு இப்பவே ரிகர்சல் ஒண்ணு பாத்துட்டா ஃப்யூச்சர்ல யூசா இருக்கும்னு நெனச்சேன். மிஸ் ஆயிருச்சு. வுடு எங்க சொந்தக்காரப்பொண்ணு வனிதா இருக்கறா. மாமா, மாமான்னு காலச்சுத்திக்கிட்டு வருவா. பாத்துக்குவோம்னு அப்பவும் கெத்து உடாம பேசுனான். மூர்த்தியோட விட்டுக்கொடுக்காத நம்பிக்கை ஆசம் இல்லியா.

அந்த வருஷம் கொஞ்சம் சோகமான வருஷம். மாரியம்மன் மாதிரி பெரிய கண்ணு வெச்சிருந்த பொண்ணு சூர்யாவுக்கு, காலேஜ் பஸ்சுல கூட வந்த ஏழுமலையோடு பத்திக்கிச்சு. ஸோ, பத்திரிகை அடிச்சு கல்யாணம் பண்ணி ஓரே வாரத்துல சூர்யாவை படிப்பை விட்டு நிறுத்திட்டான்.
காலேஜ்ல கேட்டதுக்கு அவளுக்கு விருப்பம் இல்லைங்கிறாங்க சார், நான் என்ன பண்ணட்டும் அப்படின்னுட்டான். முத்துப்பாண்டி, பக்கிரிசாமி சாருக்கெல்லாம் வருத்தம். நல்லாப் படிக்கிற புள்ளைன்னு புலம்பிக்கிட்டு இருந்தாங்க. பழனிச்சாமி, மாரியப்பன், சிவசண்முகத்துக்கு வேறு வகை துயரம். பஸ்சுல சுமாரான பிகரே அது ஒண்ணுதான். அதுவும் போச்சேன்னு பொக்குன்னு மூஞ்சிய வெச்சுக்கிட்டு உக்காந்து இருந்தாங்க. என்னதான் இருந்தாலும் ஆண்டவன் போட்ட ப்ளூ பிரிண்டுதான ப்ரோ  நம்ம லைஃப், நாம எப்படி மாத்த முடியும் சொல்லுங்க?



pinterest

4

அடுத்த இரண்டாவது மாசம், இங்லிலீஸ்ல அரியராக வெச்சு சாதனை பண்ணிய பச்சையம்மாள் சுமங்கலி ஆனாள். கல்யாணத்துக்கு  கூட்டமாக பசங்க கல்யாணத்துக்குப் போய் கிஃப்ட் எல்லாம் வாங்கி கொடுத்து முக்கியமாக போட்டோ எடுத்துக்கிட்டோம். பெரிய ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கிடையாது.

உன்னோட கவிதையெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்னு பச்சை ஒருமுறை சொல்லியிருக்கிறா. இவ உருவத்தை எப்படிச்சொல்றது? சீமெண்ணெய் பேரல் மாதிரி உடம்பு;  கழுத்து, இடும்புன்னு எந்த வித்தியாசமுமில்லா மண்புழு மாதிரி உடம்பு. அவங்க அப்பா, முரட்டு தங்கச்சங்கிலி போட்டுக்கிட்டு லேபில செஞ்சா மிருகம் மாதிரி ஷேப்பில் வயிறு தள்ளியிருந்தார். கோடாரி மீசையை அவர் சம்சாரம் எப்படி சகிச்சிக்கிறாரோ என நினைத்தேன். சட்டென சிரிப்பு வந்தது.

சரி , இலக்கியத்திற்காக பாடுபடுவது தமிழர்களுடைய கடமை. நானும் நாலைஞ்சு பெண்களை அப்சைடு டவுன் கவனித்து கவிதை எழுத முயற்சித்தேன். இதோ கவிதைகள்.

நீ காதலித்திருக்கிறாயா?
என்று என்னை எவரும்
கேட்டுவிடக் கூடாதென்றே
உன்னைக் காதலிக்கத்
தொடங்கிவிட்டேன் நான்....

.....

சுயமாய் பிணமாகும் வரம்
கிடைத்தது நீ பேசாதபோது....


நான் மணிக்காக
யாரிடம் பேசினாலும் ஒரு நொடி கூட
உன்னிடம் பேசும் சுகம் கிடைப்பதில்லையே ஏன்?


சத்தியமாய் நிலவைப் போல நீ இல்லை;
உன்னைப் போல்தான்
அந்த நிலவு இருக்கிறது.


சப்தம் உன்
கொலுசில்..
சலனம் என் மனசில்.

காலங்காலமாய் என்
உயிரின் கரைதொட்டு
உன் ஞாபக நதிகள்
ஓடிக்கொண்டேதான்
இருக்கும்.....

வழக்கமாக நான் பக்கம் பக்கமாகத்தான் கவிதை எழுதுவேன். ஆனால் இது ஒரு புது முயற்சி. முயற்சித்திருக்கிறேன். படித்து காயம்படுங்கள். அதாவது, காதல் நினைவுகளால். ஓகே. வீடு தேடி கல் வீசக்கூடாது. என் குருநாதர் தபூசங்கர்தான். பாதி அங்க, பாதி இங்கன்னு புடுச்சு காதல் குழம்பை ரெடி பண்ணினேன்.

(காதல் பேசுவேன்)